எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 29 மார்ச், 2021

குழந்தை மாந்தமும் கறுப்புத் தங்கமும்.

குழந்தை மாந்தமும் கறுப்புத் தங்கமும்.

 இது பிடிக்கும் அது பிடிக்காதுன்னு சாப்பாட்டை ஒதுக்குபவர்கள் இதைக் கட்டாயம் படிச்சே ஆகணும். எல்லா உணவிலும் என்ன சத்து இருக்குன்னு தெரிஞ்சிக்கிட்டோம்னா அதைத் தவிர்க்காம சாப்பிடப் பழகிக்குவோம். இன்னும் கொஞ்சம் மருத்துவ உணவுகள் பற்றிப் பார்ப்போம். 

1. கருணை:- மூலநோய், மலச்சிக்கல், போக்கும். பசியைத் தூண்டும். குடலுக்கு ஆற்றல். நீரிழிவு நோயாளிகளும் சாப்பிடலாம். புளி, காரம், புலால், மது நீக்க வேண்டும். 


கருணைக்கிழங்கு இது நம் உணவில் இன்றியமையாதது. மூலத் தொந்தரவு உள்ளவர்கள் கட்டாயம் உண்ணவேண்டிய கிழங்கு இது. வேறு எந்த உடல் உபாதை உள்ளவர்களும் உண்ணலாம். நன்கு வேகவைத்து லேசாகப் புளி விட்டுச்செய்ய வேண்டும் இல்லாவிட்டால் நாக்கை அரிக்கும். குழம்பு , மசியல் போன்றவை நல்லது.

 

2.இஞ்சி.


இஞ்சி :- பித்தம் அடங்கும். பசி தூண்டும். வெப்பம் தரும். காலையில் இஞ்சி + தேன், நண்பகல் சுக்கு + மோர், இரவு கடுக்காய் + பால். 48 நாள் சாப்பிட வாந்தி மயக்கம் பித்தம் தீரும்.

ஆஸ்த்மா :- இஞ்சிச் சாறு + மாதுளைச் சாறு சம அளவு கலந்து 5 மிலி கொடுக்க ஆஸ்த்மா இரைப்பு நீங்கும். நீரிழிவு :- 50 கி இஞ்சி அரைத்து 200 மிலி பசும்பாலில் போட்டுக்காய்ச்சி 50 கிராம் கல்கண்டு போட்டு வடித்து இதில் 10 மிலி எலுமிச்சம் பழச்சாறு சேர்த்து வைக்கணும். காலை மாலை பாலில் 10 – 15 மில்லி அளவு சாப்பிட்டு வர சளி இருமல் நீரிழிவு பசி தாகம் வறட்சி அடிக்கடி சிறுநீர் போதல் குணமாகும்.

தலைவலி ஜலதோஷம் :- 10 கிராம் சுக்கை 200 மிலி பசும்பாலில் காய்ச்சி சர்க்கரை சேர்த்து அருந்த வாய்வு, வாதம், குன்மம், தலைவலி, ஜலதோஷம் குணமாகும். பசி எடுக்கும்.

வாதரோகம் :- சுக்கும் பெருங்காயமும் பாலில் அரைத்துப் போட வாத வீக்க வலி, மூட்டு வீக்கம் , தலைவலி குணமாகும்.

குழந்தை மாந்தம் :- சுக்கு, மிளகு, சீரகம், பூண்டு, ஓமம், உப்பு, வேப்பிலை, சம அளவில் சேர்த்து அரைத்து வெந்நீரில் 5 மிலி அளவாகக் கொடுக்க, செரியாமை, பொருமல், வயிற்றுவலி, வயிற்றோட்டம் சளி குணமாகும். 

இஞ்சி மண்டி, மாவடு இஞ்சி மண்டி, ஊறுகாய், இஞ்சிப் புளி, இஞ்சி முரபா, இஞ்சி பர்ஃபி ஆகியவை செய்து சாப்பிட வாந்தி மட்டுப்படும். சளியும் கட்டுப்படும். 

3. கொய்யா:- விட்டமின் சி & ஏ உடையது.


காலரா :- 1 பிடி கொய்யா இலையுடன் 1 மிளகாய் வற்றல் போட்டு மண் சட்டியில் வதக்கி 500 மிலி நீர் விட்டுக் காய்ச்சி வடித்த குடிநீரை அரைமணிக்கு ஒருதரம் 10 – 15 மிலி கொடுத்துவர வாந்தி பேதி மந்தம் வாய்வு பொருமல் நா வறட்சி அடங்கும்.

பல்வலி :- பல்வலிக்கு இதன் தளிரை மென்று கொப்பளிக்கவும். ஒரு நாளைக்கு 3 தரம் செய்யவும்.  பழம் அளவோடு சாப்பிடவும். 

கொய்யா இலைகளை மென்று கொப்பளித்தால் வாய்ப்புண்ணும் குணமாகும். கொய்யாக்காய் சாப்பிட்டால் உடல் எடை ஏறாது. கொய்யாப் பழத்தில் சப்ஜியும் செய்யலாம். 

4. முள்ளங்கி :- உள் அங்கி


 வாரம் 2 முறை இதனை உணவில் சேர்க்க வேண்டும். வெள்ளை முள்ளங்கி  முருங்கைக் கீரை போல் சிறுநீரை நன்கு இயக்கும் குணமுடையது.

வயிற்றெரிச்சல், காசநோய், தலைவலி, மயக்கம் ஆஸ்த்மா, சீதபேதி ( கடுப்பு ) கரப்பான், உடல் நரம்பு வலி குணமாகும்.

30 – 5- மிலி சாறு பிழிந்து குடிக்கவும். சாம்பார் பொரியல் ஓகே. கர்ப்பிணிகள் சாப்பிட பேறு எளிதாகும். கை கால் முகம் வீக்கம் வராது.

மஞ்சள் காமாலை மருந்தில் முள்ளங்கிச்சாறைக் குடிக்கச் சொல்கிறார்கள். டெல்லியில் குளிர்காலத்தில் இந்த முள்ளங்கியைப் பச்சையாகவே எலுமிச்சை காலா நமக் தூவி சாப்பிடுவார்கள். இது மஞ்சள் காமாலை வராமல் தடுக்குமாம். 

5. நாவல் ( ஜம்பு ) :-


சீதபேதி :- நாவல் கொட்டை + மாங்கொட்டை இரண்டையும் சம அளவு  உலர்த்திய சூரணத்தில் 5 மிலி கிராம் மோரில் சாப்பிட்டு வர 3 – 6 நாளில் சீதபேதி என்ற வயிற்றுக்கடுப்பு ஆசன எரிச்சல் குணமாகும். நீரிழிவும் குணமாகும். 

பழம் ( அளவோடு சாப்பிடவும் ) . இதயத்துக்கு மிகுந்த பலம் கொடுக்கும். இதய தசைகள் உறுதிப்படும் குருதி ஊறும். குருதி கெட்டிப்படும். 

6. நெல்லி 


கல்லீரல், மண்ணீரல், குருதி மண்டலம் ஆகியவற்றின் குறைபாடு போக்குவது. சிறுநீரைப் பெருக்குவதில் முள்ளங்கி முருங்கை போன்றது.

நாளும் ஒரு காய் பச்சையாக வெறும் வயிற்றில் சாப்பிட்டு வந்தால் 48 நாளில் உடல் ஊட்டம் பெறும். ஆயுள் அதிகமாகும். காச நோய்க்கு நல்லது. 

தேன் நெல்லிக்கனியாகவும் சாப்பிடலாம். 

7. பாகல்


 

பித்தம் தணிக்கும். பசி தூண்டும். மலமிளக்கும். பூச்சி கொல்லும். பால் பெருக்கும். நீரிழிவு போக்கும். 

மூலநோய் :- இலைச்சாறு நாளும் காலை 30 மிலி அளவு குடித்து வர 20 -40 நாளில் மூலம் குணமாகும்.

அதிகமாக சாப்பிட்டால் பித்தம் வாதம் பத்தியம் முறிக்கும். கரப்பான், புண் அதிகப்படுத்தும். சுரம், காசம், ஆஸ்த்மா, மூலம், குட்டம் குணப்படுத்தும்.

பாகற்காய் குழம்பு, பிட்ளை, சிப்ஸ், வறுவல், ( சுண்டைக்காய் சேனைக்கிழங்கு சேர்த்துப் ) பச்சடி, மசாலையாகச் செய்து சாப்பிடலாம். 

8. வெள்ளைப் பூண்டு 



புற்று நோயையு மற்ற தொற்று நோய்களையும் எதிர்க்கிறது. நெடியுடைய இதனை நசுக்கி படம் எடுத்து ஆடும் பாம்பின் முன் போட்டால் பாம்பு மயங்கும் அல்லது ஓடிவிடும். 

பூண்டைப் பாலில் போட்டுக் காய்ச்சி அருந்தி வந்தால் இரத்த அழுத்தம், ஊளைச்சதை, உடல் எடை குறையும்.

மூட்டு வலி :- பூண்டை நசுக்கிய சாற்றுடன் கற்பூரத்தைக் கரைத்துப் பூச மூட்டு வலி குணமாகும். கட்டி உடைய அரைத்துப் பற்றிட வேண்டும். அநேக சமையல் வகைகளில் பூண்டைப் பயன்படுத்துகிறோம். 

பூண்டு ஊறுகாய், பூண்டுக் குழம்பு, அசைவ உணவு வகைகள், பிரியாணி, குருமா ஆகியவற்றில் பூண்டின் பயன்பாடு அதிகம்.  பாலில் பூண்டை வேகவைத்துச் சாப்பிட்டால் ஊளைச்சதை குறையும். வாயுவைப் போக்கும். 

9. மிளகு 


விடமுறிக்கும். பாம்பு கடித்தவர்களுக்கு 10 கிராம் அரைத்து வெந்நீரில் கொடுக்கலாம். தலைவலி :- அரைத்து நெற்றியில் பற்றிட தலைவலி போகும்.

தோல் நோய் :- மிளகு 2 – 4 நாளும் காலை வெறும் வயிற்றில் மென்று சாப்பிட்டு வர 10 நாளில் அரிப்பு தடிப்பு நலமடையும். 

பத்து மிளகு இருந்தா பகைவன் வீட்டிலயும் சாப்பிடலாமாம். மிளகு சாதம், குழம்பு, மிளகுக்கறி செய்து சாப்பிட ஜீரணம் நலமாகும். இருமல் சளி குணமாகும். பாலில் மஞ்சள்தூள் மிளகு போட்டுச் சாப்பிட வரட்டு இருமல் குணமாகும். சூப் போன்றவற்றிலும் ரசத்திலும் மிளகின் பயன்பாடு அதிகம். அந்தக் காலத்தில் இதைக் கருப்புத் தங்கம் என்றும் மசாலாக்களின் ராஜான்னும்  சொல்லி இருக்காங்க. ! சூது பிடிச்ச ஆங்கிலேயர்களோட இதுக்காக போர்கள் எல்லாம் நடந்திருக்கு பழசிராஜா காலத்துல. !  

10. மாதுளை 


மூக்கில் ரத்தம். மாதுளைச் சாறும் அருகம்புல் சாறும் சம அளவில் கலந்து 30 மிலி அளவு மூன்று வேளை கொடுக்க மூக்கில் ரத்தம் வருதல், விலக்கில் அதிக ரத்தம் வருதல் தீரும்.

உணவு செரியாமையால், கீரிப் பூச்சியால் வெப்பத்தால் நைந்து போன உணவால், வைரஸ் தொற்றால் வரும் வயிற்றோட்டத்துக்கு மாதுளம் பிஞ்சை அரைத்து மோர் தயிரில் சாப்பிடவும். வயதுக்கும் நோய்க்கும் தக்கவாறு.

புழுவெட்டு :- தலை, கண் புருவம் ஆகியவற்றில் புழுவெட்டால் முடி உதிர்ந்த இடங்களில் இதன் பழச்சாற்றை 3 நாள் தேய்க்க குணமாகும். மீண்டும் முடி வளரும்.

பழம் :- தொடர்ந்து சாப்பிட நீரிழிவு காசநோய் குடல்புண் வாந்தி விக்கல் மயக்கம் தீரும்.

விதை :- தினமும் 10 கிராம் மென்று தின்று வந்தால் நீர்த்தாரை எரிச்சல் குணமாகும். ஜூஸாக ஆக்கிக் குடிக்கலாம். 

டிஸ்கி :- 

இதையும் பாருங்க.

வல்லாரை சரஸ்வதியும் வெற்றிலை வேந்தனும்.

1 கருத்து:

  1. துரை செல்வராஜூ28 செப்டம்பர், 2020 ’அன்று’ பிற்பகல் 12:29
    பயனுள்ள செய்திகள்...
    சென்ற தலைமுறை மக்களுக்கு இவற்றின் அருமை புரியும்..

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan13 அக்டோபர், 2020 ’அன்று’ முற்பகல் 12:00
    ஆம் துரை செல்வராஜு சார். உங்க பின்னூட்டத்துக்கு நன்றி

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...