எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 9 ஜூலை, 2022

நீரின்றி அமையாது உலகு - 2. தாமரைத் தடாகங்கள்.

 நீரின்றி அமையாதுதான் உலகு. ஆனால் இதுபோல் கழிவுகளைக் கொட்டி ஆறு ஏரி ஏன் கடலைக் கூட மாசுபடுத்துகிறோமே இதெல்லாம் சரிதானா. 


ஹைதையில் உள்ள ஹுசைன் சாகர் ஏரியின் ஒரு பகுதிதான் இது. ப்ளாஸ்டிக் மிதக்கும் கழிவு நீராகி உள்ளது. நிறைய இடங்களில் சாக்கடையையும் கூட நதிகளில் ஏரிகளில் இணைத்துவிடுகிறார்கள். என்ன கொடுமை இது 

இது திருச்செந்தூர் பகுதியில் உள்ள ஒரு உப்பளமாக இருக்கவேண்டும். இடம் இப்போது ஞாபகம் வரவில்லை. 


கும்பகோணம் பாலாறுதான் துர்க்கந்தத்தோடு இந்தக்கதியில் இருக்கிறது 


பிள்ளையார்பட்டிக் கோவில் புஷ்கரணி. எனவே கம்பிப் பாதுகாப்பில் பூரண சுகந்தமாக இருக்கிறது. 


சுற்றிலும் தென்னைகள். நடுவில் பிள்ளையார்பட்டிக் கோவில் தீர்த்தம். விநாயகர் சதுர்த்தியின்போது இங்கே உள்ள படியில் இறங்கித்தான் கும்பம் சொரிந்து கொள்வது. 


மாத்தூர்கோவிலின் வெளிப்புறமுள்ள தாமரைத் தடாகத்தின் அருகில் இந்த அடி பம்பு உள்ளது. இதில் குடி தண்ணீர் அடித்துக் குடிப்பார்கள். தீர்த்தப் ப்ரோக்‌ஷணம் செய்து கொண்டு கோவிலுக்குள் போவதுமுண்டு. 


காரைக்குடி வாட்டர்டாங்க் பிள்ளையார் கோவிலுக்கு அருகில் உள்ள தாமரைத் தடாகம். ஊருணி.  இதன் பக்கம் ஒரு ஐயனார் கோவிலும் உண்டு. 


ஊருணி நீர் நிறைந்தற்றே உலகவாம்
பேரறி வாளன் திரு. 

என்று நிரம்பித் ததும்பிக் கொண்டிருந்தது இந்த ஊருணி. 

இது 2012 இல் எடுத்த புகைப்படம். ஆனால் இன்றோ இது வரண்டு காய்ந்து போய் ஒவ்வொரு வெய்யிலிலும் பொட்டைக்காடாய் எரிகிறது. இப்போது கரைகளை உயர்த்தி ஏதோ கட்டிக் கொண்டிருந்தார்கள். 

இனி மழை வந்துதான் நிரம்பவேண்டும். அதன் பின் தான் தாமரை அல்லி எல்லாம் பார்க்கலாம்.

இதுவும் பாலாறே. ஒருபாலத்தில் இருந்து எடுத்தது. 

இதன் இன்னொரு பக்கத்தில் ரிவர் வியூ ரெஸார்ட் என்ற ஹோட்டல் இருப்பது குறிப்பிடத்தக்கது ( கும்பகோணம். ) 

இது குன்றக்குடியில் மலையேறும்போது இடும்பன் சந்நிதியில் எடுத்தது. தூரத்துக் கம்மாய் ( கண்மாய் ) நிரம்பிப் பயிர் பச்சை எல்லாம் தளிர்த்துக் கிடக்குது பாருங்க. 


இதுவும் பிள்ளையார்பட்டிக் கோவில் ஊருணிதான்.


மேலே இருக்கும் இந்த ஊருணி மாமல்லபுரத்தில் இருக்கு. தாமரைகள் மொக்காக நிற்க அல்லிகள் பெருவாரியாகக் காணப்படுகின்றன. 

இது நெல்லிமரத்துப் பிள்ளையார் கோவில் & காரைக்குடிச் சிவன்கோவில் ஊரணி. வெகு அழகு இல்லையா. 
இது மாத்தூர்க் கோவிலின் ஊருணி. மனிதர்கள் சம்ப்ரோக்‌ஷணம் செய்து கொள்ள வசதியாக இருந்தது முன்பு. ஆனால் மனிதர்கள் தொடுகையோ காலடியோ படாத இடங்களில் அல்லியும் தாமரையும் மலர்ந்து விரிந்து எழில் கூட்டுகின்றன. 

முன் இடுகையில் கோவில் தீர்த்தங்களாகப் பார்த்தோம். இந்த இடுகையில் அநேக கோவில் ஊருணிகள் தாமரைத் தடாகங்களாகப் பொலிவதைப் பார்த்தோம். கண்ணுக்கும் கருத்துக்கும் விருந்து :)

1 கருத்து:

  1. திண்டுக்கல் தனபாலன்8 ஆகஸ்ட், 2020 அன்று பிற்பகல் 9:21
    ஊரணி அழகோ அழகு...

    பதிலளிநீக்கு

    ஸ்ரீராம்.9 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 5:33
    படங்களில் முழுகிப் போனேன்.

    பதிலளிநீக்கு

    வெங்கட் நாகராஜ்9 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 11:59
    படங்கள் நன்று. நீர்நிலைகளைப் பாதுகாக்க வேண்டிய அவசியத்தினை மக்கள் இன்னும் உணரவில்லை என்றே தோன்றுகிறது.

    பதிலளிநீக்கு

    Thulasidharan V Thillaiakathu10 ஆகஸ்ட், 2020 அன்று முற்பகல் 8:28
    நீர்நிலைகளின் படங்கள் அழகாக இருக்கின்றன.

    துளசிதரன்

    படங்கள் அழகு. ஆனால் நீர்நிலைகள் பாதுகாக்கப்படாமல் இருப்பதுதான் மனதிற்கு வேதனை அளிக்கின்றது. மக்கள் என்று இதை உணர்வார்களோ

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan12 ஆகஸ்ட், 2020 அன்று பிற்பகல் 2:40
    நன்றி டிடி சகோ

    நன்றி ஸ்ரீராம் !!!

    நன்றி வெங்கட் சகோ.. உண்மைதான்.

    நன்றி துளசி சகோ ஆம் கீத்ஸ். உண்மையான ஆதங்கம்.

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...