தஞ்சைப் பெருவுடையார் கோவில். மை க்ளிக்ஸ். TANJORE BIG TEMPLE. MY CLICKS.
தஞ்சைப் பெரிய கோவில் பற்றியும் மன்னன் ராஜராஜசோழனின் பராக்கிரமம் பற்றியும் முன்பே எழுதி இருக்கிறேன். நவராத்திரி சமயம். இது இப்போது கும்பாபிஷேகம் நடந்ததும் சென்று எடுத்தபுகைப்படங்கள். கோயில் பளிச்சென்று புத்துணர்ச்சியோடு இருக்கிறது.
சிவகங்கைப் பூங்கா, அரண்மனை எல்லாம் இதன் பக்கம்தான். இந்தக் கோயில் ஒரு கோட்டைக்குள் அமைந்திருப்பது போல அரண் சூழ அமைந்துள்ளது. சுற்றிலும் அகழி மற்றும் ட்ரபீசிய வடிவ காவலர்தூண் கொண்ட மதில்கள்.