எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஜனவரி, 2024

தலைவி தந்த அண்ணல்.

காதல் வனம் நூல் வெளியீட்டின் போது எனக்கு முழு ஊக்கம் கொடுத்தவர் அன்புத் தோழி மணிமேகலை அவர்கள். இவர் சாஸ்த்ரி பவன் பெண்கள் சங்கத்தலைவி மற்றும் தலித் பெண்கள் நலச் சங்கத்தலைவி. இரு முறை சிறப்பு விருந்தினராகப் பெண்கள் தினத்தில் அழைத்துச் சிறப்புச் செய்தவர். மகப்பேறு சிறப்பு மருத்துவர்  கமலா செல்வராஜ் மற்றும் அடையார் புற்றுநோய் மையத்தின் தலைவர் மருத்துவர் சாந்தா ஆகியோருடன் சம மேடையில் அமர வைத்தவர். 

நமது நூல் வெளியீடு என்றால் நாம்தான் , நினைவுப் பரிசு, சிறப்புப் பரிசு வழங்கிப் பொன்னாடைபோர்த்துவோம். ஆனால் எனது நூல் வெளியீட்டைத் தனது நூல் வெளியீடாக மகிழ்ந்து எங்கள் இருவருக்கும் பொன்னாடை போர்த்தி மகிழ்ந்ததோடு மட்டுமல்ல. சிறப்புப் பேச்சாளர்களுக்கு அண்ணல் அம்பேத்கார் படத்தை நினைவுப் பரிசாகவும் வந்திருந்த பெண்களுக்குப் “ பெண் ஏன் அடிமையானாள் ?” என்ற பெரியாரின் நூலை நினைவுப் பரிசாகவும் வழங்கி மகிழ்ந்தவர். 

அவர் தனது பால்யகால நினைவுகளையும் தைர்யலெக்ஷ்மியாய்ச் சிறுவயதிலிருந்தே தன்னுள் ஊறிய புரட்சிகர சிந்தனைகளையும் தொகுத்து வரும் மகளிர் தினத்தில் நூலாக்கம் செய்யவிருக்கிறார். அந்நூலை உங்களைப் போல நானும் எதிர்பார்த்து நிற்கின்றேன். 

என் புத்தக வெளியீட்டில் என்னைச் சிறப்பு செய்த அவருக்கு நாங்களும் ஒரு பொன்னாடை போர்த்தி மகிந்தோம்.


எளிமையை விரும்பும் அன்பு மனுஷி இவர். மிகக் கூச்சத்தோடு ஏற்றுக் கொண்டார் :) 

சனி, 2 டிசம்பர், 2023

காதல் வனத்தின் பதிப்பாளர் வேடியப்பன்

காதல் வனத்தின் பதிப்பாளர் வேடியப்பன்

 சென்னை கே கே நகர் டிஸ்கவரி புத்தக நிலைய உரிமையாளர் வேடியப்பனை 2009 இலிருந்தே தெரியும். அவர் புத்தக நிலையம் ஆரம்பித்த புதிது. அப்போது அகநாழிகையின் புத்தக வெளியீடு. நாகரத்னா பதிப்பகம். லாவண்யா சுந்தராஜன், பாரா ஆகியோரின் நூல்கள் வெளியாகின. 

அதன் பின் கேபிள் சங்கர் & பரிசல் கிருஷ்ணா ஆகியோரின்  நூல் வெளியீடு அங்கே மாடியில் நடந்தது. அரங்கம் கொள்ளாத வலைப்பதிவர் கூட்டம். இதுவரை மூன்றுமுறை தன் தோற்றத்தைப் பொலிவு படுத்திக் கொண்டது டிஸ்கவரி. 

சகோ வேடியப்பனைச் சந்திக்கும்போது அவர் தன் வலைப்பதிவு பற்றிக் கூறினார். மதிவதனி கைக்குழந்தை. அதன்பின் அவரது சகோதரன் சஞ்சயின் திருமணம். வேடியப்பன் மகன், சஞ்சயின் பிள்ளைகள் என அவர்கள் குடும்பத்தினர் நட்பு தொடர்ந்து கொண்டிருந்தது. 2012 இலேயே நான் சென்னையிலிருந்து வந்துவிட்டாலும் அவ்வபோது முகநூல், கைபேசி மூலம் தொடர்பு கொண்டிருந்தோம். 

இதுவரை வெளியான பதிமூன்று நூல்களில் எனது எல்லா நூல்களும் அங்கே விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. எனது முதல் நூல் நண்பர் செல்வகுமாரின் மூலம்  கரிசல் மீடியாவால் ( மகேந்திரன் )  பதிப்பிக்கப்பட்டது. ஆனால் வெளியீடு 36 ஆவது புத்தகக் கண்காட்சியில் டிஸ்கவரியின் அரங்கில்தான். மாபெரும் கூட்டம். ஓரளவு நல்ல விற்பனையும் கூட. அதன் தொகையையும் எனக்கு அவர் அப்படியே கொடுத்தார். 

எனது ஐந்தாவது நூலான சிவப்புப் பட்டுக் கயிறை அவரே வெளியிட்டார். கிருஷ்ணப் ப்ரபு அவர்களின் எடிட்டிங்குடன் அந்நூல் சிறப்பாக வெளிவந்தது. டிஸ்கவரியின் க்ளாசிக் நூல் பிரிவில் வெளிவந்த அதை கிருஷ்ணப் ப்ரபு “இந்நூல் வெகு ஜனம், மற்றும் இலக்கியம் இரண்டுக்கும் நடுவில் ஒரு தடத்தில் பயணிக்கிறது. நல்ல ரீச் ஆகும் என்றார்.” அதன்படியே அந்நூல் இரண்டாவது பதிப்பும் கண்டது.

திங்கள், 6 நவம்பர், 2023

ஃபோர்டெல் ஓட்டலில் எட்டுநாட்கள் ஃப்ரேக்ஃபாஸ்ட்.

ஃபோர்டெல் ஓட்டலில் எட்டுநாட்கள் ஃப்ரேக்ஃபாஸ்ட்.

 சென்னை எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஓட்டலில் எட்டு நாட்கள் நாங்கள் தங்கி இருந்தோம். அப்போது ஒவ்வொரு நாளும் காலையில் காம்ப்ளிமெண்டரி ஃப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்தார்கள். அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். நல்ல விசாலமான டைனிங் ஹால். எக்மோருக்கு ரொம்பப் பக்கம் என்றாலும் துளிக்கூடத் தூசியோ சத்தமோ இல்லை. 

பலவகையான உணவுகள் காலையில். ஃப்ரெட் ஆம்லெட், ப்ரெட் டோஸ்ட், கார்ஃப்ளேக்ஸ் மில்க், ஓட்ஸ் கஞ்சி, அவித்த முட்டை, ஆலு பரோட்டா, ஸ்வீட் ஒன்று, தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லி/புதினா/தக்காளிச் சட்னி, சாம்பாருடன் இட்லி, ஊத்தப்பம், வடை, பொங்கல், கிச்சடி, பழ வகைகள், அவித்த சோளம், பயறு வகைகள், சாலட்டுகள், வெஜிடபிள் ஸ்லைஸஸ், டெசர்ட்டுகள், கேக்குகள்,  பழச்சாறுகள், காஃபி, டீ என்று அசத்தலான சத்துள்ள உணவுகள். 

மூன்று பேர் தங்கி இருந்தோம். எனவே எல்லார் ப்ளேட்டையும் அவ்வப்போது சேர்த்து எடுத்துள்ளேன் மக்காஸ். சேமியா பாயாசம், அவித்த முட்டை. சாம்பார் இட்லி, தேங்காய்ச் சட்னி, ஆலு பரோட்டா, தயிர், ஊறுகாய், பைனாப்பிள், தர்ப்பூசணி, பப்பாளிப் பழத்துண்டுகள், அவித்தசோளம், பழச்சாறு. பாலில் கார்ன்ஃப்ளேக்ஸ். 


வெள்ளி, 1 செப்டம்பர், 2023

க்ரீமி இன்னில் சில இனிப்பான சந்திப்புகள்

க்ரீமி இன்னில் சில இனிப்பான சந்திப்புகள்

 சென்னை கே கே நகரில் இருக்கும் க்ரீமி இன்னில் ஆஸ், லதா, அருண் ஆகியோரைச் சந்தித்தேன். ஆஸ்வின் என் சாதனை அரசிகள் நூலில் இடம் பெற்றவர். டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி. நீங்க நினைக்கிற டாக்டர் இல்ல இவங்க. டாக்டரேட் பட்டம் பெற்றவங்க. மிக அருமையான எழுத்தாளர். என் ப்லாகுல சாட்டர்டே போஸ்ட்ல இயற்கை பற்றி அற்புதமா எழுதிக் கொடுத்திருக்காங்க. மிகச் சிறந்த கவிதாயினி. ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கு. (டிஸ்கவரியில் கிடைக்கும் ) அகமதாபாத்தில் இருக்காங்க. அங்கே ( வதோதராவுக்கு )  நான் வந்திருக்கேன்னு சொன்னவுடனே தன்னோட வண்டிய எடுத்துக்கிட்டு எங்களப் பார்க்க வந்தாங்க. கை நிறைய அமுல் சாக்லேட்டுகளோட. 

CREAMY INN WITH OSWIN 21 JULY 2011

என்ன ஐஸ்க்ரீம் ஆர்டர் கொடுக்கலாம்னு அருண் பேசிக்கிட்டு இருக்காரு ஆஸு கூட. எனக்கு கஸாட்டாதான் பிடிக்கும். ஆனா இங்கேயோ விதம் விதமான ஐஸ்க்ரீம்ஸ். சாப்பிட்டா வயிறு ரொம்பிரும். டாப்பிங்க்ஸும் பலவிதம். ஸாஸ், நட்ஸ் என்று க்ராண்டா இருக்கும். 


என் முன்னே இருக்கவங்க யார்னு சொல்லுங்க பார்ப்போம். கயலம்மாதான் :) 

கயல் வருமுன்னாடி ரெண்டு குண்டூஸும் அருண்கிட்ட காமிராவைக் கொடுத்து எங்களைப் படம் எடுக்கும்படிச் சொன்னோம். பாவம் மனுஷன் எங்களைக் காமிராவுக்குள்ள அடைக்கிறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டார். 
அருண் வீட்டுக் கொலு பற்றி இரண்டு இடுகைகள் போட்டிருக்கேன். ஒருவருஷம் கயலோடயும் ஒரு வருஷம் வசுவோடயும் போயிருக்கேன். வெள்ளிக் கொலு ரொம்ப விசேஷம். வெள்ளியிலான பாத்திரங்களை சீரா வைச்சி அடுக்கி இருந்தாங்க. 

இந்தப் படம் போதுமா. :) என் தம்பியின் மகனும் மகளும் லீவுக்கு வந்திருந்தாங்க. அவங்களையும் கூட்டிப் போனேன். 

எங்களுக்கெல்லாம் கப்பில் ஐஸ். ஆஸுவுக்கு மட்டும் கோன் ஐஸ். :) 



அதே போல் சிங்கையிலிருந்து தங்கை லதா வந்தபோதும் க்ரீமி இன்ன் போனோம். லதாவின் மகன் அர்ஜுனின் செஸ் டோர்னமெண்டுக்காக வந்திருந்தாங்க. அவனோட சாம்பியன்ஷிப் பத்தி என் ப்லாகில் முன்னேயே எழுதி இருக்கேன்..

CREAMY INN WITH LATHA.. 24.JULY 2011

இது எங்க வீட்டுக்கு வந்திருந்தபோது. பேசிப் பேசி அவ எனக்கு தூரத்துச் சொந்தக்காரின்னும் கண்டுபிடிச்சோம்.



இதுதான் க்ரீமி இன்னில் அர்ஜுனுடன். கொஞ்சம் ஓவரா சிரிச்சிட்டனோ :)


லதாவின் அழைப்பின் பேரில் (தாமதமாக வந்து) செல்வாவும் கலந்து கொண்டார். 

இரண்டு மூன்று முறை லதா சென்னை வந்தபோதெல்லாம் என்னைப் பார்த்துச் சென்றிருக்கிறாள். எங்கங்கோ தூரத்தில் இருந்தாலும் எண்ணங்களின் ஒற்றுமையால் முகநூலின்வழி இணைந்தோம். ஐஸ்க்ரீமைப்போல நினைக்கும்போதெல்லாம் தித்திக்கும் நட்பு நமது. நன்றி லதா. & நன்றி ஆஸ்வின் & அருண்.

கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி.

  கல்கி குழும பவளவிழா குறும்படப் போட்டி. தமிழ்ப் புத்தாண்டுக்குள்ள நீங்க ஒரு சிறந்த கதையாசிரியர், ( திரைக்கதை ), வசனகர்த்தா, இயக்குநர் என்பத...