எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 மார்ச், 2021

ஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலருகில் சுடச்சுட இட்லியும்

ஸ்ரீ வெங்கட்ரமணா ரெசிடென்சியும் சாரங்கபாணி கோயிலருகில் சுடச்சுட இட்லியும

கும்பகோணம்வாசிகள் கொடுத்து வைத்தவர்கள். ஊர்தான் நாற்றம் பிடித்த ஊர்.  ( ஆசிலேட்டிங் பாப்புலேஷன் அதிகம் என்பதால் இருக்கலாம். ) ஆனால் உணவுவகைகளோ அட்டகாசம். காசுக்கேத்த பலகாரங்கள்.கிடைக்கும். அங்கே ரயில்வே ஸ்டேஷனில் கிடைக்கும் அருமையான பில்டர் காபியில் உற்சாகமான நாள் ஆரம்பிக்கும்.

எல்லா ஹோட்டல்களிலும் இட்லி  சாம்பார் நல்லா இருக்கும். ஆனா எக்ஸ்பெஷலி சாரங்கபாணி கோயிலுக்கருகில் இட்லி சாப்பிட்டுப் பாருங்க. அசந்து போவீங்க ஆனா அதுக்கு நீங்க இரவுவரை காத்திருக்கணும். ஏன்னா ராத்திரி ஆறு மணியிலிருந்து பத்து மணிவரைதான் இட்லி கிடைக்கும். இதுபோக பட்டர் ரோஸ்ட், பொடி தோசை,மசால்தோசை, அடை , பரோட்டா என விதம் விதமான விருந்து உண்டு. சாம்பார் சட்னியுடன் மிளகாய் சட்னியும் ஸ்பெஷல். அதோடு முக்கியமான விஷயம் இட்லிப்பொடி  நல்லெண்ணெயும் உண்டு.  மறக்காம கேட்டு வாங்கி  சாப்பிடுங்க.
என்னடா வெங்கட்ரமணா பத்தி சொல்ல வந்துட்டு சாப்பாட்டுப் புராணமா இருக்கேன்னு பார்க்குறீங்களா முதல்ல சோறு முக்கியம் அமைச்சரே. :)
வெங்கட்ரமணா இருவர் தங்க ஏற்ற பட்ஜெட் ஹோட்டல். ஆயிரம் ரூபாய்தான் நாள் வாடகை .



அறையில் இருந்த தென்முகக் கடவுள். தியானம் செய்ய அருமையாக இருந்தது இப்புகைப்படம்.
லிப்ட்டின் அருகில் விநாயகர். :)
வழக்கம்போல் இருவர் தங்க வசதியான படுக்கைகள் ஆனால் தனித்தனியாக இருந்தது .!

சுத்தமான டாய்லெட் . ஹேன்ட் ஹோஸ்  இருந்தன. சில்வர் வாளி வித்யாசம் !
டிவி,ஏசி, ஹீட்டர், எல்லாமே இருந்தது. சுவரலமாரியும் சாப்பிட அமர டேபிள் சேர்களும் இருந்தன.


ரூம் சர்வீஸ் அழைத்தாலே வந்தார்கள்.  பக்கத்து ரூம் தான் சர்வெண்ட்ஸ் தங்குமிடம். தண்ணீர் கேட்டால் ஜக்கில் பிடித்துத் தந்தார்கள். அது பில்டர் வாட்டர் என்றாலும் பாட்டிலும் வாங்கிக் கொண்டோம். 
எனக்குப் பிடித்த காரிடார்.
இது ரிசப்ஷன் 
முகூர்த்த நாட்களில் மக்கள் குடும்பம் குடும்பமாகப் படையெடுத்திருந்தார்கள். ஏதோ கல்யாண மஹாலுக்குள் வந்துவிட்டோமா என்று ரூமை விட்டு வெளியே வந்தால் தோன்றியது !

அப்புறம் அந்த சாரங்கபாணி கோயிலருகில் உள்ள இட்லிக்கடைக்கு விசிட் செய்து இட்லி சூடாக  எடுக்க எடுக்க ஈடுக்கு ரெண்டு  இட்லியாக சாப்பிட்டு ( சாம்பார், தேங்காய் சட்னி, மல்லி சட்னி, மிளகாய் சட்னியுடன் எட்டு இட்லி சாப்பிட்டுட்டுச் சொல்லுங்க இந்த இட்லி போதுமா இல்ல இன்னும் வேணுமான்னு :) கடைசியா பொடி எண்ணெயுடன் இன்னும் ரெண்டு சாப்பிடலாம்னு தோணும். :)

அப்புறம் அங்கே ஒரு முறை கிடைத்த ஸ்பெஷல் நெய் போளியைத் ( விலை  பதினெட்டு ரூபாய் ) தேடிக் கிடைக்காததால முராரில ட்ரை ஜாமூன் வாங்கி சாப்பிட்டு மனசத் தேத்திக்கிட்டேன் :)

வெங்கட்ரமணாவிலும் உணவு வெகு சுவை. காபியும் கூட. ( பிளாஸ்கை வெந்நீர் விட்டுக் கழுவிட்டுத் தர சொல்லுங்க. ) !

இந்த ஹோட்டலுக்கு என் ரேட்டிங் நாலரை.  *****


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 




1 கருத்து:

  1. ஸ்ரீராம்.25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 6:48
    சுவையான குறிப்புகள்.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:45
    சாப்பிடும் இடங்களை எல்லாம் குறுத்துக் கொண்டாயிற்று ஹிஹிஹிஹி...வெங்கட்ரமணாவையும் தான்...கும்பகோணம் பஸ்டாண்ட் அருகில்தான் நம்ம நண்பர் குடந்தை ஆர் வி சரவணன் அவர்கள் சில நொடி சினெகம் குறும்படம் எடுத்தார். அவர் அரேஞ்ச் செய்திருந்த ஹோட்டல் பெயர் மறந்துவிட்டது..சாரங்கபாணி.கோயில் அருகில் என்றால் பெயர் ஏதேனும் உண்டா அந்த இட்லி கடையின் பெயர்??!!!! அந்தக் கோயில் அருகிலும் ஷீட்டிங்க் இருந்தது என்று நினைக்கிறோம்....அதான்.கேட்டோம்.

    பதிலளிநீக்கு

    விஸ்வநாத்25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 11:03
    இட்லி சாம்பார் மிளகாய்ப்பொடி காஃபி படத்தையெல்லாம் காணும் என்பது ஏமாற்றமான செய்தி

    பதிலளிநீக்கு

    G.M Balasubramaniam25 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 3:23
    ஒரு முறை வெங்கட்ரமணாவில் தங்கிய நினைவு

    பதிலளிநீக்கு

    Unknown28 ஆகஸ்ட், 2017 ’அன்று’ பிற்பகல் 2:51
    அருமை!

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan5 செப்டம்பர், 2017 ’அன்று’ பிற்பகல் 8:37
    Nandri Sriram

    Nandri Geeths. arumaiyana ninaivalaigal. illa per therilappa.

    sariya sonningka Visu. eeno edukama vanthuten.:(

    nalla hotel Bala sir

    Nandri Ramanujam sir

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...