எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 27 பிப்ரவரி, 2021

ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.

ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.


சேலத்தின் ஹோட்டல் ஸ்ரீ ஷாந்தில் உணவும் ஓவியமும் அருமை.

ரிஸப்ஷனிலும் லிஃப்டின் அருகிலும் ஒவ்வொரு தளத்திலும், அறையிலும்  உணவுக் கூடத்திலும் கூட ஓவியங்கள் அழகூட்டுகின்றன.

உணவும் நல்லாவே இருந்தது.

வித்யாசமான புடைப்புச் சிற்ப ஓவியங்கள் கண்ணைக் கவர்ந்ததால் க்ளிக் க்ளிக் தான். :)


கொம்பூதியபடி செல்லும் காவலர். குதிரையில் செல்லும் ராஜா . டோலியில் வரும் ராணி. அழகுச் சிற்பம். உணவுக்கூடம் ( பஃபே ஹால் ) செல்லும் வழியில்.



கிருஷ்ணலீலா. நடனப் பெண்களும் கிருஷ்ணரும் ஆடும் ஆட்டத்தில் உடைகள் பரந்து விரிவது போல் வடிவமைத்திருப்பது அற்புதம். இடையில்லாத இடையர்கள் சிற்ப ஓவியம் அற்புதம்.


யார்னு தெரில. இரவு வானின் நட்சத்திரம். குதிரை வீரன். கொடி வேலுடன் காவலாளிகள். எதிரே உரையாடும் அல்லது எதிராடும் ஒரு பெண்.



உள்ளே சென்றதும் கொஞ்சம் காஃபி குடித்து . ஆசுவாசம் ஆவோம். :)


காலை டிஃபன் , காம்ப்ளிமெண்டரி ப்ரேக்ஃபாஸ்ட். இதில் எல்லா ஹோட்டலும் போல இட்லி, வடை, பணியாரம், அத்துடன் சேமியா வெஜ் கிச்சடி, குழிப்பணியாரம் இருந்தது. வழக்கம்போல துண்டு செய்யப்பட்ட பழங்கள், பழச்சாறு.



அடுத்து ஒரு வெஜ் ஆம்லெட், ப்ரெட் பட்டர் ஜாம்


அங்கே சைடில் ஒரு உழைப்பாளி ஓவியம். கிராமிய மணம் கமழும் மாட்டு வண்டிக்காரரும் தண்ணீர் சுமந்து செல்லும் பெண்மணியும்.


உணவுப் பாத்திரங்களுக்கு பின்னே குஜராத்தி அல்லது ராஜஸ்தானி கிராமத்து ஓவியம்,



வான்கா ஓவியம் போல உணவுக் கூடத்தில் அமர்ந்த்ருக்கும் ஏதோ உழைப்பாளர் ஓவியம்.


சரி ஓவியங்களை பராக்குப் பார்த்துட்டே சாப்பிட்டாச்சு. சூடாக காஃபி குடிச்சிட்டு இன்னைய ப்ரேக்ஃபாஸ்டை முடிப்போம்.


படிக்கருகில் பூச்சாடி ஓவியம்.


பஃபேஹாலின் கதவில் அழகான தங்கநிற இலைகள் பூக்கள்.




ரிஸப்ஷனில் ஆனந்தக் கூத்தாடும் இரு வடநாட்டு மகளிர் ( குஜராத்தி , ராஜஸ்தானி )



லிஃப்டுக்கு எதிரே ஆலிலை விநாயகர்.



மறுநாள் டிஃபன். இன்று பொங்கலும் பைனாப்பிளும். நேற்று அது பப்பாளி. தினமும் அருந்த தர்பூசணிச் சாறு.


எக்ஸ்ட்ராவாக ஹாப் பாயில்ட் முட்டையும் வெஜ் ஆம்லெட்டும் இருவருக்கும். சூடாக தோசையும்.


காஃபி இது இல்லாம டிஃபனா :)

சரி அருமையான உணவும் ஓவியமும் கொடுத்த ஸ்ரீஷாந்துக்கு நன்றி சொல்லிட்டு எழுந்துக்குவோம். :) 


டிஸ்கி :-

இவற்றையும் பாருங்க.

1. சுவாமிமலை ஸ்டெர்லிங்கில் ஒரு இரவு.

2. மணிப்பால், நந்தினி, மடிவாலா.. பெங்களூரா..

3. பாரடைஸ் ரெஸார்ட். 

4. ரிவர்ஸைட் ரெஸார்ட். ( மயூரி) 

5. ரைஸ் & ஸ்பைஸும் தாஜ் சமுத்ராவும்.

6. கேரளா சோழா & ஹைலாண்ட். 

7. கொச்சுவெளி கடற்கரையும் மிதக்கும் உணவகமும். KOCHUVELI BEACH & FLOATING RESTAURANT :-

8. பார்பக்யூ நேஷன் 

9. மை ப்ளேஸ்.

10. குல்பர்கா கோட்டையில் ஜும்மா மசூதி :-

11. பிகேஆரும் இண்டர்காமும். :-

12. ஸ்ரீ சாய் வாசவி கெஸ்ட் ஹவுஸின் பதினைந்து கட்டளைகள்.

13. ராஜ் கோபால் ரெசிடென்சியில் ஒரு விடியல்.

14. கோவை ஆர்வீயின் அசத்தலான உணவுகள். ( SRI AARVEE HOTELS) 

15. சென்னை மெட்ரோவும் ரத்னாகஃபே இட்லி சாம்பாரும்.

16. வஸந்தபவனில் ஒரு பிறந்தநாள் விருந்து. 

17. கேஆர் பேக்ஸ் சாண்ட்விச் , சரஸ்வதி கேஃப் தயிர்வடை & அர்ச்சனா பேல்பூரி & பானிபூரி . 

18. கற்பகம் இண்டர்நேஷனலில் ஒரு பாதுகாப்புப் பெட்டகம்.

19. காஃபிடேயும் க்ரீமி இன்னும் ஆவின் ஜங்க்‌ஷனும். 

20. பெஸ்ட் ஃபில்டர் காஃபி.

21. எங்கும் பாரதி எதிலும் பாரதி.

22. உணவுப் பயணங்கள் . நியூ தில்லி. 

23. கோவளம் மீன்களும் கேரளக் கறி மீனும்.

24. அரஃபிக் ஷவர்மாவும், குப்பூஸும், ஃபிலாஃபிலும், 

25. ழ வில் வலைப்பூ வடை...

26. அரியலூர் மாருதியும் மதுரை ட்யூக்கும்.  

27. ஜெய்னிகா & கார்மெட். 

28. சாந்தியில் ஒரு சாத்வீக சாப்பாடு. 

29. சமணர் படுகையும் சாந்தி இன்னும்.

30. பயண உணவுகள். பால் ஜலேபி.

31. பெருந்துறை ராயல் பார்க்கில் இரு நாட்கள். 

32. திருப்பூரில் ஒரு இல்லம். TIRUPUR - THE HOME !

33. லீலா பேலஸில் ஒரு ரிசப்ஷனும் தேன் பூ செடியும்.

34. நிவேதாஸ் இன்னும் நவம்பர் எட்டும். 

35. தர்மபுரி அதியமான் அரண்மனையில் புத்தர் !

36. பழனியில் சிவா.

37. ராயல் பார்க்கில் கவர்ந்த சில ஓவியங்கள். 


41. ஹொடெல் ஸ்ரீ சாந்த் ஆ, ஸ்ரி சாந்த, ஷ்ரீ ஸாந்தா. ?! 

42. ஸ்ரீ ஷாந்த். காலை உணவும் கண்கவர் ஓவியமும்.

1 கருத்து:

  1. வெங்கட் நாகராஜ்22 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 10:02
    ஓவியங்கள் வெகு அழகு.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu24 ஜூலை, 2017 ’அன்று’ பிற்பகல் 2:12
    படங்கள் மிக அழகு....சாப்பாடும் சேர்த்துதான்..ஹஹஹ

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan2 ஆகஸ்ட், 2017 ’அன்று’ முற்பகல் 10:46
    nandri Venkat sago

    nandri Tulsi sago.


    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.   திருவள்ளுவர் நற்பணி மன்றம்  பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு  திருமதி சுபாஷிணி திருமலை...