எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 17 பிப்ரவரி, 2021

சண்டே ஹோ யா மண்டே..

சண்டே ஹோ யா மண்டே..

மேரி ஜான் மேரி ஜான் என்றொரு பாட்டு கேட்டிருப்பீங்க. அதுல ’சண்டே ஹோ யா மண்டே ரோஜ் காவோ அண்டே’ என்று பாடுவாங்க. அப்பிடின்னா. ’எல்லா நாளுமே முட்டை சாப்பிடுங்க’ என்று முட்டைக்கான விளம்பரப் பாட்டு அது. பேலியோ டயட்ல கூட ஒவ்வொரு வேளையும் ரெண்டு அவிச்ச முட்டை சாப்பிட சொல்றாங்க. காய்கறிகளோட..

முட்டை அசைவமா சைவமான்னு சர்ச்சைக்குள்ள நான் போக விரும்பல. அது வேற டிபார்ட்மெண்ட். நாம் இப்ப ஒன்லி நியூட்ரீஷனல் & ஹெல்த் டிபார்ட்மெண்ட் பத்திப் பேசுவோம்.

வயசானா பால் & முட்டை ஓரளவு எடுத்துக்கணும். எலும்புகளில் கால்ஷியம் சத்து குறைஞ்சிட்டே வர்றதால காஃபியையே நாலு வேளை மண்டாம ( இல்லாட்டி டீயை மண்டாம-- என்னச் சொன்னேன் :)  ) ஒரு நேரம்.. அதாவது டிஃபன் சாப்பிட்ட பின்னாடி பால் & இரவு சாப்பிட்ட பின்னாடி பால் எடுத்துக்கலாம். ( அது ஏ1 ஆ இல்ல ஏ2 வாங்கிற சர்ச்சைக்கும் நாம் போக வேண்டாம். பசுமாட்டுப் பால் நல்லது :)

அப்புறம் அசைவம் சாப்பிடுறவங்க வாரம் மூணு முறையாச்சும் அவிச்ச முட்டை எடுத்துக்குங்க. அது வாய்வு பிடிக்கும்னா பூண்டு போட்டு தாளிச்ச முட்டைப் பொரியல் இல்லாட்டி மிளகு வெங்காயம் போட்ட ஆம்லெட் இல்லாட்டி வெஜிடபிள் ஆம்லெட்டா சாப்பிடலாம்.

வயதாவதால் கால்ஷியம் குறைபாடால எலும்பு தேய்வது, குட்டையாக தோற்றம் தருவது இதை எல்லாம் இது தவிர்க்கும். மேலும் கண்பார்வைக்கும் நல்லது. சரிவிகித ப்ரோட்டீன் இருக்கு.  சிறுவர்களுக்கும் பெண்களுக்கும் கூட இன்றியமையாதது.

வாங்க பட்டையக் கிளப்புவோம் முட்டைப் பிரியர்களே.

இது #அவிச்ச முட்டை . மிளகு உப்பு போட்டு பிரட்டி இருக்கு. ( ஹார்லிக்ஸ்  விளம்பரம் மாதிரி அப்பிடியே சாப்பிடலாம் :)
 
முட்டையை அடிச்சு பொடியா அரிஞ்ச வெங்காயம் பச்சைமிளகாய், உப்பு மிளகுத்தூள் போட்டு வேகவைச்சு வெட்டி குழம்புல போட்டுருக்கு. இதுக்குப் பேரு #கேக் முட்டைக் குழம்பு.
#முட்டை தக்காளி புர்ஜி.
#முட்டைத் தோசை.
#முட்டை ஆம்லெட்.
#முட்டை குருமா பரோட்டா.
#அவிச்ச முட்டை காரக்குழம்பு
#முட்டைக்குழம்பு ( தேங்காய் அரைச்சு விட்டது )
#முட்டை புளிக்குழம்பு
#முட்டை பஜ்ஜி.
அதேதான். #எக் ஃப்ரிட்டர்ஸ்.
#முட்டை வெஜிடபிள் ஆம்லெட்.
#முட்டை பூண்டு மசாலா. சப்பாத்திக்கு நல்ல பக்கவாத்தியம்.

அவசரக்கார மனுஷங்கள அரைவேக்காடுன்னு திட்டுவாங்க. ஆனால் முட்டையில் அரைவேக்காடு என்னும் ஹாஃபாயில் ரொம்ப ருசியாயிருக்கும்.

 
இன்னும் முட்டை ஆம்லெட், ஹாஃப் பாயில், முட்டை பொரியல், எக் ஃப்ரைட் ரைஸ், ட்ரெயின் முட்டைக் குழம்பு, முட்டை கட்லெட், சில்லி எக், எக் மஞ்சூரியன் இதெல்லாம் என்னோட ஸ்பெஷல் ரெசிப்பீஸ். டைம் கிடைக்கும்போது எடுத்துப் போடுறேன்.

இன்னிக்கு சண்டேயாச்சே. ஒரு முட்டை திருவிழாவே கொண்டாடிடுங்க. :)

1 கருத்து:

  1. G.M Balasubramaniam6 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 4:20

    நான் முட்டை சாப்பிடுவது இல்லை வெஜிடேரியன் அல்ல என்பதால் அல்ல பிடிக்கவில்லை அவ்வளவே
    பதிலளிநீக்கு
    Thulasidharan V Thillaiakathu7 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 1:44

    துளசி: அட!! முட்டை ரெசிப்பிஸ்!! சூப்பர்!! வீட்டில் எண்ணெயில் பொரிப்பதைத் தவிர மீதமெல்லாம் செய்வதுண்டு....வேக வைப்பதுதான் நிறைய செய்வார்கள் பிற ரெசிப்பிக்களை விட
    கீதா: எனக்கெல்லாம் படீட்சையில் முட்டை வாங்கித்தான் பழக்கம்ங்கோவ்!! ஹிஹி பழக்கமில்லை!! ஆனால் நாங்க முட்டை ஆம்லெட் போல வெஜ் எல்லாம் போட்டு கடலைமாவுல செய்வோம்ல ஹிஹிஹி
    பதிலளிநீக்கு
    வெங்கட் நாகராஜ்12 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 2:45

    நேற்று முட்டை ஹல்வா என ஒரு உணவு பார்த்தேன் - உத்திரப் பிரதேச ஸ்பெஷல்! அது நினைவுக்கு வந்தது!
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:47

    ரொம்ப சரி பாலா சார்

    சூப்பர் துளசி சகோ

    ஹாஹா கீத்ஸ். :)

    ஆம் முட்டையில் அல்வா புட்டிங் கஸ்டர்ட் எல்லாம் கூட செய்வாங்க வெங்கட் சகோ.
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:47

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...