எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

திங்கள், 3 ஜூன், 2024

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

காதல் வனத்தில் மணிமேகலைகள்.

 அதிசயமான விஷயம் ஒன்று உண்டென்றால் அது காதல் வனம் நூலை வெளியிட்டவர்கள் , பெற்றுக் கொண்டவர் இருவருமே மணிமேகலைகள். காதலை வெறுத்த துறவி மணிமேகலையின் பெயர் கொண்ட இருவரும் எனது காதல்வனம் நூலைப் படித்துப் பார்த்தார்கள் வெளியிடும் முன். :) 

ஒருவர் எனது அன்பிற்குரிய தோழி சாஸ்திரி பவன் பெண்கள் சங்கத் தலைவி, தலித் பெண்கள் நலச் சங்கத் தலைவி மணிமேகலை. இன்னொருவர் பேராசிரியை மணிமேகலை சித்தார்த்தன். ( இவரது பெயரில் இருவரின் பெயருமே காதலையும் இல்வாழ்வையும் துறந்தவர்களாக இருப்பது ஆச்சர்யத்துக்குரியது ) 


என்னப்பா நம்மளக் கூப்பிட்டுத் தேன் இப்பிடி ஒரு புக்கை வெளியிடுறா.. என்று கூறுகிறார் தோழி மணிமேகலை :) 

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.

வாழ்நாள் சாதனையாளர் சுபாஷிணிக்கு வாழ்த்து.   திருவள்ளுவர் நற்பணி மன்றம்  பங்களா புதூர்.  ஈரோடு மாவட்டம். தமிழ்நாடு  திருமதி சுபாஷிணி திருமலை...