எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 18 மார்ச், 2021

அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.

அழகு கொஞ்சும் ஆழப்புழா. மை க்ளிக்ஸ். AZHAPUZHA MY CLICKS.

கடவுளின் தேசத்தில் இருநாட்கள் தங்கும் வாய்ப்புக் கிடைத்தது. அது தண்ணீர் தேசம். நதிமூலம் ரிஷிமூலம் பார்க்கக்கூடாது என்பார்கள். அதுபோல் கிட்டே சென்று பார்த்தால் காமிராவின் கண்களுக்கு அழகாக இருக்கும் இடம் கொஞ்சம் கொசமுசதான்.  தண்ணீர்ப் பறவைகள், மீன்கள், பாம்புகள், தாவரங்கள். ஓரிரு நாட்கள் தங்கலாம். வெய்யில் பிச்சு எரியுது. மீன் சாப்பாடு பரவாயில்லை.

ரப்பர் மரக்காடுகள், பலாமரங்கள், நேந்திரன் வாழைகள், மிளகு, தென்னைகள் சூழ் நீர் உலகு . மலைக்காடு.  ஆனால் குளுகுளுப்பெல்லாம் இல்லை.

கொஞ்சம் வரட்சியான முதுமை கொண்ட சீரான உடையணிந்த மகளிர் அநேகம். உழைப்பாளிகள். தளதள கேரளப் பெண்கள் எல்லாம் சினிமாவில் நடிக்க சென்னை வந்துவிட்டார்கள். அமயம் சமயத்துக்கு ஒரு சாயா சாப்பிட ஒரு நாயர் கடை கூடக் கிடையாது. எல்லாரும் சினிமாவிலும் எல்லா நயா நுக்கட்களிலும் டீ ஆத்திக் கொண்டிருக்கிறார்கள்.

பக்தியில் பெருகிய தேசி கேரளவாசிகளும் பெருவாரி நகைக்கடைகளும் ( ஆற்றுக்கால், ஆலாபட், கல்யாண் ) கொண்டதாக இருக்கிறது திருவனந்தபுரம். கொய்லோன் ரொம்ப கிராமப்புறம் மாதிரி இருக்கிறது. கேரள ஆரிய வைத்திய சாலை ஒன்று கூட தட்டுப்படவே இல்லை. கொச்சி துறைமுக நகரம். ஓரளவு புழக்கமா இருக்கு. சென்னை மாதிரி 2 இரயில்வே ஸ்டேஷன் இருக்கு. சரியாகப் பார்த்துச் செல்வது உத்தமம்.

பழம்பொரியும், சக்குவரட்டியும், உண்ணியப்பமும், பழ போண்டாவும், சுக்கு, சீரக வெள்ளமும் கிடைக்கிறது. கப்பு கப்பாகப் பாயாசம் கூட ஃப்ரெண்ட்ஸ் வீட்டில் கிடைக்கும் ஆனால் சிங்கிள் கப் சாயா கிடைக்காது. ஏனெனில் அங்கே மாடு என்றாலே பாலுக்கில்லை,  கறிக்குத்தான்.

மீனுக்கும் கேரள மட்டையரிசிக்கும், கப்பைக்கிழங்குக்கும் முடையே இல்லை. மீன் வறுவல் சும்மா உங்க காரம் எங்க காரம் இல்லை. இரண்டு நாட்கள் உதட்டிலிருந்து குதம் வரை எரியும் காரம்.

மணிக்கணக்குக்கும் போட் ஹவுஸ் கிடைக்குது. பொதுவா முள் இல்லாமல்  மீன் சாப்பிட ஆசைப்படுபவர்கள் (சொல்லப்போனா வஞ்சிரம் மட்டும் தின்னும் பார்ட்டீஸ் )  இந்த ஹொகனேக்கல், கேரளா இங்கெல்லாம் சாப்பிட்டால் மீனை வெறுத்துவிடும் அபாயம் உண்டு. வீட்டில் ஒற்றை முள் கொண்ட வஞ்சிரத்தில் வாழைக்காய் போல் சாத்வீக ஃப்ரை செய்து சாப்பிடலாம்.

எல்லாப் பொருளிலும் உறையும் பரப்பிரம்மம் மாதிரி தேங்காயை எங்கெங்கும் எதிலும் காணலாம். எண்ணெய், பால், கடலக்கறி, அவியல், மிளகூட்டல், துவரன், குழம்பு, தீயல், எரிசேரி, புளிசேரி, நேந்திரன் சிப்ஸ், பலாப்பழ சுக்குவரட்டி , குழியப்பம், அல்வா, போளி, பாயாசம், இலை அடை, பொங்கல், அசைவ உணவுகள், என எங்கெங்கும் தேங்காயின் ஆட்சி. விதம் விதமாய் தேங்காயை சித்திரவதை செய்து சமைப்பது எப்படி என இவங்ககிட்ட கத்துக்கலாம். ஹிஹி.

 பேர் தெரியா நீர்ப் பறவைகள் அநேகம். ஆனால் எல்லாம் காகம் போல் கன்னங்கரேல் என்று இருக்கு. காமிராவில் சுடும்முன் எல்லாம் விடுஜூட்தான். பேறு பெற்றோர் பறவையை ( காமிராவில் )  நச்சென்று சுட முடியும்.

கிழக்கும் மேற்கும் வடக்கும் தெற்கும் நீரை அளந்து ஞானம் பெறலாம். நாளுக்கு 8,000ரூ  வாடகை. நான்கு மணி நேரத்துக்கு ஆயிரம் ரூபாய். வாங்க. வள்ளத்துல போய் வருவோம்.

அந்த வெய்யிலையும் அனுபவித்துக் கொண்டிருந்தது ஒரு வெள்ளைக்காரத்தம்பதி.


ரெஸார்ட் விதம் விதமான கோணத்தில்.


நாட்டுஓடு பொருத்திய கட்டிடங்கள். வெய்யிலில் காயும் பிரம்பு நாற்காலிகள்.


அதே தம்பதிகள் . தொப்பி அணிந்து புக் படிக்கிறாங்க. என்ஜாயிங் த சன்லைட்.
லயன் தென்னைகள்.
குட்டிப்பாலம்.
தனி இல்லங்கள்.  வாடகை தங்குமிடங்கள்.


வெங்காயத்தாமரை வகையறா ஒன்று இந்த நன்னீர் ஏரியில் பரந்து கிடக்கு.

பாம்பு பூச்சி பயமில்லாமல் ஏரிக்கரையில் ஒரு ஏகாந்தபங்களா.
ஏரியில் அங்கங்கே டயர்கள். படகு இடிக்காமலிருக்கவா ?

டிஸ்கி:- இவற்றையும் பாருங்க. 

1.மை க்ளிக்ஸ்ஸ்ஸ் :) முள்ளும் மலரும். MY CLICKS. 

2.மை க்ளிக்ஸ் நொறுக்ஸ். MY CLICKS. 

3. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். - 2 தண்ணீர் தீபம். MY CLICKS.

4. மை க்ளிக்ஸ். -3 விதம் விதமான கட்டிடங்கள். - MY CLICKS. ARCHITECTURE.

5. மை க்ளிக்ஸ் - 4. இருளும் ஒளியும். குகையும் கடலும் MY CLICKS. 

6. மை க்ளிக்ஸ் . பத்து ரூபாய் நோட்டும் நடைப்பயிற்சியும்.MY CLICKS.

7.மை க்ளிக்ஸ். ஏர் உழவும் பொங்கலும்.MY CLICKS.  

8. மை க்ளிக்ஸ். இருளும் ஒளியும். நியான் சூரியனும் ஒளியின் இசையும். MY CLICKS. 

9. மை க்ளிக்ஸ். இயற்கையும் செயற்கையும் நாடோடிகளும். MY CLICKS. 

10. புகைப்படப் பிரியனில் சில புகைப்படங்கள். 

11. ஃபோட்டோஸ்ட்ரோபியில் பூவும் பழமும் பறவைகளும்..

12. கொஞ்சம் ஆன்மீகம் ஃபோட்டோஸ்ட்ராஃபியில்.

13. கொஞ்(ச)சும் கேரளா. ஃபோட்டோஸ்ட்ராஃபியில். ( PHOTOSTROPHE)

14. ஃபோட்டோஸ்ட்ராஃபியில் துபாய். (PHOTOSTROPHE)

15. புகைப்பட தின ஸ்பெஷல் 2016. காரைக்குடி வீடுகள். - KARAIKUDI HOUSES FOR CAMERA DAY SPECIAL. 

16. நிஷ்டைச் சிவன்களும் சிவலிங்கமும். - WORLD PHOTOGRAPHY DAY. 

17. உலக புகைப்பட தினம் ஸ்பெஷல் - மசூதிகளின் நகரம்.(WORLD PHOTOGRAPHY DAY-- CITY OF MASJITS ) 

18. புகைப்பட தின ஸ்பெஷல். ( CAMERA DAY SPECIAL) கட்டிடடக்கலை. ( ARCHITECTURE). 

19. மை க்ளிக்ஸ். கோலமயிலும் நீல மயிலும்.MY CLICKS. 

20.  மை க்ளிக்ஸ். ஹெல்தி ஸ்நாக்ஸ். HEALTHY SNACKS. MY CLICKS.

21. மை க்ளிக்ஸ். சாலையோர வியாபாரிகளும் உணவுகளும். STREET VENDORS, MY CLICKS.

22. மை க்ளிக்ஸ். துளசியும் ஊஞ்சலும். MY CLICKS. TULSI & SWING.

23. சும்மா சில க்ளிக்ஸ். CHUMMA. MY CLICKS.

24. ஜல்லிக்கட்டும் பச்சைக் குளமும். மை க்ளிக்ஸ். MY CLICKS. 

25.  மை க்ளிக்ஸ். பிரசாதம். PRASADHAMS. MY CLICKS. 

26. மை க்ளிக்ஸ். கத்திரிக்காயும் கண்ணாடியும். MY CLICKS.

27. மை க்ளிக்ஸ் - தெக்கூரிலிருந்து துபாய் வரை.  MY CLICKS

28. மை க்ளிக்ஸ் - ஆண்டவர்கள். MY CLICKS.

29. மை க்ளிக்ஸ் -  கூல் கூல் கூல் . MY CLICKS.

30. நிலவும் நீயே நெருப்பும் நீயே. மை க்ளிக்ஸ். MY CLICKS.

31. ஜில் ஜில் ஜில். மை க்ளிக்ஸ், MY CLICKS.

32. பழம் நல்லது. - 1. மை க்ளிக்ஸ். MY CLICKS

33. பழம் நல்லது. - 2. மை க்ளிக்ஸ். MY CLICKS

34. பறவைகள் பலவிதம், மை க்ளிக்ஸ், MY CLICKS

35. எண்ணெயில் குளிக்க இத்தனை வகைகளா. மை க்ளிக்ஸ் , MY CLICKS 

36.மாலையில் கொஞ்சம் கர்க் முர்க். மை க்ளிக்ஸ். MY CLICKS

37. குழந்தைகளுக்கு ஏற்ற சத்தான உணவுகள். மை க்ளிக்ஸ், MY CLICKS

38. சரஸ்வதியில் இருந்து சரஸ்வதி வரை , மை க்ளிக்ஸ், MY CLICKS.

39. கோவிந்தபுரம் & பூம்புகார் மை க்ளிக்ஸ். MY CLICKS.

40. சிங்கப்பூர் மை க்ளிக்ஸ். MY CLICKS.

41. மலேஷியா. மை க்ளிக்ஸ் MY CLICKS.

42. கும்பகோணம் – மை க்ளிக்ஸ் MY CLICKS

43. புகார், தரங்கம்பாடி. ஆக்ரோஷ அலைகள். மை க்ளிக்ஸ் MY CLICKS.

44. மலைகள் - மை க்ளிக்ஸ். MY CLICKS. 

45. தாராசுரம் மை க்ளிக்ஸ் . MY CLICKS.

46. குமரகம், ஆலப்புழா மை க்ளிக்ஸ் MY CLICKS. 

47. கெம்பேகவுடா ஏர்போர்ட், பெங்களூரு. மை க்ளிக்ஸ் MY CLICKS.

48. சுதேசி ( ஐட்டம்ஸ் )உணவு. மை க்ளிக்ஸ்,MY CLICKS. 

49. துபாய், ஷார்ஜா, அபுதாபி, மை கிளிக்ஸ். MY CLICKS.

50. எங்கே செல்லும் இந்தப் பாதை.. மை க்ளிக்ஸ். ROADS . MY CLICKS

51. கொள்ளை கொள்ளும் கேரளா மை க்ளிக்ஸ். KERALA. MY CLICKS.

 52. சிங்கப்பூர் ஆர்கிட் பார்க், மை க்ளிக்ஸ். ORCHID PARK. MY CLICKS 

53.  சிங்கப்பூர் ஆழ்கடல் அதிசயங்கள். மை க்ளிக்ஸ். UNDERWATER WORLD, MY CLICKS. 

54. சிங்கை மலேயா சில உதிரி புகைப்படங்கள், மை க்ளிக்ஸ், MY CLICKS.

55. மலேஷியா சிங்கை, பெங்களூரு .. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS. 

56.  கொஞ்சம் மதிய விருந்து. மை க்ளிக்ஸ். MY CLICKS. 

57.  காய்கனி பூ பழம் மை க்ளிக்ஸ். MY CLICKS.

58. பூக்கள். மை க்ளிக்ஸ். FLOWERS, MYCLICKS.

59. பறவைகள் மை க்ளிக்ஸ். MY CLICKS. 

60. சுடச்சுட கொஞ்சம் சூப்ஸ் & ரசம். மை க்ளிக்ஸ். SOUPS & RASAM, MY CLICKS.

61. கொச்சுவேலி,கோவளம்,பாலோடு,பொன்முடி,கொச்சின் மை க்ளிக்ஸ்,KOCHUVELI,KOVALAM,PALODE,PONMUDI,KOCHIN, MY CLICKS. 





66. குன்றக்குடியின் சுப்புலெட்சுமி. மை க்ளிக்ஸ். MY CLICKS.  


1 கருத்து:

  1. iramuthusamy@gmail.com3 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 12:57
    அழகு கொஞ்சும் ஆலப்புழையில் சாயா கிடைக்கவில்லை. சேரநன்னாட்டிளம் பெண்கள் எல்லாம் சினிமாவில். தேங்காய் இரண்டரக்கலந்த ஊணு. கடவுளின் தேசத்து ஆழப்புழை பதிவு சுவையான அவியல்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan21 ஜூன், 2018 ’அன்று’ பிற்பகல் 9:40
    விரிவான கருத்துக்கு நன்றி முத்துசாமி சகோ :)

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.

 காதல் வனத்தில் அபூர்வப் பூக்கள்.  அபூர்வ ஆளுமைகள் என் காதல் வனம் நூல் வெளியீட்டில் கலந்து கொண்டு சிறப்பித்தார்கள். அவர்களைப் பற்றி முன்பே ஒ...