எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

செவ்வாய், 2 ஏப்ரல், 2024

காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 காதல் வன வெளியீட்டில் நெல்லை உலகம்மை

 திருநெல்வேலியைச் சேர்ந்த நெல்லை உலகம்மை என் அன்புத்தோழி. கல்வி ஆலோசகர், சிறப்புப் பேச்சாளர், தன்னம்பிக்கைப் பயிற்சியாளர், கணேஷ் ஐ ஏ எஸ்ஸின் அட்மினிஸ்ட்ரேட்டிவ் ஆஃபீசர், இன்னும் சொல்லிக்கொண்டே செல்லலாம். என் சிவப்புப் பட்டுக் கயிறு நூல் வெளியானதும் முதலில் வந்து வாங்கிப் பாராட்டியவர். 

காரைக்குடி அழகப்பா பல்கலையின் ஆசியான் கவிஞர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியவர். எப்போதும் உள்ளம் நிறைந்த புன்னகை மலர்ந்த அவர் முகத்தைப் பார்த்தாலே நம் உடலிலும் மனதிலும் எனர்ஜி ஏறிவிடும். 

எனது காதல்வனம் நூல் வெளியீட்டிலும் அவர் கலந்து கொண்டு பொன்னாடை எல்லாம் போர்த்தி வாழ்த்தினார். அந்த அன்பு உள்ளத்துக்கு என் மனமார்ந்த நன்றிகள். 


பயணங்களில் தொலைதல்..

பயணங்களில் தொலைதல்.. கிருத்திகாதரனின் ஒரு போஸ்டை முகநூலில் படிக்க நேர்ந்தது. அதில் ஒரு வரி ” பணக்காரங்களும் புகழ் பெற்றவங்களும்  தான் தானாக ...