நீரின்றி அமையாது உலகு. - 3.ஹுசைன் சாகர் ஏரி.
ஹைதையில் செண்டர் ஆஃப் அட்ராக்ஷன் ஹுசைன் சாகர் லேக்.
டோமல் குடாவில் இருந்து ஒருமுறை போட்டிங்க் சென்று வந்திருக்கிறோம். அடுத்து எல்லாம் பயணப் பாதையில் தட்டுப்பட்ட ஏரியைத்தான் பார்க்க முடிந்தது. எங்கே ஏரி என கேக்குறீங்களா பாழாய்ப் போய் பேப்பர் குப்பைகளோடு பின்னாடியே வருது.
இது ஹைதராபாத் செகந்திராபாத் ரயில் செல்லும் பாதையில் உள்ள மசூதி. இதைக் கடந்ததும் ஏரிதான். ரயில்வே ஸ்டேஷன் பக்கம் சுவர் அமைத்து அதோடு கம்பி வலையும் போட்டிருப்பது கண்ணைக் கவர்ந்தது.
இதோ இந்தப் பூங்காவையும் தாண்டி அதோ மரங்களுக்குப் பின்னே தெரிவதுதான் ஹுசைன் சாகர் லேக்.
காலையின் பனிமூட்டத்தில் இன்னும் சரியாகக் காட்சி அளிக்கவில்லை. இதோ பார்க்கையும் கடந்தாச்சு.
இப்போ தூரத்தில் காட்சி அளிக்குது பாருங்க. ஸ்படிகம் போன்ற இந்த நீர் ஆதாரம் எப்படி எல்லாம் மாசு பட்டிருக்குன்னு பார்த்தா உங்க ரத்தம் கொதிக்கும்.
திரும்ப தூரத்தில் இருந்து காட்சிஅளிக்குது.
ட்ரெயினில் இருந்து மாக்ஸிமம் இவ்வளவுதான் எடுக்க முடிந்தது.
கார்டனும் குத்துப் புதர்ச் செடிகளால் நிரம்பி இருக்கு.
தூரத்து ஏரியும் மஞ்சள் பூக்களும்.
பாருங்க ஏரியைக் கடக்கும் பாலத்திலிருந்து பார்க்கும்போது ஏரியில் ஏதோ ஆலைக் கழிவு அல்லது சாக்கடையைக் கலந்தமாதிரி இருக்கு.
பாலிதீன் குப்பைகள் வேறு அடைத்துக் கொண்டு ஒரே நாற்றம்.
அடுத்து சஞ்சீவையா பார்க் என்னும் ஸ்டேஷன். அது போன பின்னாடிதான் ஏரியைப் பார்க்கலாம்.
இதோ அந்த பார்க்.உள்ளே சஞ்சீவையா என்னும் அனுமாரின் செந்தூரச் சிலை கொள்ளை அழகு.
ட்ரெயின் வளைந்தபின்னாடிபக்கவாட்டிலேயே பயணிக்கும் ஏரியைப் பார்ப்போம்.
இதோ அந்த மஞ்சள் பூக்களின் ஊடே ஏரி தெரிகிறது.
எவ்வளவுதான் கச்சடாவைக் கலந்தாலும் நீர் தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டே இருக்கிறது சூரியனின் ஒளியால். ஏரியில் கண்ட நீரையும் இணைத்துவிட்டுக் கம்பி வலைமட்டும் போட்டிருக்கிறார்கள் கரை முழுவதும்.
நீரை சுத்திகரிக்கும் சூரியன்
நீராதாரங்களில் குப்பைகளையும் கழிவுகளையும் கொட்டுவதையும் சாக்கடைகளையும் ஆலைக்கழிவுகளை இணைப்பதையும் நிறுத்துவோம். தாயைப் பழித்தாலும் தண்ணீரைப் பழிக்கக் கூடாது என்பார்கள். தண்ணீர் சம்பந்தமாகப் பல்வேறு பழமொழிகள் உள்ளன. ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள். இது தானம் குறித்த பழமொழி. ஆனால் குப்பையைப் பற்றியும் இன்று அறிவுறுத்த வேண்டியதா இருக்கு. என்ன செய்வது.
நீரின்றி அமையாது உலகு என்பதை நினைவில் கொள்வோம்.
திண்டுக்கல் தனபாலன்2 செப்டம்பர், 2020 அன்று முற்பகல் 10:37
பதிலளிநீக்குஅழகா இருக்குங்க...
பதிலளிநீக்கு
வெங்கட் நாகராஜ்3 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 6:39
நல்ல பகிர்வு. நீர் ஆதாரங்களில் கலக்கும் கழிவுகள் - வேதனை தான்.
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan10 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 4:38
நன்றி டிடி சகோ
ஆம் வெங்கட் சகோ. நம்மால் முடிந்ததைப் பகிர்வோம். நன்றி.
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!