எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

வியாழன், 31 டிசம்பர், 2020

அபிராமி ராமனாதனின் ”ரோபோ” பால அபிராமி..

அபிராமி ராமனாதனின் ”ரோபோ” பால அபிராமி..

இந்தியாவில் முதன்முதல் ஷாப்பிங் மாலோடு கூடிய திரையரங்குகளை உருவாக்கியது அபிராமி. சைனீஸ்., ஸ்பானிஷ்., ஈஜிப்டியன் முறைப்படி கட்டப்பட்ட திரையரங்குகளின் நேர்த்தி கண்டு வியந்திருக்கிறேன். நேற்று ரோபோ பால அபிராமி திரையரங்கு திறப்பு விழா. அதில் ப்ரஸ்ஸும்., ஃப்ரெண்ட்ஸும் உறவினர்களும் மட்டும் அழைக்கப்பட்டிருந்தார்கள். வேறொரு விஷயம் வேண்டி ராம் சாருக்கு போன் செய்தபோது இது பற்றி கூறி வர சொன்னார்கள். அழைப்புக்கு நன்றி ராம் சார். ஏற்கனவே கூட்டம் பொங்கி வழிகிறது அபிராமி மாலில். இந்த ரோபோ திரையரங்கு இன்னும் கூட்டம் சேர்க்கும். குழந்தைகளுக்கான 3டி படங்கள்., மற்ற படங்களும் திரையிடப்படும்.
மிக நவீனமான முறையில் திரை( அமெரிக்காவிலிருந்து கப்பலில் மிகுந்த சிரத்தையுடன் கொண்டுவரப்பட்டது.) ., 3 டி படம் பார்க்கவென்றே அமைக்கப்பட்டுள்ளது. சாதாரணப்படம் ஒளிபரப்பப்பட்டபோது மிக அற்புதமாக இருந்தது. வீட்டில் அமர்ந்து பார்ப்பதற்கும் இதுபோல திரையரங்கில் அமர்ந்து பார்ப்பதற்கும் நிறைய வித்யாசம்தான். தொழில் நுட்பங்களோடு கூடிய படங்களை டிடிஎஸ் எஃபக்டில்., இன்க்ளைனேஷன் சேரில் அமர்ந்து இண்டர்வெல்லில் தியேட்டருக்குள் ஸ்நாக்ஸோடு ருசிப்பது நல்ல அனுபவம்.


சேர்கள் கூட ரோபோ தியேட்டருக்காக ஸ்பெஷலாக வடிவமைக்கப்பட்டுள்ளன. ஒரு ஸ்பேஸ் ஷிப்பில் அமர்ந்து இருந்தால் ஏற்படும் உணர்வு ஏற்படுகிறது. இதை வடிவமைத்த ராஜ்குமாருக்கும் மற்ற தொழில் நுட்பக்கலைகலைஞர்களுக்கும் திருமதி நல்லம்மை நன்றி தெரிவித்தார். தங்களுக்காக பணிபுரியும் அனைவரையும் பெயர் கூறி அறிமுகப்படுத்திச் சிறப்பித்தார் நல்லம்மை.. இவர்களின் தொடர் வெற்றிக்கு அனைவரையும் தங்களோடு இணைத்துக் கொள்வதும் ஒரு காரணம் என உணர்ந்தேன். என் கணவர் பல வருடங்களுக்கு முன் இங்கே படம் பார்த்திருக்கிறார். போனமாதம் நானும் என் கணவரும் இங்கேதான் சிங்கையில் குருஷேத்திரம் என்ற ஒரு சமூக அக்கறையுள்ள படத்தைப் பார்த்தோம். இங்கே இருக்கும் ஈஜிப்டியன் மதர் (MOTHER ISIS-- GODDESS OF CHARM AND FERTILITY) என்னை மிகவும் கவர்ந்தார். அன்னையர் தினத்தில் அவரையும் தரிசித்தேன்.




திரு அபிராமி ராமநாதன் அவர்கள் கனிவு பொங்கும் பார்வை., கற்கண்டுப் புன்னகைக்குச் சொந்தக்காரர். மிக கம்பீரமும் அதே சமயம் எளிமையுமானவர். வொயிட் அண்ட் வொயிட் அணிந்து பார்ப்பவருக்கே புத்துணர்ச்சியூட்டக் கூடியவர். ஒரு மனிதன் மனிதனாக மட்டும் செய்யப்படவில்லை. மனிதநேயத்தாலேயே செய்யப்பட்டிருக்கிறார் என்று சொல்வேன். “எங்கள் தந்தையார் சம்பாதிப்பதில் 25 சதவிகிதம் திரும்ப தொழிலிலேயே முதலீடுக்கும்., 25 சதவிகிதம் குடும்பத் தேவைகளுக்கும்., 25 சதவிகிதம்
பிற்கால வாழ்விற்கும்., 25 சதவிகிதம் தானமாகவும் செலவு செய்யணும் என்று சொல்லி இருக்காங்க. அதுபடி நான் என் பிறந்த ( பூலாங்குறிச்சி) ஊரில் 30 லட்ச ரூபாய்க்கு சோலார் லைட்ஸ் போட கொடுக்கிறேன் என திரு லட்சுமணன் அவர்களிடம் கொடுத்தார்கள். அதையும் தன் திரையுலக நண்பர்கள் கையால் கொடுக்கச் செய்து அனைவரையும் இணைத்துச் சிறப்பித்தார்கள்.



திரு விடுதலை பேசும்போது சூழ்நிலைக்கேற்ப அபிராமி தன்னை மேம்படுத்திக்கொண்டே வருவதுதான் அதன் வெற்றியின் சிறப்பு என்றார்..



திரு கஸ்தூரிராஜா பேசும்போது ஒரு குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒரே நேர்க்கோட்டில் பயணிப்பதை இந்தக் குடும்பத்தில்தான் பார்ப்பதாக கூறினார். தலைவன் எவ்வழியோ அதே வழியில் மனைவியும் பிள்ளைகளும்., பேரன் பேத்திகளும் துணையும் தோளும் கொடுப்பதால்தான் இவ்வளவு வெற்றிகளும் என கூறினார்.


திரு கேஆர்ஜி., திரு ராமநாராயணன்., திரு விசி குகநாதன்., திரு அண்ணாமலை ஆகியோரும் வாழ்த்து தெரிவித்தார்கள். தொகுத்து வழங்கிய சிறுவன் பேரன் என நினைக்கிறேன். மிக அருமையாக தொகுத்தார். வரவேற்புரையை திரு சிவலிங்கமும்( மகன்) ., ஏற்புரையை திருமதி நல்லம்மையும் ( மனைவி)., நன்றியுரையை மகளும் வழங்கினார்கள்.

மேதகு மனிதரின் சக்தி... திருமதி நல்லம்மைதான் இவ்வளவு பெருமுயற்சிக்கும் பின்னணி. !!! விடாமுயற்சி., அனைவரையும் இணைத்துச் செல்லும் நற்பண்பு., நிர்வாகத்திறமை பொருந்தியவர்கள். 40 க்குப் பின்பும் சாதிக்க முடியும் என்பதை நிரூபித்தவர்கள்.. !!!

மிக இனிய பொன்மாலைப்பொழுதாக அது இருந்தது. சினிமா பிரபலங்கள் நிறைந்திருந்தார்கள் . தொலைக்காட்சி., பத்ரிக்கை நிருபர்கள் குழுமி புகைப்படங்களும் சலனப்படங்களும் எடுத்துத் தள்ளினார்கள். நாமும் பின்னாடி அமர்ந்து கொஞ்சம் சங்கோஜத்தோடு ( தனிப்பட்ட பேட்டி என்றால் நான் முன்னால் செல்வேன். நிறைய கூட்டத்தைப் பார்த்ததும் மிரட்சியாகிவிட்டது) நம்ம லூமிக்ஸ் காமிராவில் சுட்டது எல்லாம் உங்க பார்வைக்கு மக்காஸ். சென்னைக்கு வந்தால் அபிராமிக்கு விசிட் செய்யுங்கள். வெளிநாட்டு மால்களுக்கெல்லாம் சவால் விடும் மால்கள் சென்னையிலும் வந்தாச்சு. குழந்தைகளோடு பெரி்யவர்களும் குழந்தைகளாகலாம். அங்கே இன்னும் ஸ்நோ வேர்ல்ட்., டாஷிங் கார்ஸ். , எல்லாம் துபாய் மால் போல இருக்கு. அடுத்து ராம் சார் குழந்தைகளுக்கான ஒரு 3டி சினிமா எடுக்கப்போவதாக சொன்னார். அது சீக்கிரம் வெளிவர வாழ்த்துக்கள் ராம் சார்.. வாழ்க வளமுடன்... நலமுடன்...!!!

1 கருத்து:

  1. Chitra9 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:11
    Super news!!! சென்னையை பற்றிய லேட்டஸ்ட் தகவல்களுக்கு, அக்கா ப்லாக் வாசித்தாலே போதும் போல. :-)

    பதிலளிநீக்கு

    தமிழ் உதயம்9 மே, 2011 ’அன்று’ முற்பகல் 11:55
    நாம் செய்கின்ற தொழில், பொழுது போக்கு அம்சங்கள் கொண்டவையாக இருப்பின் - இயல்பாகவே அதன் மீத அதீதமான நாட்டம் வந்துவிடும். அதோடு நேர்மை, உழைப்பு, விடாமுயற்சி போன்றவையும் சேர்ந்து விட்டால் - கிடைக்க போகிற வெற்றியை பற்றி சொல்லவே வேண்டாம். தொழிலை போலவே வெற்றியும் பிரமாண்டமானதாய் இருக்கும். அதற்கு அபிராமி ராமநாதன் அவர்கள் மிக பெரிய உதாரணம்.

    பதிலளிநீக்கு

    குடந்தை அன்புமணி9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:23
    நிகழ்ச்சித் தொகுப்பு அருமை. தொழிலில் வெற்றிபெற ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு கணக்கு. அபிராமிராமநாதன் குடும்பத்தினர் கணக்கு மிரமிக்க வைக்கிறது.
    http://thagavalmalar.blogspot.com/2011/05/blog-post.html வாருங்கள்...இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது.

    பதிலளிநீக்கு

    கவிதை வீதி... // சௌந்தர் //9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 12:50
    அறிய மற்றும் புதிய செய்தி...
    பகிர்ந்தனைக்கு நன்றிகள்

    பதிலளிநீக்கு

    வை.கோபாலகிருஷ்ணன்9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:07
    நல்லதொரு செய்தி. பகிர்வுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    இராஜராஜேஸ்வரி9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 3:29
    வீட்டில் அமர்ந்து பார்ப்பதற்கும் இதுபோல திரையரங்கில் அமர்ந்து பார்ப்பதற்கும் நிறைய வித்யாசம்தான். // நிறைய புதிய் செய்திகளுடன் அருமையான் பகிர்வு. பாராட்டுக்கள்.

    பதிலளிநீக்கு

    சக்தி கல்வி மையம்9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 6:20
    புத்தம் புதிய தகவலுக்கு நன்றி.

    பதிலளிநீக்கு

    செந்தில்குமார்9 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:30
    சுட சுட சூடான தகவல் ... அக்கா

    அருமையான தொகுப்பு....

    பதிலளிநீக்கு

    Prabu M10 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 5:56
    ரொம்ப சுவாரஸ்யமான தகவல்....
    உங்க நடையில் மெட்ராஸுக்கு டிக்கெட் புக் பண்ணத் தூண்டுது.....

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:26
    நன்றி சித்து

    நன்றி ரமேஷ்

    நன்றி குடந்தை அன்புமணி

    நன்றி சௌந்தர்

    நன்றி கோபால்சார்

    நன்றீ ராஜி

    நன்றி கருன்

    நன்றி செந்தில்

    நன்றி பிரபு.

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan16 மே, 2011 ’அன்று’ பிற்பகல் 7:27
    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும்.!
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும்.!

    பதிலளிநீக்கு

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை  திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பி...