நீரின்றி அமையாது உலகு. - 3.ஹுசைன் சாகர் ஏரி.
எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்
செவ்வாய், 2 ஆகஸ்ட், 2022
நீரின்றி அமையாது உலகு. - 3.ஹுசைன் சாகர் ஏரி.
சனி, 9 ஜூலை, 2022
நீரின்றி அமையாது உலகு - 2. தாமரைத் தடாகங்கள்.
நீரின்றி அமையாதுதான் உலகு. ஆனால் இதுபோல் கழிவுகளைக் கொட்டி ஆறு ஏரி ஏன் கடலைக் கூட மாசுபடுத்துகிறோமே இதெல்லாம் சரிதானா.
ஞாயிறு, 5 ஜூன், 2022
நீரின்றி அமையாது உலகு - 1.
நீரின்றி அமையாது உலகு - 1.
செவ்வாய், 10 மே, 2022
டிப்ஸ் டிப்ஸ்தான். :)
டிப்ஸ் டிப்ஸ்தான். :)
1. ஃபிரிட்ஜில் ஒரு கப்பில் கடுகு போட்டு நீர் ஊற்றி வைத்தால் ஃபிரிட்ஜில் பல்வேறு பொருட்கள், புளித்த தயிர், புளித்த மாவினால் ஏற்படும் கெட்ட வாடை நீங்கும்.
2. தங்க நகைகளை ஷாம்பு போட்ட வெதுவெதுப்பான நீரில் பிரஷ் போட்டுத் தேய்த்துக் கழுவி உலர்ந்ததும் சிந்தூரப் பொடியால் நாய்த்தோலை வைத்துத் தேய்க்க புதிது போல மின்னும்.
3. வறுத்த கொள்ளுப்பொடி, அரை டீஸ்பூன், வறுத்த பார்லிப்பொடி அரை டீஸ்பூன், ஒரு தக்காளி, ஒரு கைப்பிடி புதினா கொத்துமல்லி கருவேப்பிலைத் தழைகள் போட்டு இரண்டு கப் நீரூற்றி வேக வைத்து எடுத்து மசித்து உப்பும் மிளகுத்தூளும் சேர்த்துப் பருக உடல் எடை குறையும்.
4.நான்ஸ்டிக் பாத்திரங்களை அதில் குறிப்பிட்டுள்ளபடி மிதமான தீயில் வைத்துத்தான் சமைக்க வேண்டும். ஹைஃப்ளேமில் சமைத்தால் அதில் உருவாகும் கெமிக்கல் உடலுக்குக் கெடுதல்.
திங்கள், 4 ஏப்ரல், 2022
எங்கே செல்லும் இந்தப் பாதை -3
பழனி போன்ற மலைகளில் ஏறுவது ஆறுமுகவேலவனைத் தரிசிக்கத்தான் என்றாலும் வழிப்பயணம் நமக்கு பல ஆன்மீகப் பாடங்களைப் போதிக்கும்.
அதேபோல்தான் ஒவ்வொரு பயணமும். பஸ்/ட்ரெயின்/கார்/ஃப்ளைட்டில் நாம் சென்று அடையும் ஊரில் பார்க்கும் விதம் விதமான இடங்கள் மால்கள், கோவில்கள், தீம் பூங்காக்கள் போல நாம் பயணம் செய்யும் சாலையும் சிறப்பு வாய்ந்ததே. பயணியர், வியாபாரியர், நடைப்பயணம் செல்வோர், விவசாயிகள் வண்டி வாகனங்கள் பறவைகள் கால்நடைகள் எனச் சாலைகளிலும் உயிரோட்டமுள்ள வாழ்வு நிறைந்துள்ளது.
நகருள் அன்றாடப் பணியில் ஈடுபடும் மனிதரையும் கடைகளையும் ஊர் முடிந்ததும் வரும் ஆறு குளம் ஏரி போன்றவையும் மரம் செடி கொடிகளையும் வானத்தையும் பூமியையும் பாறைகளையும் மலைகளையும் பார்க்கும்போது மனம் உற்சாகமடைவதை உணரலாம்.
சூரியன் நம்மோடு ஓடி வருகிறதோ இல்லையோ சந்திரன் கட்டாயம் இரவுப்பயணத்தில் கூடவே ஓடிவரும். இன்னும் சில பயணப் பாதைகளைப் பார்க்கலாம் வாங்க.
இது சென்னை டி நகரில் போத்தீஸுக்குச் செல்லும் சாலை. மேலே மேம்பாலத்தில் போனால் பனகல் பார்க் போகலாம். அதிகாலைப் போதில் பிகேஆர் ஹோட்டலில் இருந்து இந்தப் பார்க்குக்கு நடைபழகச் சென்றோம். அப்போது எடுத்தது. பகல் என்றாலோ இரவென்றாலோ கூட்டத்தில் எள் போட்டால் எண்ணெய் ஆகிவிடும்.
இது ஹைதையில் ரயில்வே ஸ்டேஷனில் இருந்து கொண்டாப்பூர் மாதாப்பூர் செல்லும் வழியில் உள்ள ஒரு மேம்பாலம். ஓவியப் பாலம் :)
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.
கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...

-
வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து. திருவள்ளுவர் நற்பணி மன்றம் பங்களா புதூர். ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு திருமதி சுபாஷிணி திருமலை ...
-
ஃபோர்டெல் ஹோட்டலில் ஏழு நாட்கள். சென்றவருடம் அக்டோபர் மாதம் சென்னை சென்றிருந்தபோது எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஹோட்டலில் தங்கினோம். மிக வசதியா...
-
பயணக் கட்டுரை நூலுக்கு வாழ்த்து மணிமேகலை. ஸ்ரீ சக்தி விருது பெற்றவர். நிமிர்ந்த நன்னடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யார்க்கும் அஞ்சாத...