எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 23 மார்ச், 2026

கலைமாமணி விருது விழா அழைப்பிதழ்..

கலைமாமணி விருது விழா அழைப்பிதழ்..


சங்கமத்தில் கலந்து கொண்ட அனைவருக்கும் அனுப்பப்பட்டிருக்கும் என நினைக்கிறேன்.. எனக்கும் தமிழ்நாடு இயல் இசை நாடக மன்றத்திலிருந்து அழைப்பிதழ் வந்தது.
சா. கந்தசாமி., நாஞ்சிலார்., ராஜேஷ் குமாருக்கு கலைமாமணி விருது வழங்கப்பட்டிருப்பது கண்டு மகிழ்வாய் இருந்தது. மிகுந்த கூட்டமாய் இருக்கும் என நினைக்கிறேன் அன்று வள்ளுவர் கோட்டத்தில்..
கலைமாமணி., பாரதி., எம்.எஸ். சுப்புலெக்ஷ்மி., பாலசரஸ்வதி மற்றும் சின்னத்திரை விருது வாங்கும் அனைவருக்கும் வாழ்த்துக்கள்..!!!

செவ்வாய், 17 மார்ச், 2026

இளமைத்தமிழ் போட்டிகள்.

 இளமைத்தமிழ் போட்டிகள்.

முகநூல் நண்பர் திரு. ராஜு ரமேஷின் பக்கத்தில்  திரு பாலு மணிமாறன் அவர்கள் பகிர்ந்திருந்தை இங்கே போட்டிருக்கிறேன். பங்குபெறுங்க. பரிசு பெறுங்க.
 
////சிங்கப்பூர் உயர்நிலைப் பள்ளி, தொடக்கக் கல்லூரி மாணவர்களுக்கான கதை, கவிதை, கட்டுரை, புகைப்படம், காணொளி போட்டிகளோடு இளமைத்தமிழ்.காம். மாதம்தோறும் $450 ரொக்கப்பரிசு! உங்கள் பிள்ளைகளையும், உங்களுடைய நண்பர்களின் பிள்ளைகளையும் பங்கேற்கச் சொல்லி ஊக்கமூட்டுங்கள்! நன்றி!!
www.ilamaithamizh.com



 டிஸ்கி :- இது சிங்கப்பூர் மாணவர்களுக்கு மட்டும்தானாம். ஏன் அனைத்து மாணவர்களுக்கும் கூட வைக்கலாமே. :) தமிழில் ஈடுபாடு உள்ள அனைத்துச் சிறார்களும் பங்கேற்று மகிழ்வார்களே.  விருப்பமிருக்கும் மாணாக்கர்களின் பங்களிப்பு இருந்தால் இணையத் தமிழ் இலக்கியம் இன்னும் சிறப்பாக வளர்ச்சி பெறும். ஆவன செய்வார்கள் என நம்புகிறேன்.

சனி, 14 மார்ச், 2026

திசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரசு.

 திசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரசு.

புதுகையில் நமது திருவிழா. - 2015. ( நான்காம் ஆண்டு உலக வலைப்பதிவர் மாநாடு. )

வலைப்பூ சாமிக்குப் புதுகையில் தேரோட்டம்.
கூகுளாண்டவருக்கு உவகையில் கொண்டாட்டம்.

அக்டோபர் 11, ஞாயிறு அன்று காலையில் ஆரோக்கியமாதா மக்கள் மன்றத்தில் காலை 9 முதல் மாலை 5 வரை உலகத்தையும் உள்ளத்தையும் வலையில் வரையும் வலைப்பதிவர் மாநாடு நடக்க இருக்கிறது.

அதற்கு வலைப்பதிவர்களாகிய நாங்கள் அனைவரும் உங்களை வரவேற்கிறோம். ப்லாகர், கூகுள் ப்ளஸ், ஃபேஸ் புக், ட்விட்டர், வாட்ஸப் ஆகியவற்றில் நிகழ்வுகளைப் பகிர்ந்து நிறையப் பேருக்குக் கொண்டு செல்லுங்கள். திசையெட்டும் கொட்டட்டும் நமது திருவிழாவுக்கான முரசு.


போட்டிகளும் பரிசுகளும்  கவிதை ஓவியங்களுமாகக் காத்துக் கொண்டிருக்கிறது புதுகை. இணையத்தோடு இணைந்து தமிழ் இணையக் கல்விக் கழகமும் கைகோர்க்க ஐந்து போட்டிகள்., ஐம்பதாயிரம் ரூபாய் பரிசுகள்.!!! முதன் முறையா தமிழ்நாடு அரசும் இதன் மூலமா நம்மை கௌரவிச்சிருக்காங்க. அப்புறம் வேறென்னங்க வேணும்.



தமிழிசைப் பாடல்கள் உங்கள் காதுகளில் தெம்மாங்காய் ஒலிக்கக் காத்திருக்கின்றன.

புத்தகக் கண்காட்சியும் விற்பனையும் இருக்கு. ஏன் புது நூல் வெளியீடுகளும் இருக்கு. சகோதரர் கரந்தை ஜெயக்குமாரின் ”வித்தகர்கள்” நூலை வெளியிடுபவர் எழுத்தாளர் ஹரணி, பெறுபவர் வெ. சரவணன். த.ஆ. சகோதரர் மலேசியா தவரூபன் எழுதிய ” ஜன்னல் ஓரத்து நிலா” நூலை வெளியிடுபவர் நந்தவனம். கி. சந்திரசேகரன், பெறுபவர் நம் அனைவரின் மதிப்பிற்குமுரிய சகோதரர் திண்டுக்கல் தனபாலன். வாழ்த்துகள்  கரந்தை ஜெயக்குமார் சகோ & மலேசியா தவரூபன் சகோ. 

இதில் பங்குபெறும் முனைவர் சொ.சுப்பையா, துணை வேந்தர், அழகப்பா பல்கலைக் கழகம்,  முனைவர் நா. அருள் முருகன், முதன்மைக் கல்வி அலுவலர், கோவை, நிறுவனர், கணனித் தமிழ்சங்கம் , புதுக்கோட்டை, அ. ரவி சங்கர், திட்ட இயக்குநர், விக்கி மீடியா இந்தியா ,முனைவர் மா. தமிழ்ப்பரிதி, உதவி இயக்குநர், தமிழ் இணையக் கல்விக் கழகம், சென்னை, முனைவர் எஸ். இராமகிருஷ்ணன், எழுத்தாளர், வலைப்பதிவர், சென்னை. ஆகியோரையும் வாழ்த்தி வரவேற்கிறோம்.

பதிவர் அறிமுகம் விருது வழங்கலோடு விருந்தும் வழங்குறாங்க. வலைப்பதிவர் கையேடும் கையோடு கொடுத்துச் சிறப்பிக்கிறாங்க.

பாடுபட்டு ஒருங்கிணைக்கும் புதுகைக் குழுவினருக்குப் பாராட்டுகள். இதை முன்னெடுத்துச் சிறப்பாகச் செய்யும் முத்துநிலவன் சகோவுக்கும் திண்டுக்கல் தனபாலன் சகோவுக்கும் எவ்வளவு நன்றி கூறினாலும் போதாது.

புதுகை கணினித் தமிழ்ச்சங்கமும் புதுகை வலைப்பதிவக் குழுவினரும் ( முத்துநிலவன் சகோ,தங்கம் மூர்த்தி, இரா. ஜெயலெக்ஷ்மி, மு. கீதா, ச. கஸ்தூரி ரெங்கன், பொன். கருப்பையா, கு. ம. திருப்பதி, க. குருநாத சுந்தரம், வைகறை, மீரா செல்வகுமார், ராசி. பன்னீர்செல்வன், பா. ஸ்ரீ. மலையப்பன், மகா. சுந்தர், ஆர். நீலா, அ. பாண்டியன், மைதிலி, கா. மாலதி, த. ரேவதி, ஸ்டாலின் சரவணன், சு. மதியழகன், சு. இளங்கோ, எஸ். ஏ. கருப்பையா, தூயன், பா. கார்த்தி, நா. க. பாலாஜி, சு. துரைக்குமரன், நண்பன் கார்த்திக், சோலச்சி, சுரேஷ்மான்யா, சிவா. மேகலைவன் ) உங்களை சந்திக்க ஆவலோடு மிகப் பிரம்மாண்டமான ஏற்பாடுகளோடு காத்திருக்காங்க. 

நன்றிக்குரிய நமது நண்பர்களுக்கும் வாழ்த்துகள். ( புதுக்கோட்டை ஜெ. ஜெ. கல்வி நிறுவனங்களின் தாளாளர் கவிதா சுப்ரமண்யன் எனது உறவினர் என்று இங்கே சொல்லிக் கொள்வதில் பெருமகிழ்வு அடைகிறேன். ) இவர்களுடன் நட்புக்கரம் கோர்த்து பதிவர் விழாவினை சிறப்பிக்க உதவும் தஞ்சாவூர் பாரத் கல்விக் குழுமத்துக்கும் திருக்கோகர்ணம், ஸ்ரீ வெங்கடேஸ்வரா மெட்ரிக் மேல்நிலைப் பள்ளிக்கும் எங்கள் மனமார்ந்த நன்றிகள்.


புதுகைத் தென்றல் வீச உவகையோடு காத்திருக்கோம் உங்க வருகைக்காக.

சீக்கிரம் கிளம்புங்க.. ஜல்திபோவோம் சலோ சலோ. புதுகைக்குப் போவோம் சலோ சலோ.

இது நமது திருவிழா. விழாக்குழுவினராகவும் வரவேற்கிறோம்.வாங்க.

வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும். !
என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!!

டிஸ்கி :- இவ்விடுகை வெளியிடக் காரணமாயிருந்த துளசி சகோ & கீத்ஸுக்கும், மதுமதிக்கும் நன்றி :)

திங்கள், 2 மார்ச், 2026

வாஷிங்டனில் புறநானூறு.

வாஷிங்டனில் புறநானூறு.

வாஷிங்டனில் திருமணம் என்ற புத்தகத்தை எழுதியவர் சாவி . மறக்கமுடியாத நகைச்சுவைப் புதினம் அது. 

தமிழுக்குச் சேவை செய்யும் நோக்கோடு இந்த வாஷிங்டனில் புறநானூறு மாநாடு பற்றி முகநூலில் பார்த்தேன். உங்களுடன் பகிர்ந்து கொள்கிறேன்.

///வாசிங்டன் வட்டாரத் தமிழ்ச் சங்கமும் வட அமெரிக்கத் தமிழ்ச்சங்கப் பேரவையும் இணைந்து நடத்தும் பன்னாட்டு மாநாடு : புறநானூறு
வாசிங்டன் DC

ஆகஸ்ட் 31, 2013 – செப்டம்பர் 2, 2013

58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும்.

 58 ஆவது தேசிய திரைப்பட விழாவில் விருதுக்கு வாழ்த்துக்கள் ஜீவாவுக்கும்., திரிசக்திக்கும். நண்பர் ஜீவாவின் ஓவியங்கள் அற்புதமானவை.. அவர் எழுதி...