எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 4 மே, 2023

அக்கார்ட், மேரி ப்ரவுன், வஸந்தபவன் சந்திப்புகள்.

 அக்கார்ட், மேரி ப்ரவுன், வஸந்தபவன் சந்திப்புகள்.

 முகநூல் நட்புகள் சந்திப்பு சென்னையில் தொடர்ந்து நடந்துகொண்டு இருந்தது நான் அங்கே இருக்கும் வரை. அதன் பின் கொஞ்சம் கொஞ்சமாக அருகிவிட்டது என்றே சொல்லலாம். 

இது வடபழனி நம்ம வீடு வஸந்தபவனின் இளங்கோ மச்சி, தங்கை கீதா அழைப்பிற்கிணங்கக் கலந்து கொண்டது. கையில் கட்டு இருந்தாலும் ( லெகமெண்ட்ஸ் டிண்டான் கிழிந்து சர்ஜரி ) . மதுமிதா, வாணி, பாபு, மகி, நிதீஷ், மோகன், பாகி, கேபிபி நவீன், ஆகியோர் கலந்து கொண்டோம். அக்டோபர் 2 ஆம் தேதி இந்தச் சரித்திரப் பிரசித்தி வாய்ந்த சந்திப்பு நிகழ்ந்தது :) இவர்கள் எல்லாருமே மிகப் பெரிய ஆளுமைகள் என்பது நான் சொல்லாமலே தெரிந்திருக்கும். 


ஞாயிறு, 2 ஏப்ரல், 2023

இரண்டாம் மூன்றாம் நான்காம் சந்திப்புகள்

சென்னையில் இருந்தபோது முகநூலிலும் வலைப்பதிவிலும் எழுதி வந்ததால் நிறைய நண்பர்கள் சந்திக்க விரும்புவார்கள். அப்போது ஸ்டார் ஹோட்டல்களில் முகநூல் சந்திப்பு என்பது பிரபலம். முதன் முதலில் எங்கள் வட்டத்தின் நண்பர்களைச் சந்திக்க புருனேயிலிருந்து வந்திருந்தார் ஜம்மு. இவர் மயிலாடுதுறையைச் சேர்ந்தவர். பெயர் இராஜேஸ்வரி மலரவன். இனி எங்கள் ஜம்முவுடனும் கயல், அன்புடனும்.

இந்த சந்திப்பு ஜூன்1,  அன்று ராதா பார்க் இன்னில் நடந்தது. அன்றைக்கு நாகா, செல்வா, வசு , ஜம்முவின் சகோதரியும் வந்திருந்தார்கள்.தொலைக்காட்சி நடிகர் போஸும் அந்த ஹோட்டலுக்கு வந்திருந்தார்.


வியாழன், 9 மார்ச், 2023

முதலாம் சந்திப்பில்..

முதலாம் சந்திப்பில்..

2010  மே 29, லாமிக்கிள் ஹோட்டலில் முதல் முகநூல் தோழிகள் & நண்பர்கள் சந்திப்பு. இதற்கு முன்பே கயலை மட்டும் நான் சந்திருக்கிறேன். அதாவது முதன் முதலில் எங்கள் வீடு தேடி வந்து என்னை சந்தித்த முகநூல் தங்கை அவர்தான். அது பற்றி தனியா ஒரு போஸ்ட் போடுவேன். 

கயல், செல்வா, செல்வாவின் மனைவி ஜெயந்தி, தம்பி அன்பு, தங்கை தமிழ்ச்செல்வி, அவரின் அழகு மகள் மது , இவர்களோடு பாகி என்று நாங்கள் பாசத்துடன் அழைக்கும் பா கிருஷ்ணன் சார், செந்து என்று நான் அழைக்கும் நண்பர் சொக்கலிங்கம் செந்தில்வேல்,  இவர்களோடு இயக்குநர், நடிகர் சேரன் அவர்களையும் சந்தித்தோம். 

நண்பர் கா வா அவர்களின் பிறந்தநாள் என நினைக்கிறேன். 



கயலும் தமிழும் தேனும் :) 

வெள்ளி, 3 பிப்ரவரி, 2023

லல்லியுடன்.

லல்லியுடன்.

முகநூலில் நாங்கள் மிகவும் நட்பாக இருந்ததோடு மட்டுமல்ல. லல்லியின் வீட்டுக்கும் ஒருமுறை சென்றிருக்கிறேன்.அடையார் ஆனந்தபவனில் அவளுடன் லஞ்ச் சாப்பிட்டிருக்கிறேன். 

கோவை சென்றிருந்தபோது மருதமலை செல்லும் வழியில் லல்லிக்கு ஃபோன் செய்தேன். உடனே தன் ஸ்கூட்டியை எடுத்துக்கொண்டு பிக்கப் செய்ய வந்துவிட்டாள். 

அழகான அருமையான வீட்டில் அம்மாவையும் பார்த்துக்கொண்டு அஷ்டாவதானம் செய்துகொண்டும் இருந்தாள்.( சினிமா டிஸ்ட்ரிப்யூஷனும் கூட !)

வியாழன், 5 ஜனவரி, 2023

பச்சைக் கிளிகளும் தாமரை மண்டபமும்.

பச்சைக் கிளிகளும் தாமரை மண்டபமும்.

ஒரு உறவினர் இல்லத் திருமணத்தில் கலந்து கொண்டேன். மிக மிக க்ராண்டாக காரைக்குடியே வியக்கும் வண்ணம் பி எல் பி பேலஸில் நடந்த திருமணம் அது. அதன் சில காட்சிகளும் உணவு வகைகளும் உங்கள் பார்வைக்கு.

வாசலில் வரவேற்பு அலங்காரம். கார் பார்க்கிங்கிற்கென தனி ஏரியாவே ஒதுக்கி இருந்தார்கள்.
காலை உணவை ப்ரிண்ட் அடித்தே கொடுத்துவிட்டார்கள். பால் பேணி, பாதாம் அல்வா, மைசூர் போண்டா, சிவப்பரிசிப் பணியாரம், பாலக் பூரி, பீட்ரூட் பூரி, இட்லி, பொங்கல், பனீர் தோசை, டாங்கர் சட்னி, அவியல் , சன்னா மசாலா, சாம்பார் என பத்துவகைப் பலகாரம்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...