க்ரீமி இன்னில் சில இனிப்பான சந்திப்புகள்
சென்னை கே கே நகரில் இருக்கும் க்ரீமி இன்னில் ஆஸ், லதா, அருண் ஆகியோரைச் சந்தித்தேன். ஆஸ்வின் என் சாதனை அரசிகள் நூலில் இடம் பெற்றவர். டாக்டர் ஆஸ்வின் ஸ்டான்லி. நீங்க நினைக்கிற டாக்டர் இல்ல இவங்க. டாக்டரேட் பட்டம் பெற்றவங்க. மிக அருமையான எழுத்தாளர். என் ப்லாகுல சாட்டர்டே போஸ்ட்ல இயற்கை பற்றி அற்புதமா எழுதிக் கொடுத்திருக்காங்க. மிகச் சிறந்த கவிதாயினி. ஒரு கவிதைத் தொகுதி வெளிவந்திருக்கு. (டிஸ்கவரியில் கிடைக்கும் ) அகமதாபாத்தில் இருக்காங்க. அங்கே ( வதோதராவுக்கு ) நான் வந்திருக்கேன்னு சொன்னவுடனே தன்னோட வண்டிய எடுத்துக்கிட்டு எங்களப் பார்க்க வந்தாங்க. கை நிறைய அமுல் சாக்லேட்டுகளோட.
CREAMY INN WITH OSWIN 21 JULY 2011
என்ன ஐஸ்க்ரீம் ஆர்டர் கொடுக்கலாம்னு அருண் பேசிக்கிட்டு இருக்காரு ஆஸு கூட. எனக்கு கஸாட்டாதான் பிடிக்கும். ஆனா இங்கேயோ விதம் விதமான ஐஸ்க்ரீம்ஸ். சாப்பிட்டா வயிறு ரொம்பிரும். டாப்பிங்க்ஸும் பலவிதம். ஸாஸ், நட்ஸ் என்று க்ராண்டா இருக்கும்.
என் முன்னே இருக்கவங்க யார்னு சொல்லுங்க பார்ப்போம். கயலம்மாதான் :)
கயல் வருமுன்னாடி ரெண்டு குண்டூஸும் அருண்கிட்ட காமிராவைக் கொடுத்து எங்களைப் படம் எடுக்கும்படிச் சொன்னோம். பாவம் மனுஷன் எங்களைக் காமிராவுக்குள்ள அடைக்கிறதுக்குள்ள படாத பாடு பட்டுட்டார்.
அருண் வீட்டுக் கொலு பற்றி இரண்டு இடுகைகள் போட்டிருக்கேன். ஒருவருஷம் கயலோடயும் ஒரு வருஷம் வசுவோடயும் போயிருக்கேன். வெள்ளிக் கொலு ரொம்ப விசேஷம். வெள்ளியிலான பாத்திரங்களை சீரா வைச்சி அடுக்கி இருந்தாங்க.
எங்களுக்கெல்லாம் கப்பில் ஐஸ். ஆஸுவுக்கு மட்டும் கோன் ஐஸ். :)
அதே போல் சிங்கையிலிருந்து தங்கை லதா வந்தபோதும் க்ரீமி இன்ன் போனோம். லதாவின் மகன் அர்ஜுனின் செஸ் டோர்னமெண்டுக்காக வந்திருந்தாங்க. அவனோட சாம்பியன்ஷிப் பத்தி என் ப்லாகில் முன்னேயே எழுதி இருக்கேன்..
CREAMY INN WITH LATHA.. 24.JULY 2011
இது எங்க வீட்டுக்கு வந்திருந்தபோது. பேசிப் பேசி அவ எனக்கு தூரத்துச் சொந்தக்காரின்னும் கண்டுபிடிச்சோம்.
இதுதான் க்ரீமி இன்னில் அர்ஜுனுடன். கொஞ்சம் ஓவரா சிரிச்சிட்டனோ :)
லதாவின் அழைப்பின் பேரில் (தாமதமாக வந்து) செல்வாவும் கலந்து கொண்டார்.
இரண்டு மூன்று முறை லதா சென்னை வந்தபோதெல்லாம் என்னைப் பார்த்துச் சென்றிருக்கிறாள். எங்கங்கோ தூரத்தில் இருந்தாலும் எண்ணங்களின் ஒற்றுமையால் முகநூலின்வழி இணைந்தோம். ஐஸ்க்ரீமைப்போல நினைக்கும்போதெல்லாம் தித்திக்கும் நட்பு நமது. நன்றி லதா. & நன்றி ஆஸ்வின் & அருண்.
Thenammai Lakshmanan28 அக்டோபர், 2020 அன்று பிற்பகல் 5:52
பதிலளிநீக்குவலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு
Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University29 அக்டோபர், 2020 அன்று முற்பகல் 7:31
மகிழ்ச்சி
பதிலளிநீக்கு
Thenammai Lakshmanan28 டிசம்பர், 2020 அன்று முற்பகல் 1:56
நன்றி ஜம்புசார் :)
வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!
பதிலளிநீக்கு