என்ன படிப்பாய் ? கோகுலம் படிப்பேன். !
வார்த்தை விளையாட்டு என்ற இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சி என்னவென்றால் ஒரு நிமிடம் ஆம் இல்லை என்று ஒற்றை வார்த்தையில் பதில் சொல்லாமல் உரையாட வேண்டும். ஒரே வார்த்தையை மூன்று முறைக்குமேல் உபயோகிக்கக் கூடாது. இதுதான் ரூல்ஸ்.
கல்கி பவளவிழாக் கொண்டாட்டத்தின் ஒரு பகுதியாக இந்த நிகழ்வும் கல்கி நிறுவன ஊழியர்களின் குழந்தைகளுக்காகக் கோகுலத்தின் சார்பில் கடந்த ஜூன் 11 அன்று நிகழ்த்தப்பட்டது. ஈக்காடுதாங்கலில் கல்கி அலுவலக மாடியில் ஷாமியானா , சேர்கள், மின் விசிறிகள் போடப்பட்டிருந்தது.
கல்கி குழும நிர்வாக இயக்குநர் திருமதி லெக்ஷ்மி நடராஜன் நிகழ்வை ஆரம்பித்து வைத்தார். கோகுலம் பொறுப்பாசிரியர் உயர்திரு லதானந்த் அவர்கள் இந்த ஒரு நிமிடம் நிகழ்ச்சியை நிகழ்த்தினார்கள். இதில் முதலில் வந்தவர் பெயர் தர்ஷன். இவர் ஒரே வார்த்தையில் முடியும் என்று எதற்கோ பதில் சொல்லிவிட்டு விலகினார். கோகுலம் ஆசிரியர் உரையாடலில் கில்லாடி என்றாலும் குழந்தைகளின் தவறை அதிகபட்சம் விட்டுக் கொடுத்தார்.:)
அடுத்தடுத்து வந்த பிள்ளைகளின் பெயர் ஞாபகம் இல்லை. ஆனாலும் ஒவ்வொருவரும் ஒவ்வொரு வார்த்தையில் அல்லது ஒரே வார்த்தையை மூன்றுமுறை கூறி அவுட்டானார்கள்.