எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மார்ச், 2021

கீரை உணவுகள் - 1.

 கீரை உணவுகள் - 1.

கீரை உணவுகள் நம் செரிமானத்தை சீராக்குகின்றன. விட்டமின் மினரல்ஸ் போக இரும்புச்சத்தும் கிடைக்கிறது. கீரைகள் உண்பதால் முடி நன்கு வளரும்.  கண்பார்வை தெளிவாகும்.  நார்ச்சத்து என்பது நம் குடலுக்குத் தேவை. 

இங்கே சில கீரை உணவுகளைப் பகிர்ந்துள்ளேன். 

கருவேப்பிலை கொத்துமல்லி தேங்காய்த்துவையல். கடுகு உளுந்து பச்சைமிளகாய் தாளித்து உப்பு, புளி, வெங்காயம், கருவேப்பிலை, கொத்துமல்லியைத் தேங்காயோடு வைத்து வதக்கி அரைக்க வேண்டும். 

தூதுவளை ரசம். எப்போதும் வைக்கும் ரசத்தைத் தாளிக்கும்போது தூதுவளைக் கீரையைத் தட்டிப் போட வேண்டும். சள்ளைக்கடுப்பு, சளிக்கு ஏற்றது


வல்லாரை சூப். தக்காளி வெங்காயம் ஒருபச்சை மிளகாய் வல்லாரையை வதக்கி பருப்புப் தண்ணீர் ஊற்றி பட்டை இலை பூ சோம்பு தாளித்து மிளகு உப்பு சேர்த்துக்குடித்தால் ஞாபக சக்தி அதிகரிக்கும். 

வெற்றிலை ரசம். ரசம் கொதிக்கும் போது தட்டிப் போட்டு இறக்கவும். இதுவும் சளியைப் போக்கும். 


முளக்கீரை மசியல். பாசிப்பருப்பு வெங்காயம் கீரை, சீரகம் பூண்டு போட்டு வேகவைத்து உப்புப் போட்டு மசிக்கவும். குடல்புண்ணைக் குணமாக்கும். 


புதினாத்துவையல் . புதினா வெங்காயம் தக்காளி வரமிளகாய் உப்பு சேர்த்து அரைத்துக் கடுகு உளுந்து தாளிக்கவும். பசியைத் தூண்டும். 


பிரண்டைத்துவையல். தேங்காய்த்துவையலில் பிரண்டையைத் தோலுரித்து நன்கு வதக்கிச் சேர்த்து அரைக்கவும். இதுவும் பசியைத் தூண்டும். 


பசலைக்கீரை மசியல். இதுவும் முளைக்கீரை மசியல் போலத்தான். குடல்புண்ணை ஆற்றும். 


கருவேப்பிலைக் குழம்பு. கருவேப்பிலை சோம்ப் சீரகம் சாம்பார் பொடி மல்லிப்பொடி போட்டு அரைத்து உப்புப் புளியைச் சேர்த்துக் கரைத்து வைக்கவும். சின்னவெங்காயம் வெள்ளைப்பூண்டை பொடியாக நறுக்கி வதக்கி கடுகு வெந்தயம் பெருங்காயம்  தாளித்து அரைத்த கலவையை ஊற்றி எண்ணெய் பிரிந்ததும் இறக்கவும். பசியைத் தூண்டும். இரும்புச் சத்து. 


மல்லி தேங்காய்த்துவையல். கொத்துமல்லியை தேங்காய் பச்சைமிளகாய், சின்ன வெங்காயம் ஒரு பூண்டுப்பல், உப்பு ஒரு சுளை புளி வைத்து அரைத்து எடுக்கவும். இது ரத்தத்தை சுத்திகரிக்கும்..

வெந்தயக் கீரை சாம்பார். வேகவைத்த துவரம்பருப்பில் வெந்தயக்கீரை சின்ன வெங்காயம் இரண்டு பச்சை மிளகாய் ஒரு தக்காளி ஒரு ஸ்பூன் சாம்பார் பொடி போட்டு வேகவைத்து ஒரு சுளை புளி கரைத்து ஊற்றிக் கடுகு சீரகம் தாளித்து இறக்கவும். இனிப்பு நீர் நோயாளிகளுக்கு ஏற்றது. 

கொத்துமல்லி புதினா துவையல். கொத்துமல்லி புதினாவை சுத்தம் செய்து வெங்காயம் பச்சைமிளகாயோடு வதக்கி உப்பு புளி சேர்த்து அரைத்து எடுக்கவும். நல்ல மலமிளக்கி. 


கருவேப்பிலை தேங்காய்த்துவையல். தேங்காயோடு கருவேப்பிலை சின்ன வெங்காயம் உப்பு புளி பச்சைமிளகாய் சேர்த்து அரைத்தெடுக்கவும். 


கருவேப்பிலை கொத்துமல்லி தேங்காய்த்துவையல். மூன்றையும் ப்ச்சைமிளகாய் வெங்காயத்தோடு வதக்கி உப்பு புளி சேர்த்து அரைத்தெடுக்கவும். இரும்புச்சத்து, பசியைத் தூண்டும். 

பாலக் மசியல். இதுவும் முளைக்கீரை மசியல் போலத்தான். குடல்புண் வாய்ப்புண்ணை ஆற்றும். 

அரைக்கீரைப் பொரியல். கடுகு உளுந்து தாளித்துப் பெரியவெங்காயம், கீரையைப் போட்டு உப்பு சேர்த்து நன்கு வெந்ததும் இறக்கவும். வாய்ப்புண் ஆற்றும். ஜீரண சக்தியைப் பெருக்கும்.

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்28 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 8:19
    பயனுள்ள குறிப்புகள்... Bookmark செய்து வைத்துள்ளேன்... நன்றி...

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்28 ஆகஸ்ட், 2020 ’அன்று’ முற்பகல் 11:03
    சுவையான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:30
    நன்றி டிடி சகோ

    நன்றி வெங்கட் சகோ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 4:31
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...