கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)
கோயம்புத்தூருக்குச் செல்வோர் ரொம்ப சௌகரியமாகத் தங்க ஓரிடம் வேண்டுமென்றால் காந்திபுரம் பஸ் ஸ்டாண்ட் எதிரில் இருக்கும் ஆர்வியில் தாராளமாகத் தங்கலாம்.
மிகப் பிரம்மாண்டமான முன்புறம் & படிகள், மிக எடுப்பான வரவேற்பரை. மிகச் சுத்தமான அறைகள் , நடைபாதைகள் , லிஃப்ட், சமையல் கூடம், சலவையகம், துப்புரவான கழிவறை, குழியலறை, வசதியான படுக்கைகள், அலமாரிகள், வெண்டிலேஷன், மிகப் பெரும் ஜன்னல் திரைச்சீலைகளுடன். டிவி, ஏசி என அசத்தல்தான்.
காலையிலும் மாலையிலும் திரையைத் தள்ளி விட்டு ஜன்னலோரம் அமர்ந்து மேற்குத் தொடர்ச்சி மலைகளைப் பார்த்தபடி காஃபி அருந்துவது மிகப் பிடித்தமான ஒன்று. காலையில் பேப்பர் வரும். காம்ப்ளிமெண்ட்ரி ப்ரேக்ஃபாஸ்டுக்கான ஸ்லிப்பும் வரும்.
அங்கே ஒரு மூன்று நாட்களாவது தங்குவோம். அதில் ஒரு நாள் மருதமலை சென்று வருவோம் கட்டாயம். லிஃப்டின் வாசல் மிக அழகா இருக்கும். பஃபே ஹாலுக்கு முன் ஒரு மீன் தொட்டி வாஸ்துப்படி அழகூட்டும். பஃபே ஹாலிலும் ஓவியங்கள் மனதை மென்மையாக்கும்.
தினசரி அறைகளும் கழிவறைகளும் துப்புரவு செய்யப்படும் ஓட்டல்களில் ஆர்வியும் ஒன்று. ஒரு டீம் ஆட்களுடன் மேனேஜரும் உடன் வருவார்.
திரைச்சீலைகள் டேபிளை ஒருவர் துடைத்து சோப்பு ஷாம்பு எண்ணெய், சீப்பு, பேஸ்ட், டவல்கள், புதுப் போர்வைகள்,தண்ணீர் வைக்க., இன்னொரு செட் பெட் ஷீட்டுகளை மாற்றுவார்கள். இன்னொரு செட் கழிவறை க்ளீனிங். பத்து நிமிஷத்தில் வாசனையாக ரூமைத் துடைத்துப் பளப்பளா ஆக்கிவிட்டுப் போய்விடுவார்கள்.
அங்கே இண்டர்நெட் ஃப்ரீ. லொகேஷன் CAG PRIDE என்று வரும். எலக்ட்ரானிக் லாக்கிங். கார்டு கொண்டு லாக் செய்யணும். சலவையத்தில் துணிகளைப் போடலாம். சலூனும் இருக்கு.
கீழே பெண்களுக்கான ப்யூட்டி பார்லர் , புக் ஸ்டால், கான்ஃபரன்ஸ் ஹால், பஃபே ஹால், ஏடிஎம், டிக்கெட் புக்கிங்க், கார் பார்க்கிங், கால் டாக்ஸி புக்கிங், வெஜ் நான்வெஜ் ரெஸ்டாரெண்ட், பார், ஃபோன் வசதி, கான்ஃபரன்ஸ் ஹால், மற்றும் அறைகளில் டிவி, ஏசி, ஹாட் வாட்டர் , இண்டர்காம் ஆகியன உண்டு.
முக்கியமான விஷயம் காம்ப்ளிமெண்ட்ரி ஃப்ரேக்ஃபாஸ்ட் உண்டு.ஆனால் அலுவலகம் செல்வோர் அதிகம் தங்குவதால் சீக்கிரம் உணவு வகைகள் காலியாகும். ஒன்பதரைக்கு முன்னால் சென்றால் எல்லாம் ஓரளவு இருக்கும்.
அநேக ஓட்டல்கள் போல முதலில் இட்லி, மூன்றுவகை சட்னிகள், சாம்பார், வடை, கோதுமை ரவை அல்லது வெள்ளை ரவை உப்புமா, பொங்கல், தோசை, முட்டை ஆம்லெட், ப்ரெட், பட்டர், ஜாம், அவித்த முட்டை, கார்ன் ஃப்ளேக்ஸ், பால், சாஸ், ஜூஸ், நறுக்கிய பழவகைகள் ( தர்ப்பூசணி, பப்பாளி, கொய்யா.. ) காஃபி, டீ என இருக்கும்.
இதில் உப்புமா & பொங்கல் ரொம்ப சூப்பராக இருக்கும். லேட்டாகப் போனால் இதில் சிலது தீரும் ஸ்டேஜில் இருக்கும். டென்ஷனாகும். எனவே சாப்பிட வேண்டியே சீக்கிரம் எழுந்து குளித்து ஓடணும்.
அங்கே ஒருவர் தங்க ஸ்டாண்டர்ட் ரூமுக்கு முன்னே 1350. ( இத்தனை வருடம் கழித்து இப்ப 1650 ஆம் ) அடிஷனலா ஒவ்வொருவருக்கும் 300 ரூ. அதிகம் மூவர் தங்கலாம். மூன்று நாள் தங்கினால் ரூம் வாடகை மட்டும் 6000 ரூ வரும்.
மதியம் உணவு காஃபி, இரவு உணவு எல்லாமே அசத்தல். மதியம் ஃபுல் மீல்ஸ், காஃபி இரண்டு வாங்கினால் மூவர் அருந்தலாம். இரவு விதம் விதமான உணவுகள்.
காஃபி & டீ.
ஃப்ரெஷ் லெமனேட் (ஜூஸ் ) ரொம்பவே டேஸ்டி. :)
ஒரு தரம் அவரசமான கிச்சன் பக்கம் இருக்கும் லிஃப்டில் ஏறி வந்தோம். யதேச்சையாகக் கிச்சனைப் பார்த்தால் படு சுத்தமாக இயங்கிக் கொண்டிருந்தார்கள். அதைப் பார்த்ததும் சாப்பாடு ரொம்பப் பிடித்து விட்டது.
இரவு உணவாக நார்த் இந்தியன் ஐட்டங்களை ப்ரமாதமாகச் செய்வார்கள். ஆனியன் ஊத்தப்பத்தோடு பட்டர் நானும் ஸ்டஃப்ட் குல்சாவும் அருமை. அதுக்கு பட்டர் பனீர் க்ரேவியும் காலிஃப்ளவர் மஞ்சூரியனும், கடாய் வெஜிடபிளும் செம பக்க வாத்தியம்.
எல்லாமே சூப்பர்தான். பல முறை தங்கி இருக்கோம். குறையே இல்லையான்னு கேக்குறீங்களா. இருக்கு ஒரே ஒரு குறை. பழைய தியேட்டர்களில் குஷன் வாடை அடிப்பது போல சென்ற முறை சென்றிருந்த போது தலையணைகளில் ஒரே சிக்கு நாற்றம்.
பொதுவா கும்பகோணத்தில் இந்த மாதிரி தியேட்டர்களை அப்படியே வெய்யில்ல ஓபன் செய்து நாலு நாள் காயப்போடணும்னு நினைப்பேன். இங்கே என்ன தோன்றியது என்றால் அந்தப் படுக்கைகளையும் தலையணையையும் மாதம் ஒரு முறையாவது அந்த ஹோட்டலின் மொட்டை மாடியில் ஒரு நாள் பூரா காயவைத்து எடுத்து வைக்கணும் என்று சொல்லத் தோன்றியது. அவ்வளவே.
கட்டாயமா ஐந்து ஸ்டார் கொடுக்கலாம். இந்த விஷயத்துக்காக நாலா முக்கால் கொடுக்கிறேன். ஆனால் ஐந்தாகத்தான் இதில் பதிவு செய்ய முடியும். ஏன்னா வி லவ் யூ ஆர்வீ ஹோட்டல். :) WE LOVE AARVEE HOTEL. - A LOVELY PLACE TO RELAX.
டிஸ்கி :-
இவற்றையும் பாருங்க.
1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.
2.மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..
3. பாரடைஸ் ரெஸார்ட்.
4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி)
5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.
6. கேரளா சோழா & ஹைலாண்ட்.
7.கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-
8. பார்பக்யூ நேஷன்
9. மை ப்ளேஸ்.
10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-
11. பிகேஆரும் இண்டர்காமும். :-
12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.
13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.
14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS)

வெங்கட் நாகராஜ்13 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 6:49
பதிலளிநீக்குநல்ல பகிர்வு. பல தங்குமிடங்களில் படுக்கை ஒரு பிரச்சனை தான்.
பதிலளிநீக்கு
'பரிவை' சே.குமார்13 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 3:37
படங்களோட பகிர்வு அருமை...
பதிலளிநீக்கு
பெயரில்லா13 செப்டம்பர், 2016 ’அன்று’ பிற்பகல் 4:24
Seems ads to that hotel?
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:04
ஆம். நன்றி வெங்கட் சகோ
நன்றி குமார் சகோ
ப்ளஸ் மைனஸ் குறிப்பிட்டு இருக்கேனே பெயரில்லா . சிக்குப் பிடித்த தலையணைன்னு.. ???
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan21 செப்டம்பர், 2016 ’அன்று’ முற்பகல் 12:04
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!