எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வெள்ளி, 2 செப்டம்பர், 2022

நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

 நீரின்றி அமையாது உலகு - 4. துங்கபத்ரா.

மந்திராலயத்துக்கு இருமுறை சென்று வரும் வாய்ப்புக் கிட்டியது. அப்போது அங்கே துங்கபத்ரைக்குச் சென்று ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டோம். அன்று கண்ட மேனிக்கு அழிவில்லாமல் இருக்குது. எனவே இரண்டாம் முறை ஹைதையில் இருந்து சென்றபோது மந்திராலயம் & துங்கபத்ராவை எடுத்த படங்கள் பார்வைக்கு. 


துங்கபத்ரையைக் கடக்கும் பாலம். 


வெகு அழகான காட்சி இல்லையா. 

மந்திராலயம் வந்தாச்சு. போனமுறை வந்ததைவிட இந்தமுறை இன்னும் பிரம்மாண்டமா இருந்தது. 1992 இல் வந்தது. அதன் பின் அக்டோபர் 27 , 2014 இல் சென்றோம். 


வழியெங்கும் இந்த மாதிரி அழகுக் காட்சிகள் இருபுறமும் அணிவகுத்தன. தெய்வச் சிலைகளும் ஃபவுண்டன்களுமாக. 

ராதாகிருஷ்ணா. 

நடனப் பெண்.

ஜெய் பஜ்ரங் பலி கீ.


விநாயகனே வினை தீர்ப்பவனே. 


அனைவரையும் வணங்கிச் சென்றால் நேரே ராகவேந்திரர் குடிகொண்டு கருணைப் பார்வை பார்க்கிறார். அவரையும் நமஸ்கரித்தோம்.  அவருக்குப் பக்கவாட்டிலேயே மதங்க நர்த்தனமிடும் கிருஷ்ணன். 

ஒரு கணம் துங்கபத்ரைதான் அந்தக் காளிந்தியோ எனத் தோன்றியது .


துங்கபத்ரைக்குச் செல்லும் வழி. என்னடா இன்னும் துங்கபத்ராவைக் காமிக்காமலே கதை சொல்லிட்டு இருக்காங்கன்னு நினைப்பீங்க. 


கொஞ்சம் பொறுங்க அந்தப் பிரம்மாண்ட துங்கபத்ராவைப் பார்க்க உங்களைத் தயார்ப்படுத்த வேண்டாமா. 


காளிங்கநர்த்தனனை இன்னும் கொஞ்சம் க்ளோசப்பில் பார்ப்போம். 

குழந்தை உருவத்துக்குள் என்ன ஒரு கம்பீரம். 

ஆயரும் ஆய்ச்சியரும் ஆநிரைகளும் கலங்கி மயங்க மடுவைக் கலக்குகிறான் காளிங்கன். அவன் மதங்கத்தை அடக்க வாலைப் பிடித்துச் சிரசில் ஏறி நர்த்தனம் புரிகிறான் லீலாவிநோதன். 

காளிங்கனும் லேசுப்பட்டவன் இல்லை 16 தலை நாகம். ஆனா நம்ம கண்ணனும் அதுக்குக் குறைஞ்சவன் இல்லை. பதினாறு தலைகளிலும் மாறி மாறிக் கால் வைத்து மதங்க நர்த்தனமாடி அவன் செருக்கை அடக்கியவன். 

அவன் ஜெயிப்பான் எனத் தெரிந்தும் இப்புறம் வசுதேவரும் யசோதையும் முனிபுங்கவரும் பதட்டத்தோடு இருக்காங்க.


காளிந்தி நதியும் காளிங்கனும் கிருஷ்ணனும் மற்றையோரும் கவினுற செதுக்கப்பட்டிருக்கும் இச்சிற்பத்தைக் காணக் கண்கோடி வேண்டும். 

கீழே ஆதிசேஷன் மேல் பள்ளி கொண்டவன் மேலே காளிங்கன் மேல் நர்த்தனமாடுகிறான்.

இதோ துங்கபத்ராவுக்கு வந்துவிட்டோம். பாற்கடலில் நிற்கும் பரந்தாமன் நீர்க்கடலைப் பார்த்துக் கொண்டிருக்கிறான். 


இதுதான் துங்கபத்ரா. 

நாலாபுறமும் கண்ணுக்கெட்டியவரை நீர்க்காடு. 


நதியைப் பார்த்துப் பரவசித்து நீரைப் ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டு கால் நனைத்து சுத்தி செய்து கொண்டோம்.  


சிலர் நீராடிக் கொண்டிருக்க வட்டுகளும் பரிசில்களும் ஆலவட்டம் போட்டுக் கொண்டிருந்தன.


நீர்க்காடு. 

அக்டோபர் மாதம் மதியப் பொழுதிலும் வெய்யில் இல்லை எனவே மென்வெய்யிலில் மினுங்கி மினுங்கி ஓடிக்கொண்டிருந்தாள் துங்கபத்ரை. 


இதோ கோவிலுக்குத் திரும்புகிறோம். 

மிகப் பெரிய படித்துறை. ஆயிரக்கணக்கில் மக்கள் வரும் இடமாகையால் படித்துறைகள் பெரிதாக இருந்தன. 


இதோ திரும்ப அதே பெருமாளை வணங்கிவிட்டு உள்ளே போகப் போகிறோம். 

நாலு மணிக்குச் சந்நிதி திறந்ததும் வணங்கிவிட்டு வெளியே வந்தோம். போகும்போது இடது பக்கம் போனோம். வரும்போது எதிர்ப்பக்கம் வந்தோம். 


அங்கே இருபுறமும் நீர்க் குடத்திலிருந்து நீர் ஊற்றும் இரு கன்னியர் கட்டியம் கூறிக்கொண்டு நின்றதை அப்போதுதான் கவனித்தோம்.
 
வெகு அழகு இல்லையா 

அதன் பின் இந்த மகாலெக்ஷ்மியை வணங்கி விடைபெற மனமில்லாமல் துங்கபத்ரையையும் ராகவேந்திரரையும் மனதில் ஏந்திப் புறப்பட்டோம். 

நாம் பார்த்த நதிகளிலே ( இந்த இடத்தில்) துங்கபத்ரைதான் அதிக மாசுபடாதவள் என்று தோன்றுகிறது. 

1 கருத்து:

  1. 6 கருத்துகள்:

    Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University7 செப்டம்பர், 2020 அன்று முற்பகல் 10:56
    நாங்கள் சென்றுள்ளோம். அருமையான இடம்.

    பதிலளிநீக்கு

    துரை செல்வராஜூ7 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 6:02
    துங்கபத்ரா தரிசனம் இனிமை...
    படங்கள் அழகு...

    பதிலளிநீக்கு

    Yarlpavanan7 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 7:27
    குறித்த இடத்தைப் பார்க்கத் தூண்டும் விதத்தில் கட்டுரை சிறப்பாக இருக்கிறது.
    பாராட்டுகள்

    பதிலளிநீக்கு

    Ranjith Ramadasan7 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 9:25
    நண்பர்களே நீங்களும் இதுபோன்று Blog ஆரம்பித்து Google Adsense மூலமாக பணம் சம்பாதிக்க தமிழில் Blogging முறையாக கற்றுக்கொண்டு தங்களது ப்ளோகை Google Search ல் முதலிடம் பிடிக்க இந்த பதிவை படிக்கவும் https://www.techhelpertamil.xyz/2020/09/how-to-write-seo-friendly-blog-post-in-tamil.html இந்த பதிவானது Google Rank ல் முதலிடத்தில் உள்ளது. சந்தேகமிருந்தால் " how to write seo post in tamil " என்று தேடவும். முதலிடத்தில் நமது போஸ்ட் தென்படும். Tech Helper Tamil

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்9 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 12:34
    சிறப்பான தகவல்கள்.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan10 செப்டம்பர், 2020 அன்று பிற்பகல் 4:52
    நன்றி ஜம்பு சார்

    நன்றி துரை செல்வராஜு சார்

    நன்றி யாழ்பாவண்ணன் சகோ

    நன்றி ரஞ்சித் ராமதாஸ்

    நன்றி வெங்கட் சகோ

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து

 பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...