எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

புதன், 9 மார்ச், 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை - 2

எங்கே செல்லும் இந்தப் பாதை - 2

பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன. பயணங்கள் முடிவதில்லை. எனவே வாங்க இன்னும் சில பயணங்களையும் பாதைகளையும், மேலும் கட்டிடக்கலையின் அதிசயமான  இருபக்கமும் ஒரே ஒரு தூணில் கட்டி நிறுத்திய பாலத்தையும் பார்ப்போம், ரசிப்போம்.

இது திருச்சி ரயில்வே ஸ்டேஷன். ஜங்ஷன் என்பதால் நிறைய தண்டவாளப் பாதைகள். இந்த மேம்பாலமும் ட்ரெயின் செல்லும் வரும் வழித்தடமும் அதன் மேல் பொன் நிறம் பூசும் மாலை வெய்யிலும் என்னை மயக்க இந்தப் புகைப்படம் எடுத்தேன்.




கோவை டாடாபாத்தின் ஆறுமுக்கு. ஆறு பிரிவாகப் பிரியும் பாதைகள் இங்கே வித்யாசம். அதில் ஒரு முக்கில் இந்த அம்மன் அருளாட்சி புரிகிறாள். கொள்ளை அழகு இல்ல :)


கோவை ஈச்சனாரி சாலை. ஈச்சநாரிப் பிள்ளையார் கோவில். பொள்ளாச்சி உடுமலை செல்லும் வழி.

கோவை டாக்டர் நஞ்சப்பா ரோடு, காந்திபுரம்.


பெங்களூரு ஜெயநகர் முனிசாமி கோவில். இதன் பக்கம்தான் ஜெயதேவ் ஹாஸ்பிட்டல். இதயநோய் சிகிச்சைக்குப் பெயர் பெற்றது. பிடிஎம் லே அவுட்டுக்குப் பக்கத்தில் உள்ளது. மேப்பே போட்டு இருக்காங்க பாருங்க.

மருதமலை ரோடு.

இதுவும் கோவை வடவள்ளி மருதமலை ரோடு.

மிகப் பிரம்மாண்டமான மலைத்தொடர் வரவேற்க சாலையும் பளிச்சென்று இருக்கிறது.


இதோ மருதமலை வந்தாச்சு. இது பஸ் ஸ்டாண்ட் & அடிவாரக் கடைகள் பகுதி.


பெங்களூர் டு ஹோசூர் பஸ் ரூட். செட்டி முருகன் கோவிலுக்கு ஆட்டோவில் போகும்போது க்ளிக்கியது.

இது பெங்களூரு பிடிஎம் லேஅவுட் & சில்க் போர்ட்டுக்கு இடைப்பட்ட சாலையின் பக்கவாட்டுக்கிளைச் சாலை.

குல்மோஹர்கள் அணிவகுக்க மிக எழிலாய் இருக்கிறதுதானே :)


சில கன்னடத்துப் பைங்கிளிகளும் பறந்து சென்றால் அந்தப் பாதையே சொர்க்கமாகி விடாதோ.

பெங்களூருவின் குளுமைக்கு இம்மாதிரி மரம் செடி கொடிகளும் ஒரு காரணம்.

பனசங்கரி செல்லும் போது எடுத்தது. அப்போது மேம்பாலம் மேக்கிங்கில் இருந்தது.

இது அநேகமாய் கே ஆர் புரம் செல்லும்போது அல்லது செட்டி முருகன் கோவில் செல்லும்போது எடுத்ததாய் இருக்கும். சரியாய் ஞாபகமில்லை.

இனி வருவன கே ஆர் புரத்தின் எழில் மிகு பாலமும் சாலையும்.

பொறியாளர்கள் ( சிவில் என்சினியர்கள் )  நிறைந்த ஊர் அல்லவா. அதனால் இந்தப் பாலத்தைப் பாருங்கள். ஒரே தூணில் கட்டி நிறுத்தி இருக்கிறார்கள்.


ஆட்டோவில் சென்றதால் அருகிருந்தும் எடுக்க முடிந்தது.


இது பிடிஎம் இல் இருந்து கே ஆர் புரம் செல்ல டின் ஃபாக்டரியில் இறங்கி இந்த மேம்பாலத்தில் ஏறி பஸ் அல்லது ஆட்டோவுக்கு மாறவேண்டும்.


செல்லும்போது பஸ்ஸில் சென்றோம்.

எனவே பாலம் இன்னும் அருகாமையில் தெரிகிறது. இரு தூண்களையும் நடுவில் இணைக்கும் ஒரு உத்தரம் போன்ற அமைப்பையும் பாருங்கள். ஒரு பெரிய பாலத்தையே இவையும் இந்தக் கம்பிகளும்தான் தாங்குகின்றன.


இது ஆட்டோவில் வீடு திரும்பும்போது எடுத்தது.

சரி ரைட் போலாம். பெங்களூர் சாலைகள் பயணம் செய்யச் சுகமானவை.


இப்பப் பிரிவோம். அடுத்த பயணத்தில் சந்திப்போம். :)

1 கருத்து:

  1. ஸ்ரீராம்.5 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 5:41
    அனைத்துப் படங்களும் அழகு.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்5 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 8:42
    படங்கள் நன்று.

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்5 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 11:28
    பயணத்தை தொடர்கிறேன்...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஆகஸ்ட், 2020 அன்று பிற்பகல் 2:35
    நன்றி ஸ்ரீராம்

    நன்றி வெங்கட் சகோ

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...