எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 4 ஏப்ரல், 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை -3

பழனி போன்ற மலைகளில் ஏறுவது ஆறுமுகவேலவனைத் தரிசிக்கத்தான் என்றாலும் வழிப்பயணம் நமக்கு பல ஆன்மீகப் பாடங்களைப் போதிக்கும்.


அதேபோல்தான் ஒவ்வொரு பயணமும். பஸ்/ட்ரெயின்/கார்/ஃப்ளைட்டில் நாம் சென்று அடையும் ஊரில் பார்க்கும் விதம் விதமான இடங்கள் மால்கள், கோவில்கள், தீம் பூங்காக்கள் போல நாம் பயணம் செய்யும் சாலையும் சிறப்பு வாய்ந்ததே. பயணியர், வியாபாரியர், நடைப்பயணம் செல்வோர், விவசாயிகள் வண்டி வாகனங்கள் பறவைகள் கால்நடைகள் எனச் சாலைகளிலும் உயிரோட்டமுள்ள வாழ்வு நிறைந்துள்ளது.

நகருள் அன்றாடப் பணியில் ஈடுபடும் மனிதரையும் கடைகளையும் ஊர் முடிந்ததும் வரும் ஆறு குளம் ஏரி போன்றவையும் மரம் செடி கொடிகளையும் வானத்தையும் பூமியையும் பாறைகளையும் மலைகளையும் பார்க்கும்போது மனம் உற்சாகமடைவதை உணரலாம்.

சூரியன் நம்மோடு ஓடி வருகிறதோ இல்லையோ சந்திரன் கட்டாயம் இரவுப்பயணத்தில் கூடவே ஓடிவரும்.  இன்னும் சில பயணப் பாதைகளைப் பார்க்கலாம் வாங்க.

இது சென்னை டி நகரில் போத்தீஸுக்குச் செல்லும் சாலை. மேலே மேம்பாலத்தில் போனால் பனகல் பார்க் போகலாம். அதிகாலைப் போதில் பிகேஆர் ஹோட்டலில் இருந்து இந்தப் பார்க்குக்கு நடைபழகச் சென்றோம். அப்போது எடுத்தது. பகல் என்றாலோ இரவென்றாலோ கூட்டத்தில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்.


இது ஹைதையில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொண்டாப்பூர் மாதாப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு மேம்பாலம். ஓவியப் பாலம் :)


இது ஸைபர் டவர் அருகில் உள்ள ஒரு பெருமாள் கோவில்.


பக்கவாட்டில் ஸைபர் டவர். இதைச் சுற்றிச் சென்றால் ஷில்பாராமம் கலாச்சார கிராமம் வரும்.

ஹைதை டு குவாலியர் பயணப் போதில் ட்ரெயினில் இருந்து க்ளிக்கியது. கட்டிடம் வண்ண வண்ணமாய்க் கண்ணைக் கவர்ந்ததால். :)


இது குவாலியரில் ஹோட்டல் சுரபி இருக்கும் ரோடு. அதில் குழாய்களைத் தள்ளுவண்டியில் இணைத்து இழுத்துச் செல்லுகிறார் ஒருவர்.


இதுவும் அதே ரோட்டில்தான். ஹோட்டலில் இருந்து கணவரை எதிர்பார்த்துக் காத்திருந்த வேளையில் சுட்டது. வெய்யிலும் அனல்போல் சுட்டது. அதனால் அவ்வூர் வாசிகள் காலையிலேயே சிலர் மூக்கு கண்ணைத் தவிர அனைத்தையும் கட்டிக்கொண்டு போவதைப் பார்க்கலாம்.


டிட்டோ.

அதே அதே

இது ஹைதையில் ஒரு ரயில்வே ஸ்டேஷனுக்குச்  செல்லும்போது எடுத்தது.

இங்கே பஞ்சாரா ஹில்ஸ், ஹூப்ளி ஹில்ஸ் போன்ற பகுதிகள் மட்டுமல்ல. அநேகமாய் அனைத்து இடங்களுமே பாறைகளும் கற்களும் நிரம்பி இருக்கும். இந்த ஊரின் லேண்ட் மார்க் அப்படி.


இதுவும் அதே ரோடு.

இது கானாடு காத்தான் மங்கள ஆஞ்சநேயர் கோவிலின் எதிரில் இருந்து எடுத்தது.  திருச்சி செல்லும் பாதை.

கானாடு காத்தான் டு காரைக்குடி ரூட். இதில் பள்ளத்தூர், கோட்டையூர் போன்ற பகுதிகளைக் கடக்கும்போது இம்மாதிரிக் கம்மாய்கள் எதிர்ப்படும். அப்போது எடுத்தது.


இதுவும் கானாடுகாத்தான் டு காரைக்குடி ரூட். அநேகமாய் அழகப்பா யூனிவர்சிட்டி ஹாஸ்டலை  ஒட்டி இருக்கலாம்.

இது நெய்வேலியைக் கடக்கும்போது காரில் இருந்து எடுத்தது. என்ன பாலம் என்ன நதி எனத் தெரியவில்லை. காவிரியும் கொள்ளிடமுமாக இருக்கலாம்.

ஆனால் இப்போ மணலிடம் ஆக இருக்கு.

மழைபெய்தாலோ ஆடிபதினெட்டிலோ இங்கே நீர் வரத்து இருக்கலாம்.

நீரின் பாதையை மறித்துக் கட்டிடம் கட்டாமல், கட்டிடம் கட்ட மணல் அள்ளாமல் இருப்போம். நதிக்கரையோர நாகரீகங்களில் தழைத்தவர்கள் நாம். எனவே நதிகள் நடந்துவரும் பாதைகளை அழிக்காமல் காத்திடுவோம்.

1 கருத்து:

  1. Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University19 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 10:08
    ரசனையாக எடுக்கப்பட்ட புகைப்படங்கள்.

    பதிலளிநீக்கு

    A. Manavalan19 ஆகஸ்ட், 2020 அன்று பிற்பகல் 10:59
    Pathaigal ontrai ontru inaikintrana. Naam thaan mudivu seiyanum enke poganum enbathai. Lovely pictures Thenu.

    பதிலளிநீக்கு

    A. Manavalan19 ஆகஸ்ட், 2020 அன்று பிற்பகல் 10:59
    Pathaigal ontrai ontru inaikintrana. Naam thaan mudivu seiyanum enke poganum enbathai. Lovely pictures Thenu.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்21 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 10:20
    படங்கள் அனைத்தும் நன்று. பகிர்ந்து கொண்டதற்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 1:39
    நன்றி ஜம்பு சார் !

    நன்றி மணவாளன் சார்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...