எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 பிப்ரவரி, 2021

சுடச் சுட டிஃபன்.

சுடச் சுட டிஃபன்.

காலை உணவு என்பது இன்றியமையாதது. ஒரு துண்டு ரொட்டியாவது சாப்பிட்ட வேண்டும். பலமணி நேரம் காலியாகக் கிடக்கும் வயிற்றுக்கு சரிவிகித உணவு கொடுத்தால்தான் மயக்கம், உடல் சோர்வு, நாளடைவில் தோன்றும் பல்வேறு வியாதிகளில் இருந்து தப்பிக்கலாம்.

மூளை & கண்ணுக்கு அதிகம் வேலை கொடுப்பவர்கள் கார்போஹைட்ரேட் ஓரளவு எடுத்துக்கணும். ஏன்னா கார்போஹைட்ரேட் உணவுகள்தான் போதுமான இயங்கு சக்தியை கொடுக்குது. அட்லீஸ்ட் ரெண்டு இட்லியாவது எடுத்துக்கணும்.

ஒரு ஜான் வயித்துக்குத்தானே உழைக்கிறோம். அதை அலட்சியப்படுத்திட்டு அப்புறம் அதிகப்படி அமிலம் சுரந்து அல்சர், வாய்ப்புண், சீரற்ற இரத்த அழுத்தம் உடல் எடை குறைவு , பலகீனம் தாக்காம தப்பிக்கலாம்.

பேலியோ போன்றவற்றில் அதிக புரதம் எடுத்துக்குறாங்க. ஒவ்வொருவர் உடல் நிலைக்கும் தக்கவாறு மருத்துவர் ஆலோசனையின் படி அதையும் பின்பற்றுவது நலம்.

இயற்கை உணவுகளோ, சமைத்த உணவுகளோ காலை ஆகாரம் என்பது ரொம்ப முக்கியமான ஒன்று.  எனவே என்னுடைய உணவுப் புகைப்படங்களை இத்துடன் பகிர்ந்துள்ளேன். இதைப்பார்த்துப் பசியெடுத்து ஒழுங்கா சாப்பிட்டீங்கன்னா நலம்.. நலமறிய ஆவல். :)

ஏதோ ஒரு ஹோட்டலில் தங்கி இருந்தபோது ஆர்டர் செய்த காலை உணவு ( இருவருக்கு :) ( அநேகமா கோவை ஆர்வி யாக இருக்கும். ) சப்பாத்தி & மசால் தோசை.
அவிநாசி ரோட்டில் இருக்கும் சரவணபவனில் மல்லி சேவை.
அங்கேயே இனிப்பு குழிப்பணியாரம்.
வீட்டில் ட்ரை ஜாமூன், கவுனிஅரிசி, வெள்ளைப்பணியாரம்.

சேமியா உப்புமா. அவசர ப்ரிபரேஷன். அதான் உளுந்து சரியா சிவக்கல. :)


எப்பவாவது ஒரு தரம் ஓட்ஸும் சாப்பிடுவதுண்டு. க்வாக்கர் ஓட்ஸ் - இதிலேயே மேப்பிள் & ப்ரவுன் சுகர் ( வெல்லம் ) கலந்திருக்கு. தண்ணீர்ல கொட்டி கொதிக்க வைச்சா போதும்.
தேங்காய்ப்பால் கஞ்சி. வாய்ப்புண், குடல் புண்ணை ஆற்றும். பச்சரிசி, வெந்தயம், பூண்டு போட்டு தேங்காய்ப்பாலிலேயே வேகவிடவேண்டும். கூடவே கொஞ்சம் புதிதாய்ப் பறித்த பேரீச்சை ( FRESH PICKED DATES ), அக்ரூட் & பச்சை திராட்சை.
சரவணபவன் சாம்பார் வடை.
வீட்டில் செய்த வடை வித் மிளகாய் துவையல்.
வெஜ் ஸ்பைரல்/ஸ்ப்ரிங்க் பாஸ்தா. குச்சியாக நறுக்கிய பீன்ஸ், வெங்காயம், குடைமிளகாய், காரட், போட்டு வெந்த பாஸ்தா, தக்காளி கெட்சப், மிளகுத்தூள், சில துளி லெமன் ஜூஸ் ( வினிகருக்குப் பதிலா ) பிழிஞ்சு கலக்கணும்.
வெஜ் ஸ்பாகெட்டி. /செமோலினா. இதுல அடிஷனலா முட்டைக்கோஸ்  சேர்த்திருக்கு. சோயா சாஸும் தெளிக்கலாம்.

ஒரு திருமண வீட்டில் காலை விருந்து. தொட்டுக்க வைக்குமுன்னே எடுத்தது.
விஜிகே சார் தனது ப்லாகில் சொல்லி இருக்கும் முறைப்படி தேங்காய் வெங்காயம் இல்லாமல் அடை.  ட்ரையல் பண்ணேன். அதான் குட்டியா சுட்டிருக்கேன். :)  ஆனா நல்லா இருந்தது. !!!
இட்லி தோசை இல்லாம காலை டிஃபனா.. :)
டென்சிங் எட்டிய சிகரம் போல இருக்கும் நெய் தோசைதான் என் ஃபேவரைட்.

எப்பவும் டிஃபன் முடிஞ்சு காஃபிதான். ஆனால் ஒரு பயணப் போதில் ரோட்டோர ஆவின் கடையில் ( வேறு வழியில்லாமல் ) டீ :)
சரி சரி எல்லாரும் போய் டிஃபன் சாப்பிட்டுட்டு வாங்க. இந்த நாள் இனிய நாளாகட்டும். :) 

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 6:29

    காலைல கலர்கலரா படம் போட்டு நாக்குல ஊற்றைத் தோற்றுவிக்கறீங்க... இந்தக் கால பசங்க டயட்ங்கற பேர்ல காலை உணவை முற்றிலும் தவிர்த்து விடுகிறார்கள்.. சொன்னாலும் கேட்பதில்லை!
    பதிலளிநீக்கு
    திண்டுக்கல் தனபாலன்13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:23

    ஸ்ஸ்ஸ்... முடியலே....@!!!
    பதிலளிநீக்கு
    Thulasidharan V Thillaiakathu13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 9:26

    ஸ்பா பாப்பா...இப்படி நாக்குல தண்ணி வர வைச்சா...நாங்க ஸாப்பாடு மிஸ் பண்ற பழக்கமா.ஹ்ஹஹஹ்ஹ்ஹ்
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:44

    சரி டிஃபன் சாப்பிட்டாச்சா ஸ்ரீராம் & டிடி சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan13 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 10:51

    துளசி சகோ அதான் சரி. ஸ்கிப் பண்ணாம சாப்பிடணும் :) அதுக்குத்தான் இந்தப் போஸ்டே :)
    பதிலளிநீக்கு
    G.M Balasubramaniam13 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 3:42

    பேலியோ பேலியோ என்று அடிக்கடி பதிவுகளில் பார்க்கிறேன் அப்படி என்றால் என்ன
    பதிலளிநீக்கு
    magiceye14 பிப்ரவரி, 2017 ’அன்று’ முற்பகல் 7:26

    Mouth watering post!
    பதிலளிநீக்கு
    Manoj14 பிப்ரவரி, 2017 ’அன்று’ பிற்பகல் 4:57

    Wow ! You make me hungry. Because masala dosa and milk porridge are my favorites. I like to have them now.
    பதிலளிநீக்கு
    Thenammai Lakshmanan3 மார்ச், 2017 ’அன்று’ பிற்பகல் 10:45

    பேலியோவுக்கென்று முகநூல் பக்கத்தில் நல்வாழ்வு ஆரோக்கியம் என்று ஒரு க்ரூப் இருக்கு பாலா சார் பாருங்க.

    நன்றி மாஜிக் ஐ

    நன்றி மனோஜ்.

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...