எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

சம்மர் டூர் அடித்த பிரபலங்கள்..

சம்மர் டூர் அடித்த பிரபலங்கள்..

போன மே மாதம் எங்கே போயிருந்தீங்க.. இந்த மே மாதம் எங்கே போய் வந்தீங்க.. எந்த ஊர் பார்க்கலாம் என்று நம்ம வாசகர்களுக்குச் சொல்லுங்க என்று சில பிரபலங்களிடம் கேட்டோம். அவங்க சொன்ன் ஜில் ஜில் ஸ்பாட்ஸ் பத்தி படிச்சிட்டு.. ஜில்லுன்னு ஒரு விசிட் அடிங்க..
முதலில் மாணிக்க விநாயகம் சார்.. ஷூட்டிங்கல படு பிஸி .. அவர ஒரு வழியா காண்டாக்ட் பண்ணி கேட்டபோது .,” இந்த வருடம் மலேஷியாவுக்கு கலை நிகழ்ச்சிக்காக போகிறேன். குடும்பத்தோட பழனி., திருச்சி., மாயவரம்., தஞ்சாவூர் போய் வந்தேன். ஷூட்டிங்குக்காக எல்லா ஊரும் நாடும் போனாலும் எனக்கு நம்ம நாட்டில் இருக்கிற ஆன்மீகத்தலங்கள் தான் பிடிக்கும். பழனி ஆண்டவர் தரிசனத்துக்கு ஈடா ஏதாவது உண்டா என்ன.. வொகேஷனுக்குன்னு சொன்னா குடும்பத்தோட சிங்கப்பூருக்கு போன மே மாதம் போய் வந்தேன்.

பொதுவா எனக்கு தமிழ்நாடுதான் பிடிக்கும். ஏன்னா நம்ம ஊரில் இல்லாதது உலகத்தில் இல்ல. இங்கேயே கோடை வெய்யிலுக்கு இதமா கோடை வாசஸ்தலங்கள் ஊட்டி., கொடைக்கானல்., ஏற்காடு., குத்தாலம்., ஹொகனேக்கல்னு வெரைட்டியா இருக்கு. நல்ல க்ளைமேட். இயற்கையின் நலம் அனைத்தும் இங்கேயே கிடைக்குது. மூலிகைக் காற்று., மூலிகைத்தண்ணீர் எல்லாம் அதிக செலவில்லாமல் கிடைக்குது. நம்ம பட்ஜெட்டுக்கு ஏத்த மாதிரி குழந்தைகள் விருப்பத்துக்கு ஏத்த மாதிரி போகலாம். இந்த கோடையில் ஃப்ளவர் ஷோ., சீசன் எல்லாம் ஆரம்பிக்குது. நிம்மதியா என்ஜாய் பண்ணனும்னா நம்ம நாடுதான் என் சாய்ஸ்.

அடுத்து பாடகி ரெனினா ரெட்டி.. தேன் குரலில் பேட்டி கொடுத்தாங்க.. இந்த வருடம் சிங்கப்பூர் ., மலேஷியா., தாய்லாண்ட் போயிட்டு வந்தேன். சிங்கப்பூருக்கு 12 முறை போயிருக்கேன். இந்த 20 ஆம் தேதி ஸ்விஸ்ஸுக்கும்., டோராண்டோவுக்கும் ப்ராபபலி ஜூனில் அமெரிக்காவுக்கும் போகிறேன். எல்லாம் வொர்க் பேஸ்டுதான். சிங்கப்பூர் .,மலேஷியா போனா உணவு ப்ரச்சனையில்லை.. எங்காவது சைவ உணவு கிடைக்கும். தாய் ஃபுட்டில் வெஜ் என்பது கஷ்டம்தான்.. ஏன்னா அவங்க உணவுல உப்பு சேர்த்துக்குறது இல்லை.. ஷ்ரிம்ப் சால்ட் என்னும் பொருளை எல்லா உணவுலயும் போடுவாங்க. ஃபிஷ் சாஸ் எல்லாம் சேர்த்து சாப்பிடுவாங்க. சைவம் மட்டும் சாப்பிடுறவங்களுக்கு தாய் புட் கஷ்டம்.

நான் எப்பவும் ம்யூசிக் கன்சர்ட்க்காகவும். வொர்க் பேஸ்டாகவும் செல்வதால் அதிகம் ஷாப்பிங்க் பண்ண முடியாது

ஹாலிடேக்கு குழந்தைகளை அழைத்துச் செல்ல சிங்கப்பூர் பெஸ்ட் ப்ளேஸ். அங்கே டிஸ்னிலாண்ட் எல்லாம் இருக்கு. அமெரிக்காவுக்கு குடும்பத்தோட போகலாம். ஆனால் அங்கே இருக்குற மாதிரியே சிங்கப்பூரிலும் டிஸ்னிலாண்ட்எல்லாம் இருப்பதால் இங்கேயே சீஃப் அண்ட் பெஸ்ட். பொதுவா ஒரு வாரம் அல்லது 5 நாள் ப்ளான் பண்ணிப் போகலாம். சென்னை மாதிரி ஃப்ளூயன்ஸி இருக்கும் என்பதால் எனக்கு சிங்கப்பூர் பிடிக்கும்.

நடிகை வேகாவுக்கும் ரொம்ப ஸ்வீட் வாய்ஸ்.. வானம் படத்துல நடிச்சவங்க. அவங்களுக்கு சத்தீஸ்கர்தான் பிடிக்குமாம். ஏன்னா து அவங்க தாத்தா, பாட்டி இருக்கிற ஊர். எப்ப டைம் கிடைச்சும் அவங்க விசிட் பண்ண விரும்புற ஊர் சத்தீஸ்கர்தான்.

போன வருடம் இஸ்தான்புல்., டர்க்கி., (TURKY)., எல்லாம் போய் வந்தாங்களாம். இந்த வருடம் டைம் கிடைக்கலை. எப்பவும் ஷூட்டிங்கில் பிஸி. போன வருடம் மைசூர்., பெங்களூர் எல்லாம் போய் வந்தாராம். மிக அழகான ஊர்கள் என்றார். காஷ்மீர் ரொம்பப் பிடிக்கும் என்றார்.. எல்லாரும் காஷ்மீர்., பெங்களூர் போகலாம் . பெஸ்ட் ப்ளேசஸ் என்றார். எப்ப ஷூட்டிங்கில் கொஞ்ச நாள் காப் கிடைச்சாலும் போக விரும்பும் ஊர் தன் சொந்த ஊரான சத்தீஷ்கர்தான் என்றபோது அவர் குரலில் அவ்வளவு மகிழ்ச்சி.

பாடலாசிரியர் விவேகா ஆஸ்கார் ஃபிலிம்ஸ் பாடல் கம்போசிங்குக்காக சென்றுவிட்டு அப்போதுதான் ஏற்காட்டிலிருந்து டைரக்டர் ., மியூசிக் டைரக்டருடன் திரும்பி இருந்தார். எக்ஸ்யூஸ்மி மிஸ்டர் கந்தசாமி ... சாரி விவேகா (!) உங்க வொகேஷன் பயண அனுபவங்கள சொல்லுங்கன்னு சொன்னோம்.

வொகேஷனுக்கு ஃபாமிலியோட ஊட்டிக்குப் போய் வந்தேன். ஆஸ்கார் ஃபிலிம்ஸுக்காக ஏற்காட்டில் ஜிஆர்டியில் தங்கி இருந்தேன் டைரக்டர்., ம்யூசிக் டைரக்டருடன். மிக அருமையான இடம். அப்புறம் பெங்களூருவும் போய் வந்தோம்.

எனக்கு பிடித்த இடம்னா கேரளாதான். அங்கே போட் ஹவுஸ் நல்லா இருக்கும். படகு வீட்டில் தங்கும்போது மீன் பிடித்து சுடச் சுட வறுத்துத் தருவாங்க. எல்லாரும் விசிட் பண்ணுறதுக்கு கேரளா பெட்டர். மூணாறும் அழகிய இடம். நம்ம ஊர்ல சாத்தனூர் டேம் பிடிக்கும். தென்பெண்ணையாற்றங்கரையில் கட்டப்பட்டுள்ளது. இதுக்கும் போய்ப் பாருங்க . இயற்கை அழகு கொட்டிக் கிடக்கும்.

யுத்தம் செய்யில் அம்மாவா வந்து மிரட்டிய லெட்சுமி ராமகிருஷ்ணனுக்கு 3 பெண்கள். அவர்களில் இரண்டாவது பெண் டில்லியில் படிக்கிறார். மிக அருமையாக படிப்பதால் மெரி்ட்டில் எஸ் ஆர் சி சி யில் இடம் கிடைத்து்ப் படிக்கிறார். பெண்களைப் பற்றிச் சொல்லும் போது பெருமை வழிகிறது தாயின் குரலில். லெட்சுமிக்கு ஷூட்டிங்கும் டெல்லியில் இருப்பதால் மகளுடன் அனைவரும் டெல்லிக்கு செல்கிறார்கள்.

இவர் கிட்டத்தட்ட 17 வருடங்கள் அப்ராடில்( மஸ்கட்) இருந்ததால் இவருக்கு அப்ராட்தான் பிடித்த இடமாயிருக்கிறது. ஷூட்டிங்க்குக்கு ஹைதராபாத்., பின் டெல்லி., அதன்பின் ராஜஸ்தான் செல்லும் ப்ளான். அங்கே வைல்ட் லைஃப் சாங்க்சுவரி பார்க்கப்போகிறார்கள்.

ஷாப்பிங் பண்ணக்கூடாதுன்னு இருப்பேன். மூணு பெண் குழந்தைகள் இருக்காங்க.. கைவினைப் பொருட்கள் என்றால் பிடிக்கும். ஏதாவது கட்டாயம் வாங்கி விடுவேன் என்கிறார். எல்லாரும் செல்ல இவர் எல்லா வெளிநாடுகளும் பெஸ்ட் என்றும் குறிப்பாக ஸ்விட்ஜர்லாந்து என்றும் சொல்கிறார்.

நீங்களும் இந்த மே மாதத்தில் எங்காவது குடும்பத்தோடு சென்று என்ஜாய் செய்ங்க..

டிஸ்கி:- ஜூலை 2011 சூரியக்கதிரில் இந்தக் கட்டுரை வெளிவந்துள்ளது:))

1 கருத்து:

  1. சி.பி.செந்தில்குமார்8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:45
    mudhal முதல் சுற்றுலா பயணி

    பதிலளிநீக்கு

    'பரிவை' சே.குமார்8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 1:56
    சுற்றுலா... நல்ல உலா அக்கா...
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

    Unknown8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 3:51
    நல்ல பதிவு
    காணாத இடங்களை
    நேரில் கண்டது போல அமைந்துள்ளது
    நன்றி!

    புலவர் சா இராமாநுசம்
    என் வலைப் பக்கம்
    வருக

    பதிலளிநீக்கு

    Menaga Sathia8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:23
    அருமையா தொகுத்து தந்திருக்கீங்க,வாழ்த்துக்கள் அக்கா!!

    பதிலளிநீக்கு

    Rathnavel Natarajan8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:43
    அருமையான பதிவு.
    வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

    Muniappan Pakkangal8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:44
    Nice,neenhga enga poneenga

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 5:29
    சுற்றுலா பற்றிய சுவையான பதிவு.

    பதிலளிநீக்கு

    tamilvaasi8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 6:04
    ஊ லலல்லா..நல்ல உலா..

    பதிலளிநீக்கு

    கோவை நேரம்8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 7:41
    மத்தவங்க போனது தானா? நீங்க எங்கேயும் போகலையா...?

    பதிலளிநீக்கு

    இராஜராஜேஸ்வரி8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:18
    சுற்றுலா அழைத்துச்சென்ற அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

    Chitra8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 8:53
    nice.

    பதிலளிநீக்கு

    சாந்தி மாரியப்பன்8 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 9:47
    நீங்க எங்கே சம்மர் டூர் போனீங்கன்னு சொல்லவேயில்லையே தேனக்கா :-)))

    நீங்களும் பிரபலம்தானே :-))

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:28
    நன்றி சிபி., குமார்., புலவர் ராமானுசம்., மேனகா., ரத்னவேல் ஐயா., முனியப்பன் சார்., கோபால் சார்., ப்ரகாஷ்., கோவை நேரம்., ராஜி., சித்து., சாந்தி..

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan24 ஆகஸ்ட், 2011 ’அன்று’ பிற்பகல் 4:29
    வலைப்பதிவர் ஒற்றுமை ஒங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...