எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை - 1.

"LIFE IS A JOURNEY WITH PROBLEMS TO SOLVE AND LESSONS TO LEARN BUT MOST OF ALL EXPERIENCES TO ENJOY. "


பயணங்கள் பலவிதம். நீரின் பயணத்தைப் பற்றி ஒரு பாடல்வரும். அனைவரும் கேட்டிருப்பீர்கள். “தீம்தனனா தீம்தனனா.. நதியே நதியே..”. அதேபோல் சேதுவில் வரும் இப்பாடலும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ யாரோ அறிவார்..” பிடிக்கும். ஹைவேஸ், பைபாஸ் சாலைகள் ஓரளவு பரவாயில்லை. ஊருக்குள் செல்லும் மற்ற சாலைகள் எல்லாம் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லை.

அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்ளும்போது எடுத்த படங்கள் என் கமெண்ட்ஸுடன் உங்கள் பார்வைக்கு. முடிந்தவரை சென்ற பாதைகளை அடையாளப்படுத்த முயல்கிறேன். ( வலைத்தளம் ஆரம்பித்ததே நம் பாதைகளை ஒழுங்குபடுத்தி எழுத்துப் பாதையில் செல்லத்தானே. :) ! இதை வலைப்பதிவர் அனைவரும் ஒப்புக் கொள்வீர்களென நினைக்கிறேன்.


காரைக்குடி டு குன்றக்குடி. பைபாஸ் வழியாக சென்றபோது எடுத்தது..



புதுக்கோட்டையில் உறவினர் ஒருவரின் சஷ்டியபத பூர்த்திக்குச் சென்று வந்தபோது சாலையெங்கும் இந்தக்கொடி வரவேற்பு நல்கியது.


இது பெங்களூரு. பையன்கள், கணவர் சகிதம் எம் ஜி ரோட்டில் ஒரு உலா. ( பையன் அலுவலகம் இங்குள்ளது ) .

ஒரு அதிகாலைப் பயணத்தில் காரைக்குடியை விட்டுவிட்டு சிவகங்கையில் இறங்கியபொழுது .. பஸ் ஸ்டாண்ட் வந்து காரைக்குடி வந்தோம். வழியில் மருது பாண்டியர் நகர் என்ற கோட்டை, உப்பரிகை அமைப்பு வளைவு கொண்ட சாலை கண்ணைக் கவர்ந்தது :)

தினசரி நடைபாதை.

கொரோனா காலத்தில் ஆளண்டாமல் கிடக்கிறது.


இதற்கு இப்போது தடுப்புக் கம்பிகளும் போட்டுள்ளார்கள். இந்தப் பாதையை புகைப்படம் எடுத்து ஏழெட்டு ஆண்டுகள் ஆகியிருக்கும். இப்போது சாலையும் போட்டு அழகாகி விட்டது.

துபாயில் புர்ஜ் அல் அராப் நோக்கிப் போகும் பாதை.


இது நம்மூரு திருச்சி ஹைவேஸ்/பைபாஸ் என நினைக்கிறேன். ஏதோ மேகம் வந்ததோ.. :)


நெய்வேலி நகருக்குள் செல்லும் பாதை. ( இந்திராநகரிலிருந்து எடுத்ததாய் இருக்கும் )

திருச்சி ரயில்வே ஸ்டேஷன்.



கும்பகோணம் பட்டீஸ்வரம், உப்பிலியப்பன் என்று ஏதோ ஒரு கோவிலுக்குச் சென்று திரும்பிய வழி.

தஞ்சை நோக்கிச் செல்லும் சாலை. விஜயதசமி சமயம்.

கானாடு காத்தான் & நேமத்தைப் பிரிக்கும் ரயில்வே பாதை. இந்த ரயில் நாங்கள் ரயில்வே கேட் அருகில் காத்திருந்தபோது எடுத்தது.

எல்லா ட்ரெயினிலும் ஊர் பெயர் தமிழில் இருக்குதோ இல்லையோ ஹிந்தியில்  கட்டாயம் இருக்கும்.

மருதமலை மாமணியே முருகையா.. மருதமலை அடிவாரம்.

கானாடுகாத்தான் டு காரைக்குடி செல்லும் பாதை. மங்கள ஆஞ்சநேயர் அருள் பாலிக்கும் நாற்கரச் சாலை.


திருமயம் கோட்டை வழியாக கடியாபட்டி செல்லும் குறுக்குச் சாலை.

ராஜபாட்டையில் உள்ளே சென்றால் 3,4 கோவில்களையும் பார்க்கலாம். சத்யகிரீஸ்வரர் கோவில், ஆஞ்சநேயர் கோவில், சிவன் கோவில், திருமெய்யம் பெருமாள் கோவில்.

1 கருத்து:


  1. திண்டுக்கல் தனபாலன்25 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 5:30
    பயணத்தின் காட்சிகள் அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 1:02
    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...