ஃபோர்டெல் ஓட்டலில் எட்டுநாட்கள் ஃப்ரேக்ஃபாஸ்ட்.
சென்னை எக்மோரில் உள்ள ஃபோர்டெல் ஓட்டலில் எட்டு நாட்கள் நாங்கள் தங்கி இருந்தோம். அப்போது ஒவ்வொரு நாளும் காலையில் காம்ப்ளிமெண்டரி ஃப்ரேக்ஃபாஸ்ட் கொடுத்தார்கள். அவற்றை இங்கே பகிர்ந்துள்ளேன். நல்ல விசாலமான டைனிங் ஹால். எக்மோருக்கு ரொம்பப் பக்கம் என்றாலும் துளிக்கூடத் தூசியோ சத்தமோ இல்லை.
பலவகையான உணவுகள் காலையில். ஃப்ரெட் ஆம்லெட், ப்ரெட் டோஸ்ட், கார்ஃப்ளேக்ஸ் மில்க், ஓட்ஸ் கஞ்சி, அவித்த முட்டை, ஆலு பரோட்டா, ஸ்வீட் ஒன்று, தேங்காய்ச் சட்னி, கொத்துமல்லி/புதினா/தக்காளிச் சட்னி, சாம்பாருடன் இட்லி, ஊத்தப்பம், வடை, பொங்கல், கிச்சடி, பழ வகைகள், அவித்த சோளம், பயறு வகைகள், சாலட்டுகள், வெஜிடபிள் ஸ்லைஸஸ், டெசர்ட்டுகள், கேக்குகள், பழச்சாறுகள், காஃபி, டீ என்று அசத்தலான சத்துள்ள உணவுகள்.
மூன்று பேர் தங்கி இருந்தோம். எனவே எல்லார் ப்ளேட்டையும் அவ்வப்போது சேர்த்து எடுத்துள்ளேன் மக்காஸ். சேமியா பாயாசம், அவித்த முட்டை. சாம்பார் இட்லி, தேங்காய்ச் சட்னி, ஆலு பரோட்டா, தயிர், ஊறுகாய், பைனாப்பிள், தர்ப்பூசணி, பப்பாளிப் பழத்துண்டுகள், அவித்தசோளம், பழச்சாறு. பாலில் கார்ன்ஃப்ளேக்ஸ்.