பலகாரம் பதினொண்ணு
சமையலுக்காக ஒரு வலைத்தளம் தமிழ் மற்றும் ஆங்கிலத்தில் எழுதி வருகிறேன். அதன் ஐடி http://thenoos.blogspot.in . இதை க்ளிக் செய்தால் எல்லாப் பலகாரங்களின் படங்களையும் பார்க்கலாம். ஒவ்வொரு பலகாரத் தலைப்பின் கீழும் இணைப்புக் கொடுத்து இருக்கிறேன். செய்து பார்த்துவிட்டுச் சொல்லுங்கள்.
1. இலை அடை :-
****************************
http://thenoos.blogspot.com/2010/09/ilai-adai.html
தேவையானவை :-
இட்லி அரிசி - 2 ஆழாக்கு
துருவிய தேங்காய் - 1 கப்
தூள் வெல்லம் - 1/2 கப்
உப்பு - 1 சிட்டிகை
வாழை இலை - 2
பலாச்சுளைத் துண்டுகள் - 1 கப் ( விருப்பப்பட்டால்)
செய்முறை :-
அரிசியை நன்கு கழுவி 2 மணி நேரம் ஊறவைக்கவும். நன்கு மசிய அரைக்கவும். உப்பு சேர்க்கவும். ஒரு காட்டன் துணியில் மாவை கொட்டிவைத்தால் அதிகப்படியான தண்ணீரை எடுத்து விடும். தேங்காயையும் வெல்லத்தையும் கலக்கவும். இலையை சம துண்டுகளாக வெட்டவும். இலையில் மாவை மெல்லிய தகடாக தட்டவும். அதில் தேங்காய் வெல்லக் கலவையை பரப்பவும். விருப்பப்பட்டால் பலாச்சுளைதுண்டுகளைத் தூவவும். ரெண்டாக மடித்து ஒட்டவும். ஆவியில் 15 நிமிடங்கள் வேகவைக்கவும். வாழை இலைகளை எடுத்துவிட்டு மாலைச் சிற்றுண்டியாகப் பரிமாறவும். ப்ளைன் இலை அடைக்கு வெறும் தேங்காய் மட்டும் தூவி செய்யவும். இதற்குத் தொட்டுக் கொள்ள கதம்பச் சட்னி நன்றாக இருக்கும்.
1. இலை அடை :-
****************************
http://