மன்னார்குடி சென்றிருந்தபோது பெரியகடைத்தெருவில் இருக்கும் பூர்ணா லாட்ஜில் தங்கினோம்.
நல்ல வசதியான ஹோட்டல். மன்னார்குடி இப்படி வளர்ச்சி அடைந்து வருவது குறித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கு.
காலை ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் கிடையாது. ஒன்லி போர்டிங்க் மட்டும்தான்.
மூன்று நாட்கள் ரீஸனபிள் காஸ்டில் தங்கி சுற்றி இருக்கும் கோயில்கள் , தோழியர் வீடுகள் எல்லாம் சென்று வந்தேன்.
வரவேற்புப் பெண் வெகு அழகு.
கீழே படிகள் மட்டும்தான். இருபுறமும் கடைகள் . ஒருபுறம் ஆர்யாஸ் ஸ்வீட் ஸ்டால். ! மேலேதான் ஹோட்டல் லாட்ஜிங்.
முழு வியூவும். கார்பார்க்கிங்தான் இல்லை.
ரோட்டின் மையத்தில் உள்ள பார்டீஷனைத்தான் அங்கே உள்ள கடைத்தெருக்காரர்களும் ஹோட்டல்காரர்களும் கார் வேன் நிறுத்தப் பயன்படுத்துகிறார்கள்.
இன்னும் மூன்று ஆப்ரிக்க மங்கையர் நீர் சுமந்தபடி படிகளை எழிலூட்டுகிறார்கள்
மேலே நீண்ட காரிடார். மூன்று மாடிகள் கொண்டது.
மூவர் தங்க இரு படுக்கைகள். தலையணைகள், துவாலைகள் கம்பிளிகள் படு சுத்தம்.
நீண்ட விசாலமான பாத்ரூம். பக்கெட் கப் குளிக்க.
வாஷ்பேஸின். மேலே துணி போட கம்பி.
கெய்ஸர்.
யூரோப்பியன் டாய்லெட் வித் ஹேண்ட் ஹோஸ் சௌகரியம்.
ரூம் எல் போல வளைகிறது.
ஒரு புறம் வார்ட்ரோப் ,
டிவி, ட்ரெஸ்ஸிங் டேபிள் கண்ணாடி, டீபாய் உண்டு.
ரூமிலும் ஓவியங்கள்.
இரு ஜன்னல்கள் கனத்த சிவப்புத் திரைகளுடன்.
படிகளில் மென்மேலும் ஓவியங்கள். வெண்டிலேஷனுக்காக விண்டோஸ்
வார்ட்ரோப் . ஹாங்கர்களும் இருந்தன.
இரவில் காரிடாரில் வாக்கிங் போகலாம். அவ்ளோ நீளம்.
சென்று வாருங்கள் என்று கரம் கூப்பும் அழகு மங்கை.
மீண்டும் வாருங்களென்று கூறுகிறாரோ :) கண்ணையும் கருத்தையும் கவர்ந்த பெண். :)
இந்த ஹோட்டலுக்கு எனது ரேட்டிங் நாலு ஸ்டார்.****
மன்னை சென்றால் இங்கே தாராளமாத் தங்கலாம். திருமணம், ஊர் சுற்றிப் பார்க்கச் செல்பவர்கள் குடும்பத்துடன் சென்று தங்க தொந்தரவில்லாத பட்ஜெட் ஹோட்டல்களில் இதுவும் ஒன்று.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
பதிலளிநீக்குஎன்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!