எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 10 மே, 2022

டிப்ஸ் டிப்ஸ்தான். :)

 

டிப்ஸ் டிப்ஸ்தான். :)

 1. ஃபிரிட்ஜில் ஒரு கப்பில் கடுகு போட்டு நீர் ஊற்றி வைத்தால் ஃபிரிட்ஜில் பல்வேறு பொருட்கள், புளித்த தயிர், புளித்த மாவினால் ஏற்படும் கெட்ட வாடை நீங்கும்.

2.  தங்க நகைகளை ஷாம்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் பிரஷ் போட்டுத் தேய்த்துக் கழுவி உலர்ந்ததும் சிந்தூரப் பொடியால் நாய்த்தோலை வைத்துத் தேய்க்க புதிது போல மின்னும்.

3. வறுத்த கொள்ளுப்பொடி, அரை டீஸ்பூன், வறுத்த பார்லிப்பொடி அரை டீஸ்பூன், ஒரு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா கொத்துமல்லி கருவேப்பிலைத் தழைகள் போட்டு இரண்டு கப் நீரூற்றி வேக வைத்து எடுத்து மசித்து உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பருக உடல் எடை குறையும்.

4.நான்ஸ்டிக் பாத்திரங்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி மிதமான தீயில் வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஹைஃப்ளேமில் சமைத்தால் அதில் உருவாகும் கெமிக்கல் உடலுக்குக் கெடுதல்.

திங்கள், 4 ஏப்ரல், 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை -3

பழனி போன்ற மலைகளில் ஏறுவது ஆறுமுகவேலவனைத் தரிசிக்கத்தான் என்றாலும் வழிப்பயணம் நமக்கு பல ஆன்மீகப் பாடங்களைப் போதிக்கும்.


அதேபோல்தான் ஒவ்வொரு பயணமும். பஸ்/ட்ரெயின்/கார்/ஃப்ளைட்டில் நாம் சென்று அடையும் ஊரில் பார்க்கும் விதம் விதமான இடங்கள் மால்கள், கோவில்கள், தீம் பூங்காக்கள் போல நாம் பயணம் செய்யும் சாலையும் சிறப்பு வாய்ந்ததே. பயணியர், வியாபாரியர், நடைப்பயணம் செல்வோர், விவசாயிகள் வண்டி வாகனங்கள் பறவைகள் கால்நடைகள் எனச் சாலைகளிலும் உயிரோட்டமுள்ள வாழ்வு நிறைந்துள்ளது.

நகருள் அன்றாடப் பணியில் ஈடுபடும் மனிதரையும் கடைகளையும் ஊர் முடிந்ததும் வரும் ஆறு குளம் ஏரி போன்றவையும் மரம் செடி கொடிகளையும் வானத்தையும் பூமியையும் பாறைகளையும் மலைகளையும் பார்க்கும்போது மனம் உற்சாகமடைவதை உணரலாம்.

சூரியன் நம்மோடு ஓடி வருகிறதோ இல்லையோ சந்திரன் கட்டாயம் இரவுப்பயணத்தில் கூடவே ஓடிவரும்.  இன்னும் சில பயணப் பாதைகளைப் பார்க்கலாம் வாங்க.

இது சென்னை டி நகரில் போத்தீஸுக்குச் செல்லும் சாலை. மேலே மேம்பாலத்தில் போனால் பனகல் பார்க் போகலாம். அதிகாலைப் போதில் பிகேஆர் ஹோட்டலில் இருந்து இந்தப் பார்க்குக்கு நடைபழகச் சென்றோம். அப்போது எடுத்தது. பகல் என்றாலோ இரவென்றாலோ கூட்டத்தில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்.


இது ஹைதையில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொண்டாப்பூர் மாதாப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு மேம்பாலம். ஓவியப் பாலம் :)

புதன், 9 மார்ச், 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை - 2

எங்கே செல்லும் இந்தப் பாதை - 2

பயணங்கள் நம்மைப் புதுப்பிக்கின்றன. பயணங்கள் முடிவதில்லை. எனவே வாங்க இன்னும் சில பயணங்களையும் பாதைகளையும், மேலும் கட்டிடக்கலையின் அதிசயமான  இருபக்கமும் ஒரே ஒரு தூணில் கட்டி நிறுத்திய பாலத்தையும் பார்ப்போம், ரசிப்போம்.

இது திருச்சி ரயில்வே ஸ்டேஷன். ஜங்ஷன் என்பதால் நிறைய தண்டவாளப் பாதைகள். இந்த மேம்பாலமும் ட்ரெயின் செல்லும் வரும் வழித்தடமும் அதன் மேல் பொன் நிறம் பூசும் மாலை வெய்யிலும் என்னை மயக்க இந்தப் புகைப்படம் எடுத்தேன்.




கோவை டாடாபாத்தின் ஆறுமுக்கு. ஆறு பிரிவாகப் பிரியும் பாதைகள் இங்கே வித்யாசம். அதில் ஒரு முக்கில் இந்த அம்மன் அருளாட்சி புரிகிறாள். கொள்ளை அழகு இல்ல :)

வெள்ளி, 11 பிப்ரவரி, 2022

எங்கே செல்லும் இந்தப் பாதை - 1.

"LIFE IS A JOURNEY WITH PROBLEMS TO SOLVE AND LESSONS TO LEARN BUT MOST OF ALL EXPERIENCES TO ENJOY. "


பயணங்கள் பலவிதம். நீரின் பயணத்தைப் பற்றி ஒரு பாடல்வரும். அனைவரும் கேட்டிருப்பீர்கள். “தீம்தனனா தீம்தனனா.. நதியே நதியே..”. அதேபோல் சேதுவில் வரும் இப்பாடலும் ”எங்கே செல்லும் இந்தப் பாதை.. யாரோ யாரோ அறிவார்..” பிடிக்கும். ஹைவேஸ், பைபாஸ் சாலைகள் ஓரளவு பரவாயில்லை. ஊருக்குள் செல்லும் மற்ற சாலைகள் எல்லாம் ஒன்னும் சொல்லிக்கிறமாதிரி இல்லை.

அவ்வப்போது பயணங்கள் மேற்கொள்ளும்போது எடுத்த படங்கள் என் கமெண்ட்ஸுடன் உங்கள் பார்வைக்கு. முடிந்தவரை சென்ற பாதைகளை அடையாளப்படுத்த முயல்கிறேன். ( வலைத்தளம் ஆரம்பித்ததே நம் பாதைகளை ஒழுங்குபடுத்தி எழுத்துப் பாதையில் செல்லத்தானே. :) ! இதை வலைப்பதிவர் அனைவரும் ஒப்புக் கொள்வீர்களென நினைக்கிறேன்.


காரைக்குடி டு குன்றக்குடி. பைபாஸ் வழியாக சென்றபோது எடுத்தது..

திங்கள், 10 ஜனவரி, 2022

மன்னை பூர்ணா

 

மன்னை பூர்ணா

 மன்னார்குடி சென்றிருந்தபோது பெரியகடைத்தெருவில் இருக்கும் பூர்ணா லாட்ஜில் தங்கினோம். 

நல்ல வசதியான ஹோட்டல். மன்னார்குடி இப்படி வளர்ச்சி அடைந்து வருவது குறித்து மகிழ்ச்சியாகத்தான் இருக்கு. 

காலை ப்ரேக்ஃபாஸ்ட் எல்லாம் கிடையாது. ஒன்லி போர்டிங்க் மட்டும்தான்.

மூன்று நாட்கள் ரீஸனபிள் காஸ்டில் தங்கி சுற்றி இருக்கும் கோயில்கள் , தோழியர் வீடுகள் எல்லாம் சென்று வந்தேன். 


வரவேற்புப் பெண் வெகு அழகு.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...