எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

ஞாயிறு, 5 ஜூன், 2022

நீரின்றி அமையாது உலகு - 1.

 நீரின்றி அமையாது உலகு - 1.

நீரின்றி அமையாது உலகு. உண்மைதான். நதிக்கரையோர நாகரீகம் மட்டுமல்ல. இன்றைய மெட்ரோ சிட்டி வாழ்விலும் கூட புழல் நிரம்பியதா வீராணம் வருமா என்றெல்லாம்தான் யோசிக்க வேண்டி இருக்கு. எனவே பயணப் பொழுதுகளிலும் ஆன்மீகத் தலங்களிலும் நான் பார்த்த புஷ்கரணி, தீர்த்தங்கள், நீர் நிலைகள், கம்மாய்கள், ஊருணிகள், நதிகள், கடல் இவற்றை ( பம்ப்செட், கிணறு கூட வரலாம். ) ஆகியவற்றைக் க்ளிக்கி இங்கே பகிர்ந்துள்ளேன். 

இது வைவரன் கோவில் புஷ்கரணி. வைரவ தீர்த்தம். தீர்த்தக் கரைதனில் ஐந்து ரிஷபங்கள் காவல் வேறு. இதுவே அழகாக இருந்ததால் இப்படி எடுத்துள்ளேன். 

மேலே காண்பது அரியக்குடி பெருமாள் கோவிலின் கருட தீர்த்தம். கிணறு வடிவில் உள்ளது இத்தீர்த்தம். இறங்கிச் செல்லப் படிகள் உண்டு. வெளிப்பக்கம் கதவு போட்டுப் பூட்டி வைத்திருக்கிறார்கள். 


பார்த்தவுடனே தெரியுமே பாண்டி கடற்கரை என்று. :) கடலோரம் வாங்கிய காற்று இனிதாக இருந்தது அன்று :) 

பாண்டி கடற்கரை. பாறைகளும் அலைகளும் விடாத போராட்டம். 


கிருஷ்ணாவா இல்லை கோதாவரியான்னு தெரில. 

சென்னைக்கு அருகே இருக்கும் ஒரு நதி. 


சூரக்குடி கோவில் புஷ்கரணி. சூர்ய தீர்த்தம். 

ராமேஸ்வரம் செல்லும் வழியில் தேவிபட்டினத்தில் நவக்ரஹ கோவிலில் தீர்த்தமாடுதல். நவபாஷாணம் கொண்டவை இவை என்பார்கள். ஆனால் நெல்லையும் நவதானியத்தையும் அந்த உப்பு நீரில் அடர்த்தியாகக் கொட்டி வைத்திருப்பதால் நடந்து வலம் வரவே முடியவில்லை. அது போக குளித்து உரித்துப் போட்ட துணிகள் வேறு. வஸ்த்திரதானம் இல்லை பீடை கழியும் என்று அங்கே குவிந்திருக்கிறது. 

கோவை சிங்காநல்லூரில் இந்த படகுத்துறை.

ஆனால் அப்போது படகு இயங்கவில்லை

ஒரே வெங்காயத்தாமரைகள் வேறு. 



எவ்வளவு அடைசலாய் இருக்கிறது பாருங்கள். 

குஜராத்தில் கிருஷ்ணர் பிறந்த மதுரா, துவாரகை போன்ற இடங்களுக்குச் சென்றபோது எடுத்தது. இங்கே இருந்து ஒரு கப்பலில் கிருஷ்ணர் ஆட்சி செய்த இடத்துக்கு அழைத்துச் செல்கிறார்கள். கப்பல் போன்ற படகு. ஆனால் ஓவர் லோடாக மக்களை ஏற்றியதால் பயந்து செல்லவில்லை. 


தரங்கம்பாடி கோட்டை. கடலுக்கு மிக அருகே கட்டப்பட்டுள்ளது. 

டேனிஷ் கோட்டை எனப்படும் இது கைதிகளை அடைக்கும் கோட்டையாகவும் சார்நிலைக் கருவூலமாகவும் இருந்துள்ளது. 

கடலுக்கு வெகு பக்கத்தில் உள்ளது இக்கோட்டை. நீரின்றி அமையாது உலகு இரண்டாம் பகுதியிலும் இன்னும் சில தீர்த்தங்களையும் இடங்களையும் பார்க்கலாம் வாங்க.

1 கருத்து:


  1. john peter26 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 5:40
    நீர்நிலை என்று சொல்லாமல் புஷ்கரணி என்று வலிந்து சொல்வது உள் நோக்கமின்றி என்று நம்புகிறேன்

    பதிலளிநீக்கு

    திண்டுக்கல் தனபாலன்26 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 7:05
    படங்கள் அருமை...

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan27 ஜூலை, 2020 அன்று பிற்பகல் 1:04
    கோவிலில் உள்ள நீர்நிலையை புஷ்கரணி என்றும் தீர்த்தம் என்றும் சொல்வார்கள் ஜான் சார்

    நன்றி டிடி சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...