எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 ஜூன், 2024

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

 அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். :) 

ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது ) 


என்னப்பா நம்மளக் கூப்பிட்டுத் தேன் இப்பிடி ஒரு புக்கை வெளியிடுறா.. என்று கூறுகிறார் தோழி மணிமேகலை :) 


ஆழ்ந்து வாசிக்கிறார் சிறப்பு விருந்தினர் மணிமேகலை சித்தார்த்தன். 




பின்னர் அது பற்றியும் சிறப்பாக உரையாற்றினார். 

சீத்தலைச் சாத்தனார் இருந்திருந்தால் இவர்களைப் பார்த்துப் பெருமை அடைந்திருப்பார். 

காவிரி மைந்தன் அவர்களுடன் 


குறிப்புகளோடு தயாராய் இருக்கிறார் தோழி மணிமேகலை. 

புத்தகத்தில் இருந்து எடுத்துக்காட்டுகளோடு உரையாற்றினார் மணிமேகலை சித்தார்த்தன். பாடல்களும் அழகாகப் பாடினார் ! 



மலர்ந்த முகத்தோடு அவர் உரையாடியது காணக் கண் கோடி வேண்டும். 








மொத்தத்தில் இரு மணிமேகலைகளும் கலந்து கொண்டு காதல் வனத்தை வனப்பாக்கினார்கள். 


நன்றி சிறப்பாக நூலாக்கம் செய்து வெளியீட்டு விழாவும் நடத்திய டிஸ்கவரி புக் பேலஸ் திரு வேடியப்பன் அவர்களுக்கும், கலந்து கொண்ட உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும், சிறப்பு விருந்தினர் மணிமேகலை சித்தார்த்தன் அவர்களுக்கு, தோழி மணிமேகலை அவர்களுக்கும் :)

1 கருத்து:

  1. 3 கருத்துகள்:

    Thulasidharan V Thillaiakathu6 ஜூன், 2021 அன்று 11:15 AM
    வாழ்த்துகள் தேனு. இங்கு தளத்தில் வந்து கொண்டிருந்ததே...

    கீதா

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan23 ஜூன், 2021 அன்று 1:03 AM
    ஆம் கீத்ஸ். அதைத் தளத்தில் இருந்து எடுத்துவிட்டு நூலாக்கம் செய்துவிட்டேன். அமேஸானிலும் கிடைக்கிறது. ஆடியோ நூலாகவும் கிடைக்கிறது பாக்கெட் எஃப் எம்மில்:)

    பதிலளிநீக்கு

    Thenammai Lakshmanan20 ஜூலை, 2021 அன்று 12:42 AM

    வலைப்பதிவர் ஒற்றுமை ஓங்கட்டும் !
    என்றும் நம்முள் வலிமை பெருகட்டும் !!

    பதிலளிநீக்கு

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!!

நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி !!! நாட்டு மக்களுக்கோர் நற்செய்தி நற்றமிழ்ப் புலமை கற்றவர்க்கோர் நல்ல வாய்ப்பு. :) திருவிளையாடல் ஞாபகம் வந்திர...