எனது 24 நூல்கள்

எனது 24 நூல்கள்
எனது இருபத்து நான்கு நூல்கள்

சனி, 4 செப்டம்பர், 2021

பிள்ளையார் நோன்புப் பலகாரங்கள்.

 

பிள்ளையார் நோன்பு கொண்டாடுவதுபற்றி இரண்டு மூன்று செவிவழிக் கதைகள் உண்டு. மார்கழி மாதம் சஷ்டியும் சதயமும் கூடும் நாள் பிள்ளையார் நோன்பு. இது பெரிய கார்த்திகையில் இருந்து 21 ஆம் நாள் வரும்.

வணிக நிமித்தம் கடல் கடந்து சென்ற சாத்து குழுவினர்/நானா தேசிகர் ஒருமுறை புயலில்சிக்கி இருபத்தி ஒரு நாட்கள் கழித்துச் சொந்த ஊர் வந்து சேர்ந்தனர். அந்த இருபத்தி ஒரு நாட்களும் தேசிகநாதரை வழிபட்டனர்.அப்போது   தம்மிடம் இருந்த கோடித்துணியில் ஒவ்வொரு  இழையாக எடுத்து வைத்து விநாயகரை வணங்கி வந்தனர். தம்மைக் காத்த  விநாயகரை நினைத்துத் அந்த இருபத்தி ஒரு இழைகளையும் சேர்த்து மாவில் விளக்குப் போல் செய்து விநாயகருக்கு தீபம் காட்டி வழிபட்டனர். அப்போது ஏழுவிதப் பொரிகள் பொறித்து, பதினாறு வகைப் பலகாரம் செய்து ஆவாரம்பூ வைத்து வழிபாடு செய்தனர். 

அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 )

  அமரர் கல்கி நினைவுச் சிறுகதைப் போட்டி ( 2017 ) இந்த ஆண்டும் கல்கி போட்டிக்கு எழுதி அனுப்புங்க. பரிசு கட்டாயம் கிடைக்க வாழ்த்துகள். முதல் ப...