எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 மே, 2022

டிப்ஸ் டிப்ஸ்தான். :)

 

டிப்ஸ் டிப்ஸ்தான். :)

 1. ஃபிரிட்ஜில் ஒரு கப்பில் கடுகு போட்டு நீர் ஊற்றி வைத்தால் ஃபிரிட்ஜில் பல்வேறு பொருட்கள், புளித்த தயிர், புளித்த மாவினால் ஏற்படும் கெட்ட வாடை நீங்கும்.

2.  தங்க நகைகளை ஷாம்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் பிரஷ் போட்டுத் தேய்த்துக் கழுவி உலர்ந்ததும் சிந்தூரப் பொடியால் நாய்த்தோலை வைத்துத் தேய்க்க புதிது போல மின்னும்.

3. வறுத்த கொள்ளுப்பொடி, அரை டீஸ்பூன், வறுத்த பார்லிப்பொடி அரை டீஸ்பூன், ஒரு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா கொத்துமல்லி கருவேப்பிலைத் தழைகள் போட்டு இரண்டு கப் நீரூற்றி வேக வைத்து எடுத்து மசித்து உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பருக உடல் எடை குறையும்.

4.நான்ஸ்டிக் பாத்திரங்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி மிதமான தீயில் வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஹைஃப்ளேமில் சமைத்தால் அதில் உருவாகும் கெமிக்கல் உடலுக்குக் கெடுதல்.

5.எலுமிச்சை அதிகமாக இருந்தால் புளிக்காய்ச்சல் போல தாளித்து வைத்து ஒரு வாரம் வரை உபயோகிக்கலாம். எலுமிச்சைச் சாறை தாளித்தத்தில் ஊற்றி ஒரு கொதி வந்ததும் அடுப்பை அணைத்து விட வேண்டும்.

6.பட்டுப்புடவைகளுக்கிடையில் நாப்தலின் பால்ஸ் போட்டு வைத்தால் உருகி ஊற்றிப் புடவையைப் பாழாக்கிவிடும். பேர் சொல்லாதது எனப்படும் வசம்பைப் போட்டு வைத்தாலும் பூச்சி அண்டாது.

7.வைர நகைகள் போடுமுன்பு பாடி ஸ்ப்ரே, செண்ட் போட்டுக் கொண்டுவிட வேண்டும். வைர நகைகள் போட்ட பின்பு பாடி ஸ்ப்ரே,செண்ட் போட்டால் அவை பட்டு வைரம் கருத்துவிடும்

8.படித்து முடித்த புத்தகங்களை விலைக்குப் போடாமல் பக்கத்தில் இருக்கும் ஆதரவற்றோர் இல்லம், முதியோர் இல்லத்துக்குப் பரிசளிக்கலாம்.

9. ஃப்ளைட் பயணத்தில் ஊறுகாய் தொக்கு போன்றவற்றை எண்ணெய் ஊற்றி உடைகளைப் பாழாக்காமல் பத்திரமாக எடுத்துச் செல்ல: ஊறுகாய், தொக்கு பாட்டில்களின் வாய்ப் பக்கம் எண்ணெய் வந்த ப்ளாஸ்டிக் கவர்களை சதுரமாக வெட்டி வைத்து மூட வேண்டும். மேலும் நியூஸ்பேப்பரால் முழுதாக சுற்றி ரப்பர் பாண்ட் போட்டு அதன்மேல் பாலிதீன் பையால் சுற்றி டைட்டாக ரப்பர் பேண்ட் போட வேண்டும்.

10. ஆசிட் போடுவதற்குப் பதிலாக டூத்பேஸ்ட், விம்பார்+ வினிகர் போன்றவற்றைப் போட்டுப் பிரஷால் தேய்த்தாலும் பாத்ரூம் கறைகள் நீங்கும்.

1 கருத்து:

  1. வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...