எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 20 மார்ச், 2021

தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.

தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு.

இயற்கை அழகு கொட்டிக்கிடக்கும் காரைக்குடி அரியக்குடி சாலையில் அமைந்துள்ளது தாப்பா கார்டன். ரயில்வே ட்ராக் எதிர்ப்புறம் கடந்து வரவேண்டும்.

“தாலாட்டும் காற்றே வா.. தலை சாயும் பூவே வா.. “ என்று பாடிக்கொண்டே காரில் வரலாம். :)  ஏன்னா காரைக்குடி எங்க ஊராக்கும். கொள்ளை அழகாக்கும். :)

இந்த தாப்பா கார்டனில் ஒரு நாள் மதிய உணவருந்த சென்றோம்.

மிக அமைதியான சூழலில் தண்ணென்றிருக்கிறது தாப்பா கார்டன். இங்கே தங்குவதற்கும் அலுவலக மீட்டிங் போன்றவை நடத்துவதற்கும் பல்வேறு வசதிகளும் ஹால்களும் உள்ளன என்று சொன்னார்கள். ஏசி நான் ஏசி ரூம்ஸ், பார் வசதி, கார்பார்க்கிங் ( பிரம்மாண்டமான சோலையில் இதற்கென்ன பஞ்சம்  ) அமைதி, இயற்கை எல்லாம் இருக்கிறது.

உணவகம் தனியாக இருக்கிறது. அதன் எதிரேயே ஒரு நீச்சல் குளமும் நிர்மாணிக்கப்பட்டிருக்கிறது. உணவகத்தில் அந்தக்கால ஓவியங்கள் அழகூட்டுகின்றன.
எடுத்தவுடன் விநாயகர் கோவில்.

இன் & அவுட் பாதைகள். முன்புறம் பெரிய லான். & போர்ட்டிகோ.


உணவகத்தை ஒட்டி ஒரு விளையாட்டுப் பூங்கா. பெரியவர்களும் ஊஞ்சலாடினார்கள். !
மிகப் பெரிய சுத்தமான உணவகம்.
ஓவியங்கள் பல இருந்தன. சிலவற்றை மட்டும் எடுத்தேன்.

உணவு வர நேரமாகிறது. ஸ்டார்ட்டர் டொமாடோ சூப் மட்டும் சொன்னோம். அங்கே பேச்சுக்குரல் மெல்லிதாகக் கேட்க ஸ்பூன்கள் பீங்கான் தட்டுகளில் மோதும் இசைநயம் பசியைத் தூண்டியது.
ரொம்ப எக்ஸ்பெக்டேஷனோடு காத்திருந்தோம். அட டேபிள் மேட்டில் சுடோக்கு. பசியில் எதையும் போட தோன்றவில்லை :)
வார்த்தைப் புதிரும், பஸில்ஸும் கூட இருந்தது !  நல்ல முயற்சி . !

சுட சுட சூப் வந்தது. நல்லா இருந்தது.

வெஜ் ஃப்ரைட் ரைஸ். சிக்கன் மஞ்சூரியன், ருமாலி ரொட்டி. டொமாட்டொ சாஸ். இவ்ளோதான். இதை சாப்பிட்ட பின்னாடி வேற வாங்கிக்கலாம்னு ஆர்டர் செய்யலை.

சைனீஸ் க்யூசைன் படி வெள்ளையாக செய்திருந்தார்கள். பார்த்ததுமே ரங்க்ஸுக்கு சாப்பிடும் ஆவல் போய் விட்டது. சுபலெக்ஷ்மியின் பாரில் ஒரு சிக்கன் மஞ்சூரியன் ஆர்டர் செய்து அதில் சிறிதை பார்சல் செய்து வாங்கி வருவார் ரங்ஸ் . நல்ல சிவப்பாக சிக்கன் மின்ன அதில் பச்சைக்கலரில் குடைமிளகாயும் நல்ல நறுக் கென்று ருசியுடன் பெரிய வெங்காயம் பெரிய துண்டுகளாக எண்ணெயில் முழிக்கும். அந்த ருசிக்கு ஈடு இணையில்லை. தமிழக ருசிப்படி செய்யப்பட்ட சிக்கனுக்கே ரங்க்ஸின் ஓட்டு.

எனவே வழக்கம்போல இதில் அவர் ஓரிண்டு துண்டு மட்டும் வைத்துக் கொள்ள. நான் வெஜ்ஜை எப்படிச் செய்தாலும் வெட்டும் நான் மிச்சம் வைக்காமல் ஒரு கை பார்த்தேன். ஆனாலும் ஃப்ரைட் ரைஸிலும் இதிலும் ருசிக்குறைவுதான்

ஒரு ஃப்ளேவர் இருக்கணும் சைனீஸ் உணவுகளில்.. ஸ்மோக்கிங் பண்ணப்பட்டதுபோல்.  அது மிஸ்ஸிங்.
ருமாலி ரோட்டி ஓகே.

ஃப்ரைட் ரைஸ் வெறும் உப்பு ரைஸ். இதில் லேசாக சீனி, வெள்ளை மிளகுத்தூள் , போட்டுப் புரட்டணும். மேலும் பாசுமதி அரிசியில் செய்து லேசாக தீப்பிடித்ததுபோல் ஒரு வாசனை வரணும். அப்போதுதான் ஃப்ரைட் ரைஸ் உள்ளே போய்க்கிட்டே இருக்கும்.

இது சீரக சம்பாவில் செய்தது அல்லது முளகி அரிசி.

வெளியே வரும்போதுதான் பார்த்தோம் இந்த போர்டை. பேரர் இதை எல்லாம் சொல்லவே இல்லையே.
ஸ்டாண்ட் ஜாடிகள் அழகு.

விசிறி வாழைகள்.

தங்கும் அறைகள்.

கல்லில் பொறிச்சிருக்காங்க. தாப்பா கார்டன் :)

கிருஷ்ணரை இம்சிக்க வந்த அரக்கன் சக்கர ரூபத்தில் மரத்தில் மாட்டிக்கிட்டு இருக்கானோ :)

முகப்பு. போர்ட்டிகோ

திரும்பவும் விநாயகர்.

உணவு ஆகா ஓகோவென இருக்கும் என நினைத்துப் போனோம். ஓரளவு சுமார்தான். பேசாமல் ப்ரியா மெஸ்ஸிலோ தலைப்பாகட்டியிலோ வாங்கி திருப்தியாக சாப்பிட்டு இருக்கலாமோ என்ற எண்ணம் ஏற்பட்டதைத் தவிர்க்க இயலவில்லை.

சாப்பிட்டதும் டெஸர்ட் ஏதும் ஆர்டர் செய்யவா என ரங்க்ஸ் கேட்டார். வேண்டவே வேண்டாம் என மறுத்துவிட்டேன். இருவரும் கோபமாக ஒரு மதிய உணவைச் சாப்பிட்டது அன்றுதானாக இருக்கும்.

ஆமா சொல்ல மறந்துட்டேனே பில் 600/- ரூ . இன்னும் கொஞ்சம் பராமரிப்பும் உணவுத் தயாரிப்பில் மேம்பாடும் தேவை.

டிஸ்கி :- இந்த ஹோட்டலுக்கு என்னோட ரேட்டிங். நாலு ஸ்டார். ****

டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு. 

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா.. 

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :- 

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :- 

11. பிகேஆரும் இண்டர்காமும். :- 

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும்.  

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா. 

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 





41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும். 

43.ராதா ப்ரஸாத்தின் லிஜோ ஸ்கைபூல் ரெஸ்டாரெண்டில் சில காலைகள். 


44. திருப்பூர் விநாயகாவில் ஒரு நாள்.  
  




50. குவாலியர் ஸுரபியில் சுவையான ஷாஹி பனீரும், பால் ஜலேபியும் 

51. போபால் ஜி ஷையில் செம்பு விநாயகர். BHOPAL GS G-SHY. 

52. பெல்ஸ் ரோட் ஹோட்டல் நியூ பார்க் & தி பெவிலியன். NEW PARK & THE PAVILION.

53. கோகுல் கிராண்ட் & ஷண்முகா .HOTEL GOKUL GRANDE & SHANMUGA

54. டபிள் ரோட் ஆக்டேவில் இரு நாட்கள். ( OCTAVE )

55. கானாடுகாத்தானில் ஒரு சர்வீஸ் அபார்ட்மெண்ட்.

56. கலைப்பொருட்களைக் காட்சிப்படுத்தியிருக்கும் எம் வி வி ரெஸிடென்ஸி.

57. திருவண்ணாமலை எஸ் டி டி ரெஸிடென்ஸி.

58. ஸீக்வீன் ரெஸிடென்ஸியும் டெல்மாவின் ரோகன்ஜோஷும் ஷவர்மாவும்.

59. திருக்கடையூரில் சதாபிஷேகம்.

60. திருவானைக்காவலில் டெம்பிள் இன்ன்.

61.பாண்டி எம் ஜி ஆர் ரீஜன்ஸியில் அழகோவியங்கள்.

62. திருத்தணி அருள்முருகன் ரெஸிடென்ஸி.

63. சரவணபவனில் ஒரு சூப்பர் டின்னர்.

64. தாப்பா கார்டனில் ஒரு மதிய உணவு

1 கருத்து:

  1. Thenammai Lakshmanan18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 1:20
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam18 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 4:40
    இருந்தும் உணவகத்துக்கு நான்கு ஸ்டாரா உங்களல் குறைத்து மதிப்பிட முடியாமை தெரிகிறது நல்ல சூழலில் உணவின் சுவை மறந்துவிட்டிருக்கும்

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu25 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 6:57
    இடம் படங்கள் அழகா இருக்கு வீடு போல இருக்கு...சூழல் செமையா இருக்கு...ஆம்பியன்ஸ் எல்லாம் ஃபைன்...

    ஆனா ஃப்ரைட் ரைஸ் ஃப்ரைட் ரைஸ் போல இல்லையே...இது ஜீரக சம்பா போலவும் இல்லை...ஜீரக சம்பா பொடிப்பொடியா மணி போல இருக்கும்..யெஸ் சீனி போட்டு அப்புறம் ஸ்மாக்கிங்க் ஃப்ளேவர்!!...

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan30 ஜூலை, 2018 ’அன்று’ பிற்பகல் 7:06
    இருக்கலாம் பாலா சார். :)

    ஆமா கீத்ஸ் :(

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...